தாசுமேனியன் டெவில்
தாசுமேனியன் டெவில் (Sarcophilus harrisii) என்பது டஸ்யூரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி பைம்மாவின விலங்கினம் ஆகும். இது ஒரு காலத்தில் ஆத்திரேலியாவின் முதன்மை நிலப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தது. அதன்பிறகு தீவு மாநிலமான தாசுமேனியாவின் காடுகளில் மட்டுமே காணப்பட்டது. இது இப்போது சிறிய அளவில் இனப்பெருக்கம் செய்து நியூ சவுத் வேல்சில் மீண்டும் கொண்டுவந்து விடப்பட்டுள்ளது.[3] உலகின் மிகப்பெரிய ஊனுண்ணி பைம்மாவினமான தாசுமேனியப் புலி எனும் விலங்கு 1936இல் உலகில் அற்றுவிட்டதைத் தொடர்ந்து, சிறிய நாய் அளவுடைய தாசுமேனியன் டெவில் தற்போது மிகப்பெரிய ஊணுண்ணி பைம்மா விலங்கு என்ற இடத்தைப் பெற்றுள்ளது. இது குவால்களுடன் தொடர்புடையது மற்றும் தைலாசினுடன் ஓரளவு தொடர்புடையது.
தாசுமேனியன் டெவில் புதைப்படிவ காலம்:Late Holocene | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Sarcophilus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SarcophilusS. harrisii
|
இருசொற் பெயரீடு | |
Sarcophilus harrisii (Boitard, 1841)[2] | |
டாஸ்மேனியாவில் டாஸ்மேனிய டெவில் பரவியுள்ள பகுதி (சாம்பல் நிறம்). நியூ சவுத் வேல்சில் பரவியுள்ள பகுதி வரைபடப்படுத்தப்படவில்லை |
தாசுமேனியன் டெவில் என்ற பெயரில் உள்ள தாசுமேனியன் என்ற சொல்லானது தாசுமேனியாவில் மட்டும் காணப்படுவதைக் குறிப்பது. அதேசமயம் டெவில் என்ற சொல்லானது பயம் ஏற்படுத்தும் அளவுக்கு இது பயங்கரமாக அலறுவதால் உண்டானது. வளைகளில் வாழும் பழக்கம் கொண்ட இது, கரிய நிறமும், கூரிய பற்களும் கொண்டது. இறந்த உடல்களை உண்ணும் பழக்கமும் கொண்ட இது ஓர் இயற்கைத் தோட்டியாக செயல்பட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.[4]
குறிப்புகள்
தொகு- ↑ Hawkins, C.E.; McCallum, H.; Mooney, N.; Jones, M.; Holdsworth, M. (2008). "Sarcophilus harrisii". IUCN Red List of Threatened Species 2008: e.T40540A10331066. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T40540A10331066.en. https://www.iucnredlist.org/species/40540/10331066. Listed as Endangered (EN A2be+3e v3.1)
- ↑ Boitard, [Pierre] (n.d.). "L'Ursin de Harris". Le Jardin des plantes: Description et mœurs des mammifères de la Ménagerie et du Muséum d'histoire naturelle. Paris: Gustave Barba. p. 204.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ https://www.nationalgeographic.com/animals/2020/10/tasmanian-devils-return-to-mainland-australia/
- ↑ ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘டாஸ்மேனியன் டெவில்’ விலங்கு, இந்து தமிழ், 2020 அக்டோபர் 6