வர்சா பொல்லம்மா

தென்னிந்திய நடிகை

வர்சா பொல்லம்மா (Varsha Bollamma) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படமான சதுரன் (2015) படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து யானும் தீயவன் (2017), கல்யாணம் (2018), சீமத்துரை (2018), மிடில்கிளாஸ் மெலடிஸ் (2020) உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

வர்சா பொல்லம்மா
Varsha Bollamma
சீமத்துரை இசை வெளியீட்டு விழாவில் வர்சா பொல்லம்மா, 2018
பிறப்புகுடகு மாவட்டம், கருநாடகம், இந்திய ஒன்றியம்[1]
படித்த கல்வி நிறுவனங்கள்மவுண்ட் கார்மல் கல்லூரி, பெங்களூர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

பொல்லம்மா கர்நாடகத்தின், குடகில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்தார். பெங்களூர் மவுண்ட் கார்மல் கல்லூரியில் நுண்ணுயிரியலில் பட்டம் பெற்றார். இவர் சரளமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளை பேச கற்றுக் கொண்டார்.

துவக்கத்தில் பொல்லம்மா ராஜா ராணியில் நஸ்ரியா நசீமின் உரையாடலின் டப்மாஷ் கானொளிகளுக்காக அறியப்பட்டார். [2] [3] [4] இவர் பிகில் (2019) படத்தில் கால்பந்து வீரராங்கனையாக நடித்தார். [5]

திரைப்படவியல் தொகு

குறியீடு
  இதுவரை வெளியிடப்படாத படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு.
2015 சதுரன் ஜனனி தமிழ் அறிமுக படம் [6]
2016 வெற்றிவேல் சுபா [7]
2017 இவன் யாரென்று தெரிகிறதா சாவித்ரி [8]
யானும் தீயவன் சௌமியா [9]
2018 கல்யாணம் ஷரி மலையாளம் மலையாள அறிமுகம் [10]
மந்தரம் சாரு [11]
96 பிரபாவதி தமிழ் [12]
சீமத்துரை பூராணி [13]
2019 பெட்டிக்கடை தங்கம் [14]
சூத்திரக்காரன் அஸ்வதி மலையாளம் [15]
பிகில் காயத்ரி சுதர்சன் தமிழ் [16]
2020 சூசி சூடங்கனே ஸ்ருதி தெலுங்கு [17]
ஜானு பிரபா தெலுங்கில் அறிமுகம் [18]
மிடில் கிலாஸ் மெலடி சந்தியா [19]
மானே நம்பர் 13 நான்சி கன்னடம் இருமொழி படம்; கன்னட அறிமுக [20]
13 ஆம் எண் வீடு தமிழ்

குறிப்புகள் தொகு

 

 1. Dundoo, Sangeetha Devi (2020-11-18). "Varsha Bollamma: I feel incomplete if I don't dub" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/varsha-bollamma-talks-about-her-new-telugu-film/article33124017.ece. 
 2. "Varsha Bollamma is here to stay". Deccan Chronicle. Archived from the original on 4 April 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2019.
 3. sunder, gautam (16 August 2015). "Dubsmash helped Varsha Bollamma get her dream debut". Deccan Chronicle. Archived from the original on 15 November 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
 4. "When a fun Dubsmash video fetched a project! - Times of India". The Times of India. Archived from the original on 20 May 2017. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
 5. "Actress Varsha Bollamma has THIS to say about 'Master' actors Vijay and Vijay Sethupathi - Times of India". The Times of India.
 6. "Sathuran Movie Review {2/5}: Critic Review of Sathuran by Times of India". The Times of India.
 7. Rangan, Baradwaj (23 April 2016). "Vetrivel: It takes a village..." The Hindu.
 8. "Who am I?". The Hindu. October 9, 2016.
 9. . 30 June 2017. 
 10. "Varsha Bollamma looks cute as a button at the audio launch of Kalyanam at Thiruvanthapuram". The Times of India. 7 February 2018. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 11. "Vijesh Vijay's 'Mandharam' will see Asif Ali in five looks". The Hindu. 28 September 2018. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 12. "Varsha Bollamma on working with Vijay Sethupathi in 96". Behindwoods. 27 July 2017. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 13. "Varsha Bollamma bags a meaty role". Deccan Chronicle. 4 November 2017. Archived from the original on 18 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 14. "Petti Kadai is part of cultural identity: Bharathiraja". Deccan Chronicle. 12 December 2018. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 15. "സൂത്രക്കാരൻ ഫസ്റ്റ് ലുക് പോസ്റ്റർ പുറത്തിറങ്ങി". CNN-News18. 14 January 2019. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 16. "Thalapathy Vijay's Bigil cast and crew, Atlee, Kathir, Varsha Bollamma attend a special screening". Times Now. 27 October 2019. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 17. "Choosi Choodangaane is a triangle love story that has many layers underneath: Varsha Bollamma". The Times of India. 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 18. "Watch: 'Jaanu' teaser suggests that it's faithful remake of '96'". The News Minute. 9 January 2020. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
 19. "Anand Deverakonda shares Varsha Bollamma's first-look as Sandhya from Middle Class Melodies - Times of India". The Times of India.
 20. "Bheema Sena Nala Maharaja and Manne Number 13 to premiere on Amazon Prime Video". The New Indian Express.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்சா_பொல்லம்மா&oldid=3194658" இலிருந்து மீள்விக்கப்பட்டது