டிக்கி

மாவோரியர்கனின் தொன்மத்தின்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன்

மாவோரி தொன்மவியலில், டிக்கி (Tiki) என்பது தூமட்டுங்கா அல்லது தானே என அழைக்கப்படும் கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆகும். அவன் மரிகோரிக்கோ என்ற முதலாவது பெண்ணை ஒரு குளத்தில் கண்டான், அவள் மூலம் ஐன்-கோ-அட்டாட்டா என்பவனின் தந்தையானான். பொதுவாக, டிக்கி என்பது கல் அல்லது மரத்தால் செதுக்கப்பட்ட மனித உருவ சிற்பங்கள் ஆகும். பெரும்பாலும் மாவோரி மொழி இனத்தவர்களுக்கு இது தொன்மையான சின்னங்களாகக் கருதப்படுகிறது. டிக்கிகளைப் போன்ற செதுக்கிய சிலைகள் மற்றும் தெய்வீக மூதாதையர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும்பாலான பாலினேசியப் பண்பாடுகளில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் புனிதமான அல்லது குறிப்பிடத்தக்க தளங்களின் எல்லைகளைக் குறிக்க உதவுகின்றன.

மாவோரியர் ஒருவர் நியூசிலாந்தின் வகரேவேரேவா கிராமத்தில் செதுக்கப்பட்ட மர டிக்கியில் வர்ணம் பூசப்பட்ட பச்சை குத்துகிறார். (1905)
டிக்கி சிலை (மார்க்கெசசுத் தீவுகள்)

குறிப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டிக்கி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்கி&oldid=2932380" இலிருந்து மீள்விக்கப்பட்டது