டிவிஎஸ் என்டோர்க் 125

டி.வி.எஸ் என்டோர்க் 125 என்பது இந்தியாவில் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மோட்டார் ஸ்கூட்டர் ஆகும். இந்தக் குதியுந்து மறைந்து தாக்கும் விமானத்தின் (Stealth Aircraft) வடிவமைப்பை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.[1] என்டோர்க் குவியுந்தில் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ரேஸ் எடிஷன் என மூன்று ரகங்கள் உள்ளன.

தொழில்நுட்ப விவரங்கள்

தொகு

என்டோர்க் டி.வி.எஸ் இன் முதல் 125 சிசி திறன் கொண்ட குவியுந்து (ஸ்கூட்டர்) ஆகும். [2]

இது ஒரு சிலிண்டர், நான்கு ஸ்ட்ரோக், 125 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 7500 ஆர்பிஎம்மில் 6.9 கிலோவாட் (9.4 பிஎஸ்) வழங்குகிறது. இந்தக் குவியுந்து 9 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டும். உற்பத்தியாளரின் கூற்றுப்படி மணிக்கு 95 கிமீ / மணி வேகத்தில் செல்லும். [3] டிவிஎஸ் இந்திய குதியுந்து சந்தையில் என்டோர்க் 125 க்கு புளூடூத் இணைக்கப்பட்ட இன்ஸ்டிரூமென்ட் கிளஸ்டரை (instrument cluster) வழங்கியுள்ளது. இதன் மூலமாக வாகனத்தினைப் பயன்படுத்துபவர் புளூடூத் மூலமாக தன்னுடைய ஸ்மார்ட்போனனை குதியுந்தோடு இணைத்துக் கொள்ள இயலும். வாகனத்திலேயே குறுஞ்செய்திகள், அழைப்புகள் மற்றும் இதர தகவல்களைப் பெற இயலும்.[4] இந்த சேவை என்டோர்கின் தனித்துவமான அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

இன்ஸ்டிரூமென் கிளஸ்டர் வழிசெலுத்தல் உதவியாளர், அழைப்பாளர் ஐடி, அதிவேக ரெக்கார்டர், உள்ளமைக்கப்பட்ட லேப்-டைமர் மற்றும் சேவை நினைவூட்டலுடன் உட்பட பல கூறுகளை கொண்டுள்ளது. என்ஜின் கில் சுவிட்ச், ஈர்க்ககூடிய வடிவமைப்பு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. [5] [6]

பிஎஸ் 4 தரத்தில் வெளிவந்த என்டொர்க் 116 கிலோ எடை கொண்டது.[1] பிப்ரவரி 2018 இல் இந்த ஸ்கூட்டர் வெளியானது. [7]

நிறங்கள்

தொகு
  • மேட் மஞ்சள்
  • மேட் வெள்ளை
  • மேட் சிகப்பு
  • மேட் வெள்ளி
  • மெட்டாலிக் ஊதா
  • மெட்டாலிக் சாம்பல்
  • மெட்டாலிக் சிகப்பு

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் ஏன் வாங்கலாம்... ஏன் வாங்கக் கூடாது?! #Ntorq". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)
  2. "TVS NTORQ 125 Price Is Rs. 58,750/-". MotorBeam - Indian Car Bike News Review Price (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
  3. "TVS Ntorq 125 First Ride Review - India's First Performance Scooter". News18. 2018-02-19. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
  4. https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2019/09/20160343/1262510/TVS-NTorq-125-Race-Edition-Launched.vpf
  5. "Autocar Show: TVS Ntorq 125 scooter first ride review". Economics Times. 2018-03-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
  6. "TVS NTorq 125 Scooter Launched In India; Priced At Rs. 58,750 - NDTV CarAndBike". CarAndBike (in ஆங்கிலம்). 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
  7. "Sports scooter battle: Honda Grazia vs TVS NTorq vs Aprilia SR 125 - Times of India". The Times of India. 2018-02-13. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிவிஎஸ்_என்டோர்க்_125&oldid=2918179" இலிருந்து மீள்விக்கப்பட்டது