டெபாய்
டெபாய் (debye, D) என்பது மின்னிருமுனையித் திருப்புத்திறனின் சகிசெ[1] (SI மெட்ரிக்கு அலகல்லாத) அலகு ஆகும். இயற்பியலாளர் பீட்டர் டெபாய் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 1 டெபாய் என்பது 1×10−18 ஸ்டாட்கூலும்-செண்ட்டி மீட்டர் ஆகும்.[note 1]
வரலாற்று ரீதியாக, டெபாய் என்பது 10−10 ஸ்டாட்கூலும்[note 2] (பொதுவாக நிலைமின்னேற்ற அலகு, esu என அழைக்கப்படுகிறது) அலகு கொண்ட, 1 ஆங்ஸ்டிராம் தூரத்தில் உள்ள இரண்டு எதிரெதிரான மின்னேற்றங்களில் விளையும் இருமுனைத் திருப்புத்திறனுக்குச் சமனாகும்.[note 3] இது மூலக்கூற்று இருமுனைத் திருப்புத்திறன்களுக்கு ஏற்ற அலகைத் தருகிறது.
1 D = 10−18 statC·cm = 10−10 esu·Å[note 1] = 1⁄299,792,458×10−21 கூ·மீ[note 4] ≈ 3.33564×10−30 கூ·மீ ≈ 1.10048498×1023 qPlP ≈ 0.393430307 ea0[2] ≈ 0.20819434 eÅ
சாதாரண ஈரணுமூலக்கூறுகளுக்கு இருமுனைத் திருப்புத்திறன்கள் 0 முதல் 11 D ஆகும். சமச்சீரான ஏகஅணு மூலக்கூறுகள், எ.கா. குளோரின், Cl2, சுழிய இருமுனைத் திருப்புத்திறனையும், உயர் அயனிய மூலக்கூறுகள் மிகப் பெரும் திருப்புத்திறன்களையும் கொண்டுள்ளன. எ.கா. வளிம பொட்டாசியம் புரோமைடு, KBr, 10.5 D இருமுனைத் திருப்புதிறனைக் கொண்டுள்ளது.[3]
அனைத்துலக முறை அலகுகள் (SI) பொதுவாகப் பெரிதாக இருப்பதால், அணுவியல், மற்றும் வேதியியலில் தற்போதும் டெபாய் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றது. இருமுனைத் திருப்புத்திறனின் மிகக்குறைந்த SI அலகு 1 யாக்டோகூலும்-மீட்டர் (அண்ணளவாக 300,000 D) ஆகும்.[note 5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ஸ்டாட்கூலும் என்பது பிராங்கிளின் அல்லது நிலைமின்னேற்ற அலகு எனவும் அழைக்கப்படுகிறது.
1 statC =1 Fr =1 esu
- ↑ 10-10 ஸ்டாட்கூலோம் என்பது அண்ணளவாக 0.2083 அலகு அடிப்படை மின்னூட்டத்திற்குச் சமன்.
- ↑ ஆங்ஸ்டிராம் என்பது சாதாரண சகப் பிணைப்பு ஒன்றில் காணப்படும் தூரம் ஆகும்.
1 Å = 100 பீமீ = 10-8 செமீ = 10-10 மீ
- ↑ ஒரு டெபாய் என்பது 1×10−21 கூ·மீ2/செ ஐ வெற்றிடத்தில் ஒளி வேகத்தால் பிரிப்பதால் வரும் பெறுமானம் ஆகும். மாற்றாக 1 கூ·மீ = 2.9979×1029 D.
- ↑ யாக்டோ (Yocto-) என்பது 10−24 ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ CGS units பரணிடப்பட்டது 2011-08-09 at the வந்தவழி இயந்திரம் R. Rowlett (University of North Carolina at Chapel Hill)
- ↑ Atomic unit of electric dipole moment NIST
- ↑ Physical chemistry 2d Edition (1966) G.M. Barrow McGraw Hill