டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்
டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் (Trindade and Martim Vaz)அத்திலாந்திக்குப் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவுக்கூட்டம் ஆகும். இது தெற்கு பிரேசிலின் இசுபிரிட்டோ சான்டோ மாநிலத்தைச் சேர்ந்தது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10.4 கிமீ² (4.0 ச மை) ஆகவும் மக்கள்தொகை 32 (பிரேசிலிய கடற்படையினர்) ஆகவும் உள்ளது. இந்தத் தீவுக்கூட்டத்தில் ஐந்து தீவுகளும் பல பாறைத்திட்டுகளும் உள்ளன. 10.1 கிமீ² (3.9 ச மை) பரப்பளவுள்ள டிரின்டேடு மிகப்பெரிய தீவாகும். இதற்கு கிழக்கே 49 கிமீ (30 மைல்கள்) தொலைவில் 0.3 கிமீ² (30 எக்டேர்கள்) பரப்பளவுள்ள சிறிய மார்ட்டிம் தீவு உள்ளது.
உள்ளூர் பெயர்: ஆர்கிபெலாகோ டி டிரின்டேடு எ மார்ட்டிம் வாசு | |
---|---|
டிரின்டேடு தீவின் பாறை ஓங்கல்கள் | |
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 20°31′30″S 29°19′30″W / 20.52500°S 29.32500°W |
தீவுக்கூட்டம் | ஆர்கிபெலாகோ டி டிரின்டேடு எ மார்ட்டிம் வாசு |
மொத்தத் தீவுகள் | 5 |
முக்கிய தீவுகள் | டிரின்டேடு; மார்ட்டிம் வாசு |
பரப்பளவு | 10.4 km2 (4.0 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 620 m (2,030 ft) |
உயர்ந்த புள்ளி | பைக்கோ டோ டெசெயாடோ[1] |
நிர்வாகம் | |
பிரேசில் | |
மண்டலம் | தென்கிழக்கு |
மாநிலம் | இசுபிரிட்டோ சான்டோ |
நிர்வாகம் | பிரேசிலிய கடற்படை |
மக்கள் | |
மக்கள்தொகை | 32 (2009) |
மேலதிக தகவல்கள் | |
அதிகாரபூர்வ இணையதளம் | First Naval District |
இந்த தீவுகள் எரிமலையிலிருந்து உருவானவை;மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. தென் டிரின்டேடைத் தவிர பெரும்பாலும் வெற்றிடமாகக் காணப்படுகிறது. இந்தத் தீவுகளை 1502இல் போர்த்துக்கேய தேடலாய்வாளர் எசுடேவாயோ ட காமா கண்டறிந்தார். 1890 முதல் 1896 வரை இதனை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியிருந்தது; பின்னர் பிரேசிலுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக திருப்பியளிக்கப்பட்டது. பிரித்தானியர்கள் கையகப்படுத்திய காலத்தில் இது "தெற்கு டிரினிடாடு" என அழைக்கப்பட்டு வந்தது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Ilha da Trindade - Infográficos e mapas Folha de São Paulo. Retrieved on 6 June 2009.