ஜோன் டெனிஸ் மோரியார்டி

ஜோன் டெனிஸ் மோரியார்டி (Joan Denise Moriarty) (இறப்பு: 1992 சனவரி 24) இவர் ஓர் ஐரிஷ் பாலே நடனக் கலைஞரும், நடன இயக்குனரும், பாலே ஆசிரியரும், பாரம்பரிய ஐரிஷ் நடனக் கலைஞரும் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார். அயர்லாந்தில் தொழில்முறை அல்லாத மற்றும் தொழில்முறை பாலே இரண்டின் வளர்ச்சியிலும் இவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

ஜோன் டெனிஸ் மோரியார்டி
எல் எல் டி
இறப்பு(1992-01-24)24 சனவரி 1992
தேசியம்ஐரிஷ்
பணிபாலே ஆசிரியர், பாலே நிறுவன இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1933 முதல் 1992 வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள் தி பிளேபாய் ஆஃப் தி வெஸ்டர்ன் வேர்ல்ட்
பாணிபாரம்பரிய பாலே, ஐரிஷ் ஸ்டெப் நடனம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மோரியார்டியின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவரது பிறந்த ஆண்டு 1910 மற்றும் 1913 க்கு இடையில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. இவர் பிறந்த இடமும் தெரியவில்லை, நாடு கூட நிச்சயமற்றது. இவர் மைக்கேல் அகஸ்டஸ் மோரியார்டி ( ஸ்டோனிஹர்ஸ்ட் கல்லூரியின் பழைய மாணவர் மற்றும் சர் ஆர்தர் கோனன் டோயலின் சமகாலத்தவர்) மற்றும் அவரது மனைவி மரியன் (என்கிற மெக்கார்த்தி) ஆகியோரின் மகளாக வளர்ந்தார்; அயர்லாந்தில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியான ஜான் பிரான்சிஸ் மோரியார்டி இவரது மாமா ஆவார். மோரியார்டி முதலில் மல்லோவின் கவுண்டி கார்க்கிலிருந்து வந்தவர். அங்கு இவரது தாத்தா ஜான் மோரியார்டி ஒரு வெற்றிகரமான வழக்குரைஞராக இருந்தார் .

பயிற்சி தொகு

மோரியார்டி இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டார். ஒருவேளை லீட்ஸ் அல்லது லிவர்பூலில் இருக்கலாம். 1930களில் இவர் அங்கு வசித்து வந்தார். டேம் மேரி ராம்பர்ட்டிடம் தனது இளம் வயதிலேயே பாலேவைப் படித்தார். ராம்பர்ட் பள்ளியில் இவர் எவ்வளவு காலம் பயிற்சியிலிருந்தார் என்பது தெரியவில்லை. ஏனெனில் மாணவர்களின் பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால் கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளது. [1] ஆனால் அங்கு இவரது பயிற்சி டேம் நினெட் தி வலோயிசு என்பவரால் குறிப்பிடப்பட்ட்டுள்ளது .

இவர் ஒரு திறமையான ஐரிஷ் நடனக் கலைஞராகவும் மற்றும் பாரம்பரிய இசைக்கலைஞராகவும் இருந்தார். மேலும் 1931 ஏப்ரல் 24, 1அன்று பிரித்தனின் ஐரிஷ் நடனக் கலைஞரானார். இவர் நீச்சல் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒரு சமூக மற்றும் கலாச்சார அமைப்பான கேலிக் லீக்கின் லிவர்பூல் கிளையில் உறுப்பினராக இருந்தார். [1]

விருதுகள் தொகு

இவரது ஆரம்ப நடனம் மற்றும் இசை விருதுகள் பின்வருமாறு:

  • 1931 லண்டன்: லண்டன் ஐரிஷ் ஸ்டெப் டான்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஐரிஷ் ஸ்டெப்டான்சர் தங்க பதக்க வெற்றியாளர் .
  • 1932 டப்ளின்: டெயில்டீன் விளையாட்டுகளில் தனி நடனம் மிகவும் பாராட்டப்பட்டது
  • 1933 கில்லர்னி : தனி நடன போட்டிகளில் வென்றுள்ளார்.
  • 1933: மோர்கேம்பே மற்றும் லங்காஷயரில் ஹெய்ஷாமில் நடந்த ஸ்காட்ஸ் சேகரிப்பு மற்றும் ஹைலேண்ட் விளையாட்டுகளில் தனி நடனப் போட்டியில் பங்கேற்றார் [2]

அயர்லாந்துக்குத் திரும்புதல் தொகு

1933 இலையுதிர்காலத்தில், இவர் தனது குடும்பத்தினருடன் கவுண்டி கார்க்கில் உள்ள சொந்த மல்லோவுக்குத் திரும்பினார். 1934ஆம் ஆண்டில், இவர் தனது முதல் நடனப் பள்ளியை அங்கு அமைத்தார். 1938 முதல் கார்க்கில் கிரெக் ஹால் மற்றும் வின்ட்சர் பள்ளியில் வாராந்திர வகுப்புகளையும் வழங்கினார். 1930களில் இவர் கார்க் ஃபைஸ், பாரம்பரிய நடனம் மற்றும் இசையை மையமாகக் கொண்ட வருடாந்திர கலைப் போட்டிகளில் பங்கேற்றார், ஐரிஷ் படி-நடனம், வார் பைப்ஸ் மற்றும் ஓபராடிக் தனி பாடல் ஆகியவற்றில் பங்கேற்றார். இவர் பல்வேறு பொது இசை நிகழ்ச்சிகளில் நடனக்களை நிகழ்த்தினார். குறைந்தது இரண்டு ஒளிபரப்புகளைக் கொடுத்தார். 1938ஆம் ஆண்டில், கார்க்கில் பல்கலைகழகக் கல்லூரியில் ஐரிஷ் இசையின் விரிவுரையாளரான சீன் நீசன், ஒரு கோடைகால பள்ளியில் இவரை நிகழ்த்த அழைக்கப்பட்டார். இது ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்காக இசைத் துறை ஏற்பாடு செய்தது. [1]

இறப்பு தொகு

இவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் கார்க், பாலே நிறுவனத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார். நிகழ்ச்சிகளை மாவட்டத்தின் நகரங்களுக்கு கொண்டு வந்தார். இவர் 1992 சனவரி 24 அன்று டப்ளினில் இறந்தார். [3] [4]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Aideen Rynne: "Joan Moriarty's Early Years", in: Ruth Fleischmann (Ed.): Joan Denise Moriarty: Founder of Irish National Ballet, Mercier Press, Cork 1998, pp. 117-21.
  2. Ruth Fleischmann (Ed.): Joan Denise Moriarty, Ireland's First Lady of Dance, Cork, 2012, p. 75. Certificates, medals, newspaper cuttings in her personal scrapbook are among the Moriarty Collection, Cork City Central Library, Grand Parade, Cork.
  3. See Declan Hassett, "Tribute to the First Lady of Dance", Cork Examiner, 1 February 1992, pg. 11
  4. Carolyn Swift, "End of an Era", Dance News Ireland, Spring 1992, p. 12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_டெனிஸ்_மோரியார்டி&oldid=3214306" இலிருந்து மீள்விக்கப்பட்டது