தானியேல் ஒர்ட்டேகா

(டானியல் ஒர்ட்டேகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓசே தானியேல் ஒர்ட்டேகா சாவேத்ரா (Jose Daniel Ortega Saavedra, பிறப்பு: நவம்பர் 11, 1945) நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர் ஆவார். சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த ஒர்ட்டேகா 1979-இல் இராணுவ புரட்சிக்குப் பின்னர் இராணுவ அரசில் ஒரு உறுப்பினராக இருந்து 1985இல் குடியரசுத் தலைவரானார். 1985 முதல் 1990 வரை பதவியில் இருக்கும் பொழுது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கொன்ட்ரா கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டார். 1990 தேர்தலில் இவர் வலதுசாரிகளிடம் தோற்றார். 2006 தேர்தலிலும், பின்னர் மூன்றாம் தடவையாக 2011 நவம்பர் தேர்தலிலும்[1] மீண்டும் வெற்றி பெற்றார். 2021 நவம்பரில், 75% வாக்குகளுடன் நான்காவது ஐந்தாண்டு காலத்திற்கு தானியேல் ஒர்ட்டேகா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தானியேல் ஒர்ட்டேகா
Daniel Ortega
நிக்கராகுவாவின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 சனவரி 2007
முன்னையவர்என்ரீக்கே பொலாஞோசு
பதவியில்
10 சனவரி 1985 – 25 ஏப்ரல் 1990
முன்னையவர்இவரே (தேசிய மீட்டுருவாக்கம் இராணுவ கூட்டணி இணைப்பாளர்)
பின்னவர்வயலெட்டா கமோரோ
நிக்கராகுவா தேசிய மீட்டுருவாக்கம் இராணுவ கூட்டணி இணைப்பாளர்
பதவியில்
18 சூலை 1979 – 10 சவரை 1985
முன்னையவர்பிரான்சிஸ்கோ உர்கூயோ (பதில் அரசுத்தலைவர்)
பின்னவர்இவரே (அரசுத்தலைவர்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1945 (1945-11-11) (அகவை 78)
லா லிபர்ட்டாட், நிக்கராகுவா
அரசியல் கட்சிசண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி
துணைவர்ரொசாரியோ முரியோ

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஓர்ட்டேகா நிக்கராகுவா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் டேனியல் ஒர்ட்டேகா செர்டா மற்றும் லிடியா சாவேத்ரா ஆகியோர் ஆவர். இவரது பெற்றோர் அனசுதேசியோ சோமோசா டெபாயலின் ஆட்சியை எதிர்த்தனர்.காதல் கடிதங்கள் வைத்திருந்ததற்காக ஓர்ட்டேகா தாயார் சோமோசாவின் தேசிய காவலரால் சிறையில் அடைக்கப்பட்டார்.ஒர்ட்டேகாவும் அவரது இரண்டு சகோதர்களும் புரட்சியாளர்களாக வளர்ந்தனர்.அவரது சகோதரர் சம்பர்ட்டோ ஒர்ட்டேகா ஒரு முன்னாள் தளபதி.இவர்களுக்கு ஜெர்மானியா என்ற சகோதரி இருந்தார், இவர் மறைந்து விட்டார்.[2][3]

நிலையான வேலைவாய்ப்பை நாடி இவரது குடும்பம் லா லிபர்டாட்டில் இருந்து மாகாண தலைநகர் ஜுய்கல்பாவிற்கும் பின்னர் மனாகுவாவில் குடிபெயர்ந்தது.இவரது தந்தை டேனியல் ஒர்டேகா செட்ரா நிகரகுவாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டையும் சோமோசா சர்வாதிகாரத்திற்கு வாசிங்டனின் ஆதரவையும் வெறுத்தார்.இந்த அமெரிக்க எதிர்ப்பு உணர்வை அவர் தனது மகனககளுக்கு வழங்கினார்.

ஒர்டேகா முதன் முதலில் 15 வயதில் அரசியல் நடவடிக்கைகளுகாக கைது செய்யப்பட்டார்[4].1964 ஆம் ஆண்டு ஒர்டேகா குவாத்தமாலாவுக்குச் சென்றார் , அங்கு காவல்துறையினர் அவரைக் கைது செய்து நிக்கராகுவா தேசிய காவல்படைக்கு மாற்றினர்[5].

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் ஒரு கிளையில் ஆயுதக் கொள்ளையில் பங்கேற்றதற்காக 1967 இல் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.கொள்ளையில் பங்கேற்காவிட்டால் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று அவர் ஒத்துழைப்பாளர்களிம் கூறினார்[6].சோமொசிசடா பணயக்கைதிகளுக்கு ஈடாக 1974 ஆம் ஆண்டில் மற்ற சாண்டினிசுடா கைதிகளுடன் ஒர்டேகா விடுவிக்கப்பட்டார்.மனாகுவாவுககு வெளியே எல் மொடெலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஒர்டேட்கா கவிதைகள் எழுதினார்.சிறைவாசத்தின்ஷ போது ஒர்டேட்கா கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்.

சிறையில் விடுவிக்கப்பட்ட பின்னர், ஒர்ட்டேகா கியூபாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.அங்கு அவர் பல மாதங்களாக கெரில்லா பயிற்சி பெற்றார்.பின்னர் அவர் ரகசியமாக நிக்கராகுவாவுக்கு திரும்பினார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியேல்_ஒர்ட்டேகா&oldid=3312466" இலிருந்து மீள்விக்கப்பட்டது