ஜோஸ் பிராங்க்ளின்

இந்திய இசையமைப்பாளர்

ஜோஸ் பிராங்க்ளின் (Jose Franklin, பிறப்பு 27 நவம்பர் 1989) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான சீமத்துரை திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். [1] [2]

ஜோஸ் பிராங்க்ளின்
பிறப்பு27 நவம்பர் 1989 (1989-11-27) (அகவை 34)
பிறப்பிடம்இந்திய ஒன்றியம், கேரளம், திருவனந்தபுரம்
இசை வடிவங்கள்Film score
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)
  • குரல்
  • இசைப்பலகை
இசைத்துறையில்2016–தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்
இணையதளம்josefranklin.com

தொழில் தொகு

ஜோஸ் பிராங்க்ளின் தமிழ் திரையுலகில் பணியாற்றும் இசை இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களுக்கு பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை மேற்கொள்கிறார். 2018 ஆம் ஆண்டில் வெளியான வர்சா பொல்லம்மா மற்றும் கீதன் பிரிட்டோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சந்தோஷ் தியாகராஜன் இயக்கிய சீமத்துரை என்ற படத்திற்கு இசையமைத்தார். 2019 ஆம் ஆண்டில் வெளியான செல்வ கண்ணன் இயக்கிய நெடுநல்வாடை என்ற படத்திற்கும் இவர் இசையமைத்தார். [3] [4] [5] [6]

பிஜாய் லோனா எழுதி இயக்கிய மிராக்கிள் பேபிஸ் என்ற 2014 ஆண்டு வெளியான தமிழ் குறும்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். அஜயன்பாலா மற்றும் கேபிள் சங்கர் எழுதிய 6 அத்தியாயம், ராபர்ட் ராஜ் இயக்கிய காலம் போன்ற பிற படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். [7] [8] [9]

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு தொகு

இசையமைப்பாளராக
ஆண்டு பெயர் மொழி குறிப்புகள்
2016 களம் தமிழ் பின்னணி இசை
2018 6 அத்தியாயம் தமிழ் சித்திராம் கொல்லுதாடி அத்தியாயத்திற்கான பின்னணி இசை
2018 சீமத்துரை தமிழ்
2019 நெடுநல்வாடை தமிழ்
2020 என் பெயர் ஆனந்தன் தமிழ்
2021 பேய் இருக்க பயமேன் தமிழ்
2021 ஏகம் தெலுங்கு வரவிருக்கும்
2021 ஜங்கில் [10] [11] தமிழ் / தெலுங்கு வரவிருக்கும் படம்
2021 யாரோ தமிழ் வரவிருக்கும்
பாடகராக
பாடல் படம்
முதல் முறை சீமத்துரை

குறிப்புகள் தொகு

 

  1. Seemathurai Review {2/5}: This rural romance, seems to be trying to another Kalavaani, but the a clichéd treatment works against it, பார்க்கப்பட்ட நாள் 4 July 2020
  2. "'Seemathurai' movie review: A middling love story that never hits its intended highs". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  3. "Music Review: Nedunalvaadai – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  4. "'Nedunalvaadai' movie review: Superlative performances elevate this rural drama". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  5. "Listen to Jose Franklin songs online, Jose Franklin songs MP3 download". Saregama. பார்க்கப்பட்ட நாள் 17 July 2020.
  6. "All you want to know about #JoseFranklin". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 July 2020.
  7. "Kollywood Music Director Jose Franklin Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  8. Kalam Movie Review {3/5}: Critic Review of Kalam by Times of India, பார்க்கப்பட்ட நாள் 4 July 2020
  9. "Jose Franklin". IMDb. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  10. "Vijay Antony releases first look of Vedhika's next – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  11. Ravi, Murali (30 June 2019). "Aadi Sai Kumar Superb Jungle First Look Poster". Tollywood (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.

வெளி இணைப்புகள் தொகு

IMDb இல் ஜோஸ் பிராங்க்ளின்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_பிராங்க்ளின்&oldid=3194671" இலிருந்து மீள்விக்கப்பட்டது