டான் கிரேவ்சு (வட்டெறிபவர்)
டேனியல் கிரீவ்சு (Daniel Greaves) (பிறப்பு: 1982 அக்டோபர் 4) இவர் பிரித்தனைச் சேர்ந்த ஓர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். அவர் வட்டெறிதலில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
டான் கிரேவ்சு (வட்டெறிபவர்) | ||
ஆண்கள் தடகளம் | ||
நாடு பெரிய பிரித்தானியா | ||
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
2004 ஏதென்ஸ் | வட்டெறிதல் | |
சிட்னி | வட்டெறிதல் | |
2012 இலண்டன் | வட்டெறிதல் | |
2008 பெய்ஜிங் | வட்டெறிதல் | |
2016 இரியோ டி செனீரோ | வட்டெறிதல் | |
உலகப் போட்டிகள் | ||
2002 லீல் | வட்டெறிதல் | |
2006 அசான் | வட்டெறிதல் | |
2011 கிறைஸ்ட்சேர்ச் | வட்டெறிதல் | |
2013 லியோன் | வட்டெறிதல் | |
ஐபிசி ஐரோப்பியப் போட்டிகள் | ||
அசான் | வட்டெறிதல் | |
2005யெஸ்ப்பூ | வட்டெறிதல் | |
2014 சுவான்சீ | வட்டெறிதல் | |
2016 கிரசெட்டோ | வட்டெறிதல் | |
நாடு இங்கிலாந்து | ||
பொதுநலவாய விளையாட்டுக்கள் | ||
2014 கிளாஸ்கோ | வட்டெறிதல் |
சுயசரிதை
தொகுஇவர் இங்கிலாந்தின் இலீசெஸ்டர்சையரின் அன்ஸ்டே என்ற நகரத்தில் 1982 இல் பிறந்தார். [1]
2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் எஃப் 44/46 வகை வட்டெறிதலில் இவர் தங்கப்பதக்கம் வென்றார். இவர், 55.12 மீட்டர் தூக்கி எறிந்து புதிய உலக சாதனையைப் படைத்தார். [2] முன்னதாக சிட்னியில் நடந்த 2000 கோடைகால இணை ஒலிம்பிக்கில் வெள்ளியை வென்றார். [3]
கால்களின் குறைபாட்டுடன் பிறந்த போதிலும், 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியில் சேர இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் இவர் போட்டியிட்டு, [4] எஃப்44 வகை வட்டெறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2011 சனவரியில் நியூசிலாந்தில் நடந்த ஐபிசி-க்கு முந்தைய உலக தடகளப் போட்டிகளில் போட்டியில் மீண்டும் உலக சாதனையை முறியடித்த இவர், தனது நான்காவது வீசுதலில் 59.98 மீட்டரைக் கடந்தார். [5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "British team for Athens 2004 பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்", paralympics.org.uk, retrieved 2011-03-05
- ↑ "Greaves takes discus crown", BBC, 20 September 2004
- ↑ 3.0 3.1 "Unique double for Daniel Greaves", uksport.gov.uk, 17 August 2008
- ↑ "ParalympicsGB receive athletics nominations for the Beijing 2008 Paralympics" பரணிடப்பட்டது சூன் 9, 2011 at the வந்தவழி இயந்திரம், British Paralympics Association, June 2008
- ↑ "'Discus' Dan is a World Record Man", Anstey Clarion, February 2011, p. 1
- ↑ "IPC WORLDS: Greaves justifies his pre-event billing to take discus gold in New Zealand பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம்", morethangames.co.uk, 26 January 2011, retrieved 2011-03-05