ஜோயோதி பாசு

ஜோயோதி பாசு (பிறப்பு 17 திசம்பர் 1957) இந்திய உயிர்வேதியியலாளர், உயிரணு உயிரியலாளர் மற்றும் போசு நிறுவனத்தில் மூத்த பேராசிரியர். செங்குருதியணுயின் சவ்வு கட்டமைப்பு குறித்த அவரது ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். இந்தியாவின் மூன்று பெரிய அறிவியல் கழகங்களிலும் (தேசிய அறிவியல் கழகம், இந்தியா, இந்திய அறிவியல் கழகம், இந்திய தேசிய அறிவியல் கழகம்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளராக (fellow) உள்ளார். இந்திய வேதி உயிரியல் சமூகத்திலும் ஆய்வாளராக உள்ளார். இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறை இவருக்கு 2002இல் பணிவாழ்வு முன்னேற்றத்திற்கான தேசிய உயிர் அறிவியல் (N-BIOS) விருது வழங்கி உள்ளது. இது இந்திய அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும்.[1]

ஜோயோதி பாசு
பிறப்பு17 திசம்பர் 1957 (1957-12-17) (அகவை 67)
மேற்கு வங்காளம், இந்தியா
வாழிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வு நெறியாளர்
அறியப்படுவதுஇடமளிக்கும் பெருவிழுங்கியுடன் பூஞ்சை நுண்ணுயிரியின் இடைவினை குறித்த ஆய்வுகள்
விருதுகள்
  • 1989 INSA இளம் அறிவியலாளர் பதக்கம்
  • 2002 பணிவாழ்வு முன்னேற்றத்திற்கான தேசிய உயிர் அறிவியல் (N-BIOS) விருது

வாழ்க்கை வரலாறு

தொகு
 
போசு நிறுவனம்.
 
பருல் சக்கரவர்த்தி - போசு நிறுவனத்தில் பாசுவின் வழிகாட்டு ஆசிரியர்

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் 1957ஆம் ஆண்டில் திசம்பர் 17 அன்று பிறந்தார்.[2] ஜோயோதி பாசு தனது சிறப்பு இளங்கலை வேதியியல் பட்டத்தை கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைகழகத்திலும் முதுகலைப் பட்டத்தை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[3] தொடர்ந்து போசு நிறுவனத்தில்[4][5] பருல் சக்கரவர்த்தியின் வழிகாட்டுதலில் முனைவர் படிப்பிற்கான ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் கொல்கத்தா பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து முனைவர் பட்டத்திற்கு பிற்பட்ட ஆய்வுகளை பெல்ஜியத்தின் லியாழ்ச் பல்கலைக்கழகத்தில் ழான்-மாரீ குய்சென் ஆய்வகத்தில் மேற்கொண்டார். இங்கு பூஞ்சை நூண்ணுயிரியின் கலப்பிரிவினை குறித்தும் பூஞ்சை நுண்ணுரியிரியின் புரதைச்சர்க்கரைடு நொதிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். 1991இல் போசு நிறுவனத்தில் வேதித் துறையில் பேராசிரியையாக இணைந்தார்.[6][7] சூன், 2018இல் பணி ஓய்வு பெற்றார். கொல்கத்தாவில் மாதப் சாட்டர்ஜி தெருவில் வசித்து வருகிறார்.[8]

சர்ச்சைகள்

தொகு

அறிவியல் ஆய்வறிக்கைகளில் இவர் பிறழ்ந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இவை குறித்து செய்தித் தாள்களிலும் வந்துள்ளன. ஒரே போலுள்ள படிமங்களை பயன்படுத்தியதாக இரு அறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மற்றும் இரண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இது போன்ற பல ஒழுங்கீனங்கள் நடந்துள்ளதாக பப்பியர் இதழ் பட்டியலிட்டுள்ளது.[9] பாசு தமது சில ஆய்வறிக்கைகளைத் திரும்பப் பெற்றுள்ளார்.[10] தடுப்பாற்றலியல் ஆய்விதழில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை ஒன்றும் இதில் அடங்கும்.[11][12]

ஆய்வுகள்

தொகு
 
செங்குருதி உயிரணுக்கள்

பாசுவின் ஆய்வுகள் பூஞ்சை நுண்ணுயிரியின் (mycobacteria) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் குறித்து இருந்தது.[13] அவரது பணிவாழ்வின் துவக்க கட்டங்களில் செங்குருதியணுக்களின் சவ்வுக் கட்டமைப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் அணுக்கரு உள்ள பாலூட்டி கலன்களின் தன்மடிவு குறித்த புரிதலை விரிவுபடுத்துவதாக இருந்தன. அணுக்கரு தவறிய செங்குதி அணுக்களின் உடற்செயலியல் குறித்தும் இந்த ஆய்வுகள் இருந்தன.[3] இவரது முனைவர் ஆய்வு வழிகாட்டு ஆசிரியை பருல் சக்கரவர்த்தியுடன் நடத்திய ஆய்வுகளில் உயிரணுக்களின் அணுச்சுவர் கட்டுதலில் கொழுப்பு அமிலங்களின் உயிர்ப்பொருள் தொகுப்புத் தடவழிகளைக் குறித்ததாக இருந்தது.[14] ஆக்சிஜனேற்ற அயற்சியுற்ற அல்லது முதிர்ந்த செங்குருதி அணுக்களை குருதியோட்டத்திலிருந்து நீக்கினால் உயிரணு மடிவு ஏற்படும் என்பதை முதலில் முன்மொழிந்த அறிவியலாளர் என்று போசு அறியப்படுகிறார். பின்னர் இவர் பூஞ்சை காசநோய் குறித்த உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் பெருவிழுங்கி தன்மடிவு குறித்தும் இடமளிக்கும் உயிரணுவின் சமிக்ஞைகளுக்கும் தடுப்பாற்றல் எதிர்வினை குறித்த தொடர்புகளைக் குறித்தும் இருந்தன. 2007இல் பாசுவும் அவரது மாநிலக் கல்லூரி தோழர் மணிகுன்டல குண்டு உடன் இணைந்து நடத்திய ஆய்வுகள் பூஞ்சை காசநோய் புரதத்தை அடையாளம் காணவும் இடமளிக்கும் தடுப்பாற்றல் அமைப்பினை வலுவிழக்கச் செய்வதை புரிந்து கொள்ளவும் உதவின.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2016. Archived from the original (PDF) on 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  2. "Fellow profile". Indian Academy of Sciences. 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2017-12-06.
  3. 3.0 3.1 "Indian fellow - Joyoti Basu". Indian National Science Academy. 2017-12-06. Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-12-06.
  4. ORCID (2017-12-09). "Joyoti Basu (0000-0002-0497-9581) - ORCID". orcid.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  5. "LIST of Alumni of BOSE INSTITUTE" (PDF). Bose Institute. 2017-12-09. Archived from the original (PDF) on 2017-12-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  6. "Joyoti Basu on Loop". Loop (in ஆங்கிலம்). 2017-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  7. "Joyoti Basu -Bose Institute - Academia.edu". boseinst.academia.edu (in ஆங்கிலம்). 2017-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  8. "NASI fellows". National Academy of Sciences, India. 2017-11-12. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-11-12.
  9. "Image duplication: Group at Bose Institute has two papers retracted, two corrected, and many listed on Pubpeer". 2018-08-09.
  10. "Author objects to retraction for not "faithfully represented" immunology figures". Retraction Watch (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.
  11. Basu, Joyoti; Kundu, Manikuntala (2015-08-15) (in en). Retraction: TLR4-Dependent NF-κB Activation and Mitogen- and Stress-Activated Protein Kinase 1-Triggered Phosphorylation Events Are Central to Helicobacter pylori Peptidyl Prolyl cis-, trans-Isomerase (HP0175)-Mediated Induction of IL-6 Release from Macrophages. https://pubpeer.com/publications/A4594F49CBF5D0D5DA5D717DF53019. பார்த்த நாள்: 2018-05-02. 
  12. Basu, Joyoti; Kundu, Manikuntala (2015-08-15). "Retraction: TLR4-Dependent NF-κB Activation and Mitogen- and Stress-Activated Protein Kinase 1-Triggered Phosphorylation Events Are Central to Helicobacter pylori Peptidyl Prolyl cis-, trans-Isomerase (HP0175)-Mediated Induction of IL-6 Release from Macrophages" (in en). The Journal of Immunology 195 (4): 1902. doi:10.4049/jimmunol.1501299. பப்மெட்:26473200. 
  13. "Bose Institute - Joyoti Basu". www.jcbose.ac.in. 2017-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  14. D. P. Burma; Maharani Chakravorty (2011). From Physiology and Chemistry to Biochemistry. Pearson Education India. pp. 247–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3220-5.
  15. "Hope for a new TB cure, Kolkata scientists identify 'villain' protein". archive.indianexpress.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 9 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயோதி_பாசு&oldid=4053858" இலிருந்து மீள்விக்கப்பட்டது