டாம் கிளான்சி

அமெரிக்க எழுத்தாளர் (1947–2013)

டாம் கிளான்சி (Tom Clancy, பி. ஏப்ரல் 12, 1947 - இ. அக்டோபர் 1, 2013)[1] ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். உளவுப்புனைவு, தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு, ராணுவப் புனைவு போன்ற பாணிகளில் இவர் எழுதிய புத்தகங்கள் உலகப் புகழ் பெற்றவை. பனிப்போரை களமாகக் கொண்டு இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். 1984ல் வெளியான தி ஹன்ட் ஃபார் தி ரெட் அக்டோபர் என்ற புதினம் இவரது முதல் படைப்பாகும். இதன் வெற்றியைத் தொடர்ந்து இதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜாக் ரயான் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு மேலும் பல புதினங்களை எழுதினார் கிளான்சி. இதைத் தவிர வேறு சில புதின வரிசைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. கிளான்சியின் படைப்புகளின் அடிப்படையில் பல நிகழ்பட ஆட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிளான்சியின் பெயர் பிற எழுத்தாளர்களால் எழுதப்படும் திரைக்கதைகளுக்கும் அபுனைவு புத்தகங்களுக்கும், வாழ்க்கை வரலாறுகளுக்கும் விளம்பரமாக பயன்படுத்தப்படுகிறது.[2][3]

டாம் கிளான்சி
பிறப்பு(1947-04-12)ஏப்ரல் 12, 1947
பால்டிமோர், மேரிலாந்து, அமெரிக்கா
இறப்புஅக்டோபர் 1, 2013(2013-10-01) (அகவை 66)
பால்டிமோர், மேரிலாந்து, அமெரிக்கா
தொழில்எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
காலம்1982–நடப்பு
வகைதொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு, குற்றப்புனைவு,
ராணுவப் புனைவு, அபுனைவு

மேற்கோள்கள்

தொகு
  1. Clancy, Tom (October 31, 1997). "alt.books.tom-clancy". groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-20.
  2. "Tom Clancy". Encyclopedia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் March 20, 2012.
  3. Bosman, Julie (2013-10-02). "Tom Clancy, Best-Selling Novelist of Military Thrillers, Dies at 66". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/10/03/books/tom-clancy-best-selling-novelist-of-military-thrillers-dies-at-66.html?_r=0. பார்த்த நாள்: 2013-10-02. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_கிளான்சி&oldid=3043662" இலிருந்து மீள்விக்கப்பட்டது