ஜோர்தானில் சுற்றுலா
ஜோர்தானில் சுற்றுலா (ஆங்கிலம்: Tourism in Jordan ) ஜோர்டான் மத்திய கிழக்கில் ஒரு இறையாண்மை கொண்ட அரபு நாடு. ஜோர்தான் தெற்கே சவுதி அரேபியா, வடகிழக்கில் ஈராக், வடக்கே சிரியா, மேற்கில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. ஜோர்தான் மூலோபாய ரீதியாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் குறுக்கே அமைந்துள்ளது. தலைநகரான அம்மான் ஜோர்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மற்றும் நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும்.
உலகளாவிய புகழ்பெற்ற பெட்ரா (1985 முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம், மற்றும் உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்று), ஜோர்டான் நதி, நெபோ மலை, மடாபா, ஏராளமான இடைக்கால மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் பழுதடையாத இயற்கை இடங்கள் ( வாடி இரம் மற்றும் ஜோர்டானின் வடக்கு மலைப் பகுதி போன்றவை) போன்ற வரலாற்று தளங்களை பார்வையிடுவது அதன் முக்கிய சுற்றுலா தலங்களில் அடங்கும். அத்துடன் கலாச்சார மற்றும் மத தளங்கள் மற்றும் மரபுகளை அவதானித்தல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
ஜோர்தான் சுகாதார சுற்றுலாவையும் வழங்குகிறது, இது சாக்கடல் பகுதி, கல்வி சுற்றுலா, நடைப் பிரயாணம், இசுநோர்கெலிங் மற்றும் இசுகூபா மூழ்கல் ஆகியவற்றில் அகபாவின் பவளப்பாறைகள், பாப்-கலாச்சார சுற்றுலா மற்றும் ஜோர்தானின் நகரங்களில் வணிகச் சுற்றுலா ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் வந்த தோராயமாக 4.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரபு பயணிகள். முக்கியமாக வளைகுடாவின் அரபு நாடுகளிலிருந்து, தங்கள் விடுமுறைகளை ஜோர்தானில் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.[1]
முக்கிய சுற்றுலா தலங்கள்
தொகுநபேடியர்களின் இல்லமான வாடி மூசாவில் உள்ள பெட்ரா மலையில் செதுக்கப்பட்ட ஒரு முழுமையான நகரம் உள்ளது. இங்குள்ள பாறைகள் பிரமாண்டமானவை மற்றும் வண்ணமயமானவை, இவை பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. மேலும் பண்டைய நகரத்தின் நுழைவாயில் மலையில் 1.25 கி.மீ குறுகலான பள்ளத்தாக்கு ஒன்று உள்ளது. இது சிக் என்று அழைக்கப்படுகிறது. நகரத்தில் பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன, இதில் அல் காஸ்னே உட்பட அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இது "கருவூலம்" என்று அழைக்கப்படுகிறது. இது "உலகின் புதிய ஏழு அதிசயங்களில்" ஒன்றாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ராவில் ஆர்வமுள்ள பிற முக்கிய தளங்கள் தேவாலயம், ரோமன் திரையரங்கம், அரச குடும்ப கல்லறைகள், தியாகத்தின் உயர் இடம் ஆகியவை அடங்கும். 1812 ஆம் ஆண்டில் சுவிஸ் ஆய்வாளர் ஜோஹன் லுட்விக் புர்க்ஹார்ட் என்பவரால் பெட்ரா மேற்கத்திய உலகிற்காக மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக 1985 இல் பொறிக்கப்பட்டது.
உம் கைஸ் என்ற பாழடைந்த ஹெலனிஸ்டிக் கால ரோமானிய நகரம் ஒன்று உள்ளது. ஜெராஷ் அதன் பண்டைய ரோமானிய கட்டிடக்கலைக்கு பிரபலமானது, கொலோனட் வீதிகள், கொரிந்திய வளைவுகள், வெளிப்புற ரோமன் அரங்குகள் மற்றும் ஓவல் பிளாசா ஆகியவை அடங்கும்.
2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்ட உம் அர்-ராசாஸ், இந்த இடிபாடுகள் ரோமன், பைசாந்தியன் மற்றும் ஆரம்பகால முஸ்லீம் கட்டிடக்கலைகளின் கலவையைக் காட்டுகின்றன. அதன் பொக்கிஷங்களில் நாட்டின் மிகப்பெரிய தேவாலய மொசைக் தளம் உள்ளது; தளம் முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் புதிய கண்டுபிடிப்புகள் மேலும் சாத்தியமாகும்.