ஜோதி அரோரா

எழுத்தாளர்

ஜோதி அரோரா(Jyoti Arora) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். யூ கேம் லைக் ஹோப்(2017) மற்றும் லெமன் கேர்ள் ஆகிய நூல்களின் முலம் பரவலாக அறியப்படுகிறார். இவரின் படைப்புகள் புதுதில்லியின் முன்னாள் முதலமைச்சர் சீலா தீக்‌சித் மற்றும் மேனகா காந்தி ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டது.[1]

ஜோதி அரோரா
தொழில்  எழுத்தாளர்
வகைபுனைவு; ஊக்கப்படுத்துதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள் யூ கேம் லைக் ஹோப் (2017); லெமன் கேர்ள் (2014)
இணையதளம்
jyotiarora.com

சுயசரிதை

தொகு

ஜோதி மூன்று வயதாக இருக்கும் போது அவருக்கு இரத்த அழிவுச் சோகை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் இவரது பள்ளிப்படிப்பு இடையில் நின்றது.[2] பின்பு சுயமாக கற்று முதுகலை ஆங்கிலம் மற்றும் பயன்பாட்டு உளவியல் பயின்றார். இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.இவர் காசியாபாத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.[3] 2007 ஆம் ஆண்டில் சார்பிலா எழுத்தாளராக பணியினைத் துவங்கினார். 2011 இல் இவரின் முதல் புதினம் (இலக்கியம்)வெளியானது. இவரின் அனைத்து நூல்களும் காதலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

நூற் பட்டியல்

தொகு
  • யூ கேம் லைக் ஹோப் (2017)
  • லெமன் கேர்ள் (2014)

சான்றுகள்

தொகு
  1. "How author Jyoti Arora hasn't let thalassemia or Twitter trolls get in her way". The New Indian Express: Edexlive. http://www.edexlive.com/people/2017/dec/12/if-rape-and-abuse-is-a-reality-then-there-are-instances-were-women-have-taken-advantage-too-author-1735.html. 
  2. "Thalassemia Could Not Stop Her from Achieving Her Dream of Becoming a Novelist. Meet This Dynamo". The Better India. பார்க்கப்பட்ட நாள் 2 September 2015.
  3. "Jyoti Arora Interview – Lemon Girl Book". WriterStory. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_அரோரா&oldid=2578274" இலிருந்து மீள்விக்கப்பட்டது