டாடாயியம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற ஒரு கலை இயக்கம். பலர் டாடாயியம் 1916ல் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச்சில் தொடங்கியது என்கின்றனர். அங்கிருந்து இவ்வியக்கம் செருமனிக்குப் பரவியது. ஆனால், நியூயார்க் டாடாயியத்தின் உச்சம் 1915 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்ற கருத்தும் உண்டு.[1] இவ்வியக்கம் முதன்மையாக காட்சிக்கலைகள், இலக்கியம், கவிதை, கலை அறிக்கைகள், கலைக் கோட்பாடு, நாடகம், வரைகலை வடிவமைப்பு என்பவற்றோடு தொடர்புடையது. இவ்வியக்கம், தனது போர் எதிர்ப்புக் கொள்கைகளை அக்காலத்தில் நடைமுறையில் இருந்த கலைக்கான நியமங்களை மறுதலிப்பதன் மூலம் முன்னெடுத்தது. டாடாயியம் போர் எதிப்புக்கொள்கைகளைக் கடைப்பிடித்ததோடு பூர்சுவாக்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. அத்துடன், தீவிர இடதுசாரிகளுடன் அரசியல் தொடர்புகளையும் கொண்டிருந்தது.

1917ல் சூரிச்சில் டிரிசுத்தான் சாராவினால் வெளியிடப்பட்ட "டாடா" வெளியீட்டின் முதல் பதிப்பின் அட்டை

இந்த இயக்கம் முக்கியமாக, பொதுக் கூடல்கள், ஆர்ப்பாட்டங்கள், கலை இலக்கிய ஆய்விதழ்களை வெளியிடல் போன்றவற்றோடு கலை, அரசியல், பண்பாடு போன்ற பல தலைப்புக்களில் பல்வேறு ஊடகங்களில் கலந்துரையாடுதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இவ்வியக்கத்தின் முக்கியமானவர்களுள் இயூகோ பால், எம்மி என்னிங்சு, ஆன்சு ஆர்ப், ராவோல் அவுசுமன், கன்னா கோச், யொகான்னசு பாதெர், திருசுத்தான் சாரா, பிரான்சிசு பிக்காபியா, ரிச்சார்ட் இயுவெல்சென்பெக், சார்ச் குரொசு, யோன் ஆர்ட்பீல்ட், மார்செல் டுச்சாம்ப், பீட்ரிசு வூட், குர்ட் சுவிட்டர்சு, ஆன்சு ரிச்சர் என்பவர்களும் அடங்குவர்.

குறிப்புக்கள்

தொகு
  1. de Micheli, Mario(2006). Las vanguardias artísticas del siglo XX. Alianza Forma. p.135-137

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடாயியம்&oldid=2750563" இலிருந்து மீள்விக்கப்பட்டது