ஜோன்ஸ் மகலியா
ஜோன்ஸ் மகலியா, இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் அசாமிய மொழித் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவர் முதலில் தயாரித்து, இயக்கிய தூரணிர் ரங் என்ற திரைப்படம் 1979ஆம் ஆண்டில் வெளியானது. இவரது அடுத்த திரைப்படமான பகாகர் துபரீயா என்ற திரைப்படம் பெருவெற்றி பெற்றது.
ஜோன்ஸ் மகலியா জন্ছ মহলীয়া Jones Mahalia | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் |
பிள்ளைகள் | ஜெர்ரி மகலியா |
இவர் போடோ மொழியிலும் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். மகாசமர் என்ற திரைப்படமே இவர் இயக்கிய இறுதித் திரைப்படம்.
வாழ்க்கைக்குறிப்பு
தொகுஇவர் இந்திய மாநிலமான அசாமின் சோணித்பூர் மாவட்டத்தில் உள்ள திப்லோஙா என்ற ஊரில், 1946ஆம் ஆண்டின் நவம்பர் முதலாம் நாளில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் பூயாங் மகலியா, நுமலி மகலியா ஆகியோர் ஆவர். இவர் சூத்தியா உயர்நிலைப்பள்ளியில் படித்து, பின்னர் குவாஹாட்டியில் உள்ள ஆரிய வித்யாபீடம் என்ற கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இவரது மகன் ஜெர்ரி மகலியா இசையமைப்பாளராகி உள்ளார். ஜோன்ஸ் 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி ஆறாம் நாளில் இறந்தார்.[2]
திரைத்துறை
தொகுஇவர் ஒன்பது ஆவணப்படங்களையும் தயாரித்தார். பின்னர், பிரதிகாத் என்ற அசாமிய நாடகத்தை தூர்தர்ஷனில் வழங்கினார்.
சலச்சித்ர்
தொகு- தூரணிர் ரங் (1979)
- பஹாகர் துபரியா (1984)
- யுகாந்தரர் தேஜால் புவா (2000)
- ரணாங்கன்
- மகாசமர் (2012)[3]
நாடகங்கள்
தொகு- அனேக் புலர் சுர்பி
- சக்ரபேஹு
- சுரங்கர் சேஷத்
- காலரத்ன
- ஆப்பரேசன் டிராக்ச்
- காத்-ப்ரதிகாத்
- ஜீவன் ஜோனாக்
- ஹார்மொனி நார்த் ஈஸ்ட்[3]
சான்றுகள்
தொகு- ↑ Prantik Deka (16 February 2016). "Jones Mahalia : Life and Work". KothaSobi. பார்க்கப்பட்ட நாள் 2 March 2016.
- ↑ "Jones Mahalia passes away". The Assam Tribune. 6 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2016.
- ↑ 3.0 3.1 "Filmmaker passes away". The Telegraph. 6 Februwary 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)