ஞானம் (இதழ்)

(ஞானம் சஞ்சிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஞானம் (Gnanam) ஈழத்தில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாதாந்த இலக்கிய இதழ் ஆகும்.[1] இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஆவார்.[2] ஞானம் முதல் இதழ் 2000 ஜூனில் வெளியானது.[3] இதுவரை மாதம் தவறாமல் வெளிவருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பத்திகள் ஞானத்தில் வெளிவருகின்றன.[4]

ஞானம் (சிற்றிதழ்)
இதழாசிரியர்தி. ஞானசேகரன்
வகைஇலக்கியம்
இடைவெளிமாதம் ஒரு முறை
முதல் வெளியீடு2000 சூன்
நாடுஇலங்கை

ஞானம் 150ஆவது இதழ் ஈழப்போர் இலக்கியச் சிறப்பிதழாக 2012 நவம்பர் 25 இல் வெளியிடப்பட்டது[5]

தொடர்கள்

தொகு

கே. விஜயனின் படித்ததும் கேட்டதும், மானா மக்கீனின் ஓசையில்லா ஓசைகள் ஆகிய பகுதிகள் ஞானம் சஞ்சிகையில் நீண்ட காலமாகத் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.[6]

மின்னூல்

தொகு

ஒவ்வொரு மாதமும் ஞானம் சஞ்சிகையானது மின்னூல் வடிவிலும் ஞானத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினிலே வெளியிடப்படுகின்றது.[7] ஒரு சில இதழ்களை ஒருங்குறி வடிவிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. விரைவில் அனைத்து இதழ்களையும் ஒருங்குறி வடிவில் பெறலாம் என ஞானம் சஞ்சிகையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, சந்தாதாரர்களுக்கு ஞானம் மின்னூல் வடிவில் மின்னஞ்சலினூடாக அனுப்பி வைக்கப்படுகின்றது.[1]

கலந்துரையாடல் பக்கம்

தொகு

ஞானம் சஞ்சிகை பற்றிய கலந்துரையாடல்களுக்காக ஓர் இணையத்தளம் ஒன்றையும் ஞானம் ஆசிரியர் ஆரம்பித்துள்ளார்.[8] இவ்விணையத்தளத்தின் மூலம் வாசகர்கள் ஞானம் ஆசிரியரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 மயூரா அகிலன் (நவம்பர் 25, 2011). "மின்னஞ்சலில் ஈழத்து சிற்றிதழ்கள்". ஒன்இந்தியா. Retrieved நவம்பர் 11, 2012.
  2. "ஞானம்". ஜெயமோகன். அக்டோபர் 19, 2009. Retrieved நவம்பர் 11, 2012.
  3. "ஞானசேகரன், தி". விருபா. Retrieved நவம்பர் 11, 2012.
  4. "ஞானம் 2006.05". நூலகம். Archived from the original on 2016-03-04. Retrieved நவம்பர் 11, 2012.
  5. ஈழத்துப் போர்க்காலச் சிறப்பிதழ் ஞானம் 150ஆவது இதழ் வெளியீடு பரணிடப்பட்டது 2012-12-03 at the வந்தவழி இயந்திரம், தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 25, 2012
  6. "ஞானம் 2011.06". நூலகம். Archived from the original on 2016-03-04. Retrieved நவம்பர் 11, 2012.
  7. ["இதழ் இலக்கம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2007-10-07. Retrieved 2012-04-01. இதழ் இலக்கம் (ஆங்கில மொழியில்)]
  8. "gnanam.info வலைப்பதிவு". Archived from the original on 2010-01-14. Retrieved 2012-04-01.

வெளி இணைப்புகள்

தொகு
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானம்_(இதழ்)&oldid=4179457" இலிருந்து மீள்விக்கப்பட்டது