கெலன் (கிரேக்கர்)

(டிராயின் ஹெலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெலன் (Helen, மாற்றுப் பெயர்ப்பு:ஹெலன்) கிரேக்கத் தொன்மவியலில் ஓர் முதன்மையான பெண்ணாவார். உலகிலேயே மிகவும் அழகானவராக கருதப்படுபவர். திராயன் போரிலும் ஓமரின் இலியட்டிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளார். இவருக்காகத்தான் பலநாட்டு மன்னர்களும் திராயன் போரில் சண்டையிட்டு திராயும் அழிபட்டது.

திராயின் கெலன் - எவ்லின் டெ மோர்கனின் ஓவியம் (1898, இலண்டன்).

கெலன் சியுசு கடவுளுக்கும் எசுபார்த்தாவின் மன்னன் மனைவி லெடாவிற்கும் பிறந்தவள். கேசுடர் மற்றும் போலிடியூக்சு என்ற சகோதரர்களையும் கிளைடைம்னெசுட்டிரா என்ற சகோதரியையும் உடையவள். கெலன், மெனெலசு என்ற இளவரசனை சுயம்வரத்தில் தெரிந்து திருமணம் செய்து எசுபார்த்தாவின் அரசியாக விளங்கினாள். இவர்கள் இருவருக்கும் எர்மியோன் என்ற பெண் மகவு பிறந்தது. பின்னதாக பாரிசு என்ற திராய் நாட்டு இளவரசன் எசுப்பார்த்தாவிற்கு வந்தான். அப்ரோடிட் என்ற காதல் தேவதையே அழகானவளாக ஒரு வழக்கில் தீர்ப்புச் சொன்னதனால் பாரிசு, கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிசு கெலனைக் கவர்ந்து திராய்க்குக் கொண்டு சென்றான். இதுவே திராயன் போர் மூள காரணமாக அமைந்தது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலன்_(கிரேக்கர்)&oldid=2712947" இலிருந்து மீள்விக்கப்பட்டது