அஜயன் பாலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் வசித்து வரும் இவர் 6 அத்தியாயம் என்னும் படத்தொகையில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். ஆனந்த விகடனில் வெளியான "நாயகன்" மூலம் பரவலாக அறிமுகமானவர். ”மயில்வாகனன்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “பை சைக்கிள் தீவ்ஸ்” எனும் திரைக்கதையையும், “மார்லன் பிராண்டோ”வையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவர் எழுதிய “உலக சினிமா வரலாறு; மௌனயுகம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின்2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
வனயுத்தம், சென்னையில் ஒரு நாள், மனிதன் , தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து மைலாஞ்சி எனும் திரைப்ப்டத்தை தற்போது இயக்கி வருகிறார். மேலும் மதராசபட்டினம் ,தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் , வேட்டை, தேவி,வனமகன் ஆகியபடங்களீன் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.