டிரையுண்ட்

டிரையுண்ட் (இந்தி : त्रिउंड) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் காங்கரா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய மலை. டிரையுண்ட் மலை தரம்காட்டின் பகுதியாகும். தவுலாதர் பகுதியின் அடிவாரத்தில் டிரையுண்ட் உள்ளது. இது 2,828 மீ உயரத்தில் உள்ளது. தர்மசாலாவின் கிரீடத்தில் சூட்டிய ஆபரணம் என டிரையுண்ட்டைக் கூறுவர்.

டிரையுண்ட்
त्रिउंड
Triund Hill.jpg
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்கரா
ஏற்றம்2,850 m (9,350 ft)
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு+91-177

டிரையுண்ட் மலைதொகு

டிரையுண்ட் பச்சைப் புல் நிறைந்த ஒரு பெரிய நிலம். கண்ணைக் காட்டிலும் வலிமையான தாலுகாத்தர் சிலைகள் காணப்படுகின்றன.

போக்குவரத்துதொகு

சாலை வழியாக பதான்கோட்டிலிருந்து காக்கல் சென்று பின் தர்மசாலாவை அடையலாம். மேலும் புது தில்லியிலிருந்து சண்டிகார் சென்று காங்கரா வழியாக தர்மசாலாவை அடையலாம்.

ஜசூர், பரோர் ஆகிய ரயில் நிலையங்கள் டிரையுண்டுக்கு அருகில் உள்ளன. இவை குறுகிய ரயில்பாதையில் உள்ளன. அகல ரயில்பதையில் டிரையுண்டுக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் பதான்கோட் ஆகும்.

காக்கல் விமான நிலையத்திலிருந்து (காங்கரா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது) காக்கல் சென்று பின் தர்மசாலாவை அடையலாம்.

மலை ஏற்றம் செல்ல ஏற்ற காலம்தொகு

மலைஏற்றம் செல்பவர்களுக்கு ஏற்ற காலம் மார்ச் முதல் மே வரை மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.

தவிர்க்க வேண்டிய காலம்தொகு

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாதலால் பயணம் மிகக் கஷ்டம். ஜூன், ஜூலை மழைக்காலம். பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.


வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரையுண்ட்&oldid=3524996" இருந்து மீள்விக்கப்பட்டது