ஞானக்குழந்தை
ஞானக்குழந்தை (Gnana Kuzhandhai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி புராணத் திரைப்படமாகும். ஈ.ரா. பழனிச்சாமி எழுதி கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பேபி சுதா, மாஸ்டர் ஸ்ரீதர், வெண்ணிற ஆடை நிர்மலா வி.எஸ்.ராகவன் ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.சுப்பையா, ஜெய் கணேஷ், லதா மற்றும் கே.ஏ.தங்கவேலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2] கே. வி. மகாதேவன் இசையமைக்க பாடல் வரிகளை கண்ணதாசன், ஏ. மருதகாசி, ஆலங்குடி சோமு, பழனிசாமி மற்றும் ராஜ கோபால் ஆகியோர் எழுதினர்[3]
ஞானக்குழந்தை | |
---|---|
இயக்கம் | கே. காமேஸ்வர ராவ் |
தயாரிப்பு | பி. எல். மோகன்ராம் அபிராமி கம்பைன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சுஜாதா |
வெளியீடு | சூன் 24, 1979 |
நீளம் | 4397 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://screen4screen.com/movies/gnana-kuzhandhai
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
- ↑ https://tamilsongslyrics123.com/movie/Gnanakkuzhanthai