டிடி டைரக்ட்+

தொலைகாட்சி நிறுவனம்

டிடி டைரக்ட்+ (DD Direct+) இந்திய அரசின் புவிப்புறத் தொலைக்காட்சி வழங்கும் தூர்தர்சனின் எண்ணிம செய்மதித் தொலைக்காட்சி சேவை வழங்கும் துணை நிறுவனமாகும். இதன் அலைவரிசைகள் கட்டணம் ஏதுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகின்றன. இதன் அலைவரிசைத் தொகுப்பை கட்டுடைய அணுக்க முறைமையில் கட்டணத் தொலைக்காட்சி வழங்கும் அனைத்து கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர்களும் விண்ணின்று வீடு சேவையாளர்களும் தங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்க வலியுறுத்தப்படுகின்றனர். இதன் அலைத்தொகுப்பில் 56 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 23 வானொலி அலைவரிசைகளும் உள்ளன.

டிடி டைரக்ட்+
வகைபொது
நிறுவுகைதிசம்பர் 16, 2004
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைசெய்மதித் தொலைக்காட்சி
உற்பத்திகள்விண்ணின்று வீடு சேவை, இலவச எண்ணிமத் தொலைக்காட்சி
உரிமையாளர்கள்தூர்தர்ஷன்
இணையத்தளம்DD Direct+

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிடி_டைரக்ட்%2B&oldid=3491923" இலிருந்து மீள்விக்கப்பட்டது