டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம்

டி.ஐ. நிறுவனம் (TI Cycles of India) சென்னையை சேர்ந்த முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னோடி மிதிவண்டி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 1949ஆம் ஆண்டு முருகப்பா குழுமமும் ஐக்கிய இராச்சியத்தின் ட்யூப் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் சர் இவான் இசுடெடெபோர்டும் இணைந்து நிறுவிய இந்த நிறுவனம் இந்தியாவில் புகழ்பெற்ற ஹெர்குலீசு , பிஎஸ்ஏ மற்றும் பிலிப்சு என வணிகப்பெயரிட்ட மிதிவண்டிகளை தயாரிக்கிறது.இதன் உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையை அடுத்த அம்பத்தூரிலும் மகாராட்டிராவில் நாசிக்கிலும் உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவிலும் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரும் மிதிவண்டி தயாரிப்பாளராக விளங்குவதுடன் சிறப்பு மிதிவண்டி இரகங்களான மலையேற்ற மிதிவண்டிகள், விளையாட்டுப் பந்தய மிதிவண்டிகள் போன்றவற்றைத் தயாரிப்பதில் முதன்மையானதாகவும் விளங்குகிறது. அண்மையில் காலமாற்றத்திற்கு தக்கவாறு எடை குறைந்த கரி (கார்பன்) இழைகளால் தயாரான மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது [1].ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மிதிவண்டிகளை தயாரிக்கும் திறன்கொண்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் பல மிதிவண்டி விளையாட்டுக்களை ஆதரித்து வருகிறது.காட்டாக, 900 கிமீக்கும் கூடுதலான நீலகிரி சுற்றுலா போட்டிக்கு தனது பிஎஸ்ஏ வணிகப்பெயர் சார்பாக புரவலராக இருந்து வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. இந்தியாவின் முதல் கார்பன் லைட்வெயிட் சைக்கிள்:டி.ஐ அறிமுகம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஐ_சைக்கிள்ஸ்_நிறுவனம்&oldid=3584872" இலிருந்து மீள்விக்கப்பட்டது