டிசிப்ரோசியம் அயோடேட்டு

வேதிச் சேர்மம்

டிசிப்ரோசியம் அயோடேட்டு (Dysprosium iodate) என்பது Dy(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. டிசிப்ரோசியம் நைட்ரேட்டு அல்லது டிசிப்ரோசியம் குளோரைடுடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம் அயோடேட்டு உருவாகும். இரண்டு விதமான படிக வடிவங்களில் டிசிப்ரோசியம் அயோடேட்டு காணப்படுகிறது. α-வடிவம் மற்றும் β-வடிவம் என்பன இவ்விரண்டு வடிவங்களாகும்.[1] 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரில் இதன் கரைதிறன் 1.010±0.001 10−−3 mol·dm−3 ஆகும். தண்ணீருடன் எத்தனால் அல்லது மெத்தனாலை சேர்த்தால் நீரின் கரைதிறன் மேலும் குறைகிறது.[2]

டிசிப்ரோசியம் அயோடேட்டு
இனங்காட்டிகள்
14732-21-9 நீரிலி Y
24859-41-4 நான்கு நீரேற்று Y
EC number 238-794-8
InChI
  • InChI=1S/Dy.3HIO3/c;3*2-1(3)4/h;3*(H,2,3,4)/q+3;;;/p-3
    Key: ASAMDJHOONJZTG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21149367
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[Dy+3]
பண்புகள்
Dy(IO3)3
வாய்ப்பாட்டு எடை 687.20 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு