ஜோர்டானின் தலால்
தலால் பின் அப்துல்லா ( 1909 பிப்ரவரி 26 முதல் 1972 ஜூலை 7 வரை) இவர் ஜோர்டான் மன்னர் ஆவார். இவரது தந்தை அரசர் முதலாம் அப்துல்லா, 1951 ஜூலை 20 அன்று படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர் தலால் பின் அப்துல்லா மன்னராகப் பதவியேற்றார். ஆனாலும் மனநிலைப் பிறழ்வு காரணமாக பதின்மூன்று மாதங்களே ஆட்சி செய்த தலால் 1952, ஆகஸ்ட் 11 அன்று பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தலாலின் கூற்றுப்படி, அவர் முகஹம்மது நபியின் 39 வது தலைமுறை நேரடி வம்சாவளியாக இருந்தார். இது 1921 முதல் ஜோர்டானை ஆண்ட அசிமைட் வம்சமாகும்.
தலால் மக்காவில் முதலாம் அப்துல்லா மற்றும் அவரது மனைவி முஸ்பா பின் நாசரின் மூத்த மகனாகப் பிறந்தார். முதலாம் அப்துல்லா 1916 இல் உதுமானியப் பேரரசிற்கு எதிரான முதலாம் உலகப் போரின்போது பெரும் அரபு கிளர்ச்சியை வழிநடத்திய மக்காவின் ஷெரீப் ஹுசைன் பின் அலியின் மகனாவார் . உதுமானியர் ஆட்சியை நீக்கிய பின்னர், அப்துல்லா 1921 இல் திரான்ஸ்ஜோர்தான் அமீரகத்தை நிறுவினார். பின்னர் இது பிரித்தானிய ஆட்சிப் பகுதியாக மாறியது, தலால் அதன் கீழ் அமிராக ஆட்சி செய்தார். தந்தை அப்துல்லா இல்லாதபோது, தலால் சிறுவயதில் தனது தாயுடன் தனியாகக் கழித்தார். தலால் அம்மானில் தனியார் கல்வியைப் பயின்றார், பின்னர் 1927 இல் திரான்ஸ்ஜோர்தனின் அரபு படையணியில் இரண்டாவது அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர் அவர் சைப்ரசு தீவுக்கு நாடுகடத்தப்பட்டு கெஜாசிற்கு வெளியேற்றப்பட்ட தனது தாத்தாவாகிய மன்னர் செரீப் குசேனுக்கு உதவியாளரானார். 1948 வாக்கில், தலால் அரபு படையணியில் ஒரு தளபதியானார்.
1946 இல் அப்துல்லா சுதந்திரம் கோரினார், அமீரகம் காசெமித் ஜோர்தானின் இராச்சியமானது. ஜோர்தானின் மன்னராக தலாலின் தந்தை இருந்ததால் தலால் மகுடத்திற்குரிய இளவரசாவார். 1951 இல் எருசலேமில் அப்துல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர் தலால் மன்னரானார். 1952 ஆம் ஆண்டில் ஜோர்டானின் நவீன அரசியலமைப்பை உருவாக்கி, அவரது ராச்சியயத்தை ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக மாற்றியமைத்ததே அரசர் என்ற வகையில் தலாலின் மிகவும் மதிப்பிற்குரிய சாதனை ஆகும். மனநோய் காரணமாக பாராளுமன்றம் மூலம் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை அவர் பதின்மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே ஆட்சி செய்தார்- அவருக்குமனப்பித்து ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டது. தலால் தனது வாழ்நாள் முழுவதையும் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் கழித்தார், 1972 ஜூலை 7 அன்று இறந்தார். அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் ஹுசைன் பதவிக்கு வந்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஉதுமானிய நாடாளுமன்றத்தில் மக்காவின் அரபு துணைத் தலைவரான அப்துல்லா மற்றும் அவரது மனைவி முஸ்பா பின் நாசர் ஆகியோரின் மூத்த மகனாக மக்காவில் பிறந்தார்.
சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள பிரித்தானிய இராணுவத்தின் இராணுவக் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அவர் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார், அதில் இருந்து 1929 இல் அரபு படையின் குதிரைப்படை படைப்பிரிவில் இரண்டாவது அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது பட்டம் பெற்றார். அவரது படைப்பிரிவு ஜெருசலேமில் உள்ள ஒரு பிரித்தானியப் படைப்பிரிவு மற்றும் பாக்தாத்தில் உள்ள ராயல் பீரங்கிகளுடன் இணைக்கப்பட்டது .[2]
ஆட்சி
தொகுஜெருசலேமில் தனது தந்தை முதலாம் அப்துல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர் தலால் ஜோர்தானிய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் தாத்தாவுடன் வந்த இவரது மகன் ஹுசைனும் கிட்டத்தட்ட படுகாயமடைந்தார். 1951 ஜூலை 20 அன்று, இளவரசர் ஹுசைன் மற்றும் அவரது தாத்தா மன்னர் முதலாம் அப்துல்லாவுடன் அல்-அக்ஸா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த ஜெருசலேமுக்குச் சென்றார். அரசர் இஸ்ரேல் அரசுடனான உறவை சீராக்கக்கூடும் என்று அஞ்சி, முதலாம் அப்துல்லா கொல்லப்பட்டர். ஆனால் அந்த தாக்குதலில் 15 வயதான இளவரசர் ஹுசைன் உயிர் தப்பினார்.
ஜோர்டானின் காசெமித் இராச்சியத்திற்கான தாராளமயமாக்கப்பட்ட அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் தனது குறுகிய ஆட்சியின் போது பொறுப்பேற்றார், இது அரசாங்கத்தை கூட்டாகவும், அமைச்சர்கள் தனித்தனியாகவும் ஜோர்தானிய பாராளுமன்றத்திற்கு கடமைப்பட்டவர்களாகவும் ஆக்கியது. 1952 ஜனவரி 1 அன்று அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. ஜோர்தானுக்கும் அண்டை அரபு நாடுகளான எகிப்து மற்றும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் முன்னர் இருந்த உறவுகளை மென்மையாக்க மன்னர் தலால் முயற்சி செய்த்தாகக் கருதப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1934 ஆம் ஆண்டில், தலால் தனது உறவினரான ஜெய்ன் அல்-ஷரஃப் தலாலை மணந்தார், அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்தனர் :
குறிப்புகள்
தொகு- ↑ "Ex‐King Talal of Jordan Dies; Abdicated in '52 in Favor of Son". New York Times. Associated Press: p. 51. July 9, 1972. https://www.nytimes.com/1972/07/09/archives/exig-tat-t-of-jod-di-i-abdiated-in-52-in-favor-of-soni.html?_r=0. பார்த்த நாள்: 11 April 2017.
- ↑ Jordan Royal Ark