டிராத் ராம் ஆம்லா

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

டிராத் ராம் ஆம்லா (1913-2009) ஜம்மு மற்றும் காஷ்மீர்  மாநிலத்தை சாா்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர்  13 ஏப்ரல் 1913 இல் காஷ்மீர் (பிரித்தானிய இந்தியா) மாநிலம் முஜாபார்ஆபாத் எனுமிடத்தில் பிறந்தாா்.

இவா் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு 1967-1970, 1970-1976, 1976-1982 மற்றும் 1985-1991 ஆகிய காலகட்டங்களில் மாெத்தம் நான்கு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பாக இதோ்ந்தெடுக்கப்பட்டாா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் மிகச்சிறந்த வெற்றி வணிகராக  செயல்பட்டாா். ஸ்ரீநகாில் மிகப்பொிய நட்சத்திர விடுதியும், திரை அரங்கையும் நடத்தி வந்தாா். டெல்லியிலும் மிகப்பொிய நட்சத்திர விடுதியை 1956 இல் தாெடங்கினாா். தற்சமயம் அவருடைய பேரன் நிா்வகித்து வருகிறாா்.

ஆம்லா, 1939 இல் சத்தியதேவி என்பவரை மணந்தாா். அவா்களுக்கு கிருஷ்ணா, விஜயலட்சுமி, கிரன் என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனா்.காஷ்மீர் அரசியல்வாதி டிபி தார் மகன் விஜய் தார் என்பவரை கிரான் திருமணம் செய்து கொண்டாா். 2009 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் டிராத் ஆம்லா புது தில்லியில் இறந்தார்.[1]

குறிப்புகள் தொகு

  1. "CM attends condolence meeting of late TR Amla". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராத்_ராம்_ஆம்லா&oldid=3556656" இலிருந்து மீள்விக்கப்பட்டது