டிம்பிள் படேல்

ஆடை அலங்கார வடிவழகி

டிம்பிள் படேல் ( Dimple Patel ) ;;தி மிஸ் குளோப்;; 2016ன் வெற்றியாளரும் புகழ்பெற்ற இந்திய வடிவழகியுமாவார். நவம்பர் 2016 இல் அல்பேனியாவின் டிரானாவில் நடைபெற்ற மிஸ் குளோப் 2016 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மிஸ் இந்தியா டிம்பிள் படேல் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். மேலும் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். [1]

டிம்பிள் படேல்
தேசியம்இந்தியர்
பணிவடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2010 முதல் தற்போது வரை
பட்டம்மிஸ் குளோப் 2016
(வெற்றியாளர்)

தொழில்

தொகு

டிம்பிள் படேல் லக்மே பேஷன் வீக், கோச்சூர் வீக், இந்தியா இன்டர்நேஷனல் ஜூவல்லரி வீக், புனே பேஷன் வீக், துபாய் பேஷன் வீக் மற்றும் நைரோபி பேஷன் வீக் மற்றும் பலவற்றிற்காக வடிவழகியாக இருந்தார். மணீஷ் மல்கோத்ரா, விக்ரம் பட்னிசு, சப்யாசாச்சி, நீதா லுல்லா மற்றும் பல்குனி சேன் பீகாக் போன்ற ஆடை வடிவமைப்பாளர்களுக்காக இவர் பணியாற்றினார்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்பிள்_படேல்&oldid=3657359" இலிருந்து மீள்விக்கப்பட்டது