டிஜெம்பே (Djembe) என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் தோலால் செய்யப்பட்ட இசைக் கருவி ஆகும். மாலியில் வாழும் பம்பாரா மக்கள் வெறும் கையால் இசைக்கும் கருவியாகும். இதன் ஒரு பகுதியில் ஆட்டின் தோல் கொண்டு போர்த்தப்பட்டு நீளமான கயிற்றால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மரமானது லென்கே என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. பம்பாரா மொழியில் டிஜெ என்றால் ஒன்றுகூடல் என்றும் ம்பெ என்றால் சமாதனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. [1] இதன் எடை 5 கிலோவிலிருந்து 13 கிலோ வரை உள்ளது. மாண்டின்கா மக்கள் இன மக்கள் இக்கருவியை தனித்துவமான இசையை இதன் மூலம் வரச்செய்து அனைவரையும் கவருகிறார்கள்.

டிஜெம்பே
Brown goblet-shaped wood and leather drum with blue rope on an alabaster background
மாலி நாட்டின் கிடைக்கும் லென்கா பலகையிலிருந்து செய்யப்படும்போது
மாலி நாட்டின் கிடைக்கும் லென்கா பலகையிலிருந்து செய்யப்படும்போது
தாள வாத்திய கருவிகள்
வகைப்பாடுஇசைக்கருவி
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை211.261.1
கண்டுபிடிப்புஅண். 1200
வரிசை

65–1000 Hz.

தொடர்புள்ள கருவிகள்

துனுன், போகரபோ, அசிக்கோ, Goblet drum

மேலதிக கட்டுரைகள்

வரலாறு

தொகு

ஒரு வேடன் காட்டில் சிம்பன்சி ஒன்று அதன் குட்டி இறந்ததால் அதன் சோகம் தீர்க்க தன் வயிற்றில் தனது இரண்டு கைகளாலும் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டதையும், பின்னர் சமாதானம் அடைந்ததையும் கண்டான். இதனைக்கண்ட வேடன் இந்த வாத்தியத்தைத் தயார் செய்ததாக செவிவழிச் செய்தி உள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Doumbia, Abdoul; Wirzbicki, Matthew (2005). Anke Djé Anke Bé, Volume 1. 3idesign. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9774844-0-9.
  2. வாசிப்பும் எழுத்தும்: சாரு நிவேதிதா தி இந்து தமிழ் 04 மார்ச் 2017

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டிஜெம்பே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஜெம்பே&oldid=3581108" இலிருந்து மீள்விக்கப்பட்டது