புளூடூத்

குறைந்த தொலைவு பயன்படும் கம்பியிலி தொழில்நுட்பம்


புளூடூத் என்பது டேட்டா பரிமாற்றத்திற்கான கம்பியில்லா தொழில்நுட்ப தரநிலை ஆகும். இது இருபது, முப்பது மீட்டர் வரை வேலை செய்கிறது. நிலையான மற்றும் மொபைல் சாதனங்களிலிருந்து 2.4 -2.485 GHz [3]) UHF ரேடியோ அலைவரிசை மூலமாக டேட்டா அனுப்பப்படுகிறது. புளூடூத் சமிக்ஞைகள் சுவர்களை கடக்க முடியாது. 1994 ஆம் ஆண்டு எரிக்குசன்  நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த டச்சு மின் பொறியியலாளர் சாப் ஆற்சன் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்[4]. இந்த தொழில்நுட்பம் முதலில் RS-232 தரவு கேபிள்களுக்கு ஒரு கம்பியில்லா மாற்றலாக தயாரிக்கப்பட்டது.

புளூடூத் சின்னம்

தொலைத்தொடர்பு, கணினி, நெட்வொர்க்கிங் மற்றும் மின்னணுவியல் நிறுவங்களிலிருந்து 30,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்டிருக்கும் ப்ளூடூத் SIG மூலமாக ப்ளூடூத் நிர்வகிக்கப்படுகிறது[5]. ஐஇஇஇ (IEEE) 802.15.1 என்கிற  ப்ளூடூத் தரநிலையாக நிர்ணயித்தது, ஆனால் இந்த தரநிலையை  ஐஇஇஇ பராமரிப்பதில்லை. புளூடூத் SIG இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது[6]. புளூடூத் சாதனங்களை  விற்கும் நிறுவனங்கள் Bluetooth SIG தரங்களை சந்திக்க வேண்டும்[7].

பிறப்பிடம்: 1989 இல் சுவீடனில் லுண்ட் என்கிற நகரத்தில், எரிக்சன் மொபைல் நிறுவனத்தில் நில்சு ரைட்பெக் (CTO), மற்றும் ஓகன் உல்மான் ஆகியவர்களால் வேலை தொடங்கப்பட்டது. இரண்டு காப்புரிமைகல் (SE 8902098-6, 1989-06-12 மற்றும் SE 9202239, 1992-07-24) வெளியிட பட்டன. இந்த இரண்டு காப்புரிமைகள் படி, கம்பியில்லா செவிப்பொறி உருவாக்குவதுதான் இந்த வேலையின் நோக்கம். டோற்ட் விங்ரென், சாப் ஆற்சன்,  மற்றும் சிவென் மேட்டிசன் ஆகியவர்கள் இந்த வேலையில் ஈடுபட்டார்கள். இந்த தொழில்நுட்பம் UHFஐ  அடிப்படையாக கொண்டிருக்கும் என்று முடுவு செய்தார்கள்.

பெயர்

இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பத்தாம் நூற்றாண்டு மன்னர் ஹரால்ட் புளுடூத் அவர்களின் பெயர் ஆகும். இவர் பல டேனிசு பழங்குடியினரை ஒற்றைப் பேரரசாக இணைத்தார். புளுடூத் தொடர்பு பல நெறிமுறைகளை ஒருங்கிணைக்கிறது என்பதை இந்த பெயர் காட்டுகிறது[1].

1997 ஆம் ஆண்டு இன்டெல்லின் சிம் கர்தாச் இந்த பெயரை பரிந்துரைத்தார். அவரும் கைப்பேசிகளை கணினியுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்[10]. அந்த காலத்தில் ​​அவர் கிங் அராலுடு புளூடூத்தைப்பற்றி பிரான்சு சி. பெண்டசான் எழுதிய வரலாற்று நாவலை (The Long Ships) படித்துக்கொண்டிருந்தார்[11] [12].

நிறுவுதல்

புளூடூத் 2402-2480 மெகா ஏற்சு அல்லது 2400-2483.5 மெகா ஏற்சு அலைவரிசைகளில் இயங்குகிறது[15]. இது  ஒரு கட்டுப்படுத்தப்படாத  அலைவரிசை. புளூடூத் மூலம் பரிமாற்றப்படும் டேட்டா  பாக்கெட்டுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாக்கெட்டும் 79 நியமிக்கப்பட்ட புளூடூத் சேனல்களில் ஒன்று மூலம் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு சேனலுக்கும் 1 MHz அலைவரிசை கொடுத்திறார்கள்.  வழக்கமாக விநாடிக்கு 800 முறை சேனல் மாற்றப்படுகிறது. இந்த விதமான தொழில்நுட்பம் frequency hopping என்று சொல்லப்படுகிறது[15]. புளூடூத் குறை ஆற்றல் என்கிற தரநிலை ஒவ்வொரு சேனலுக்கும் 2 மெகா ஏற்சு அலைவரிசை கொடுக்கிறது. இது 40 சேனல்களுக்கு இடமளிக்கிறது[16].

பயன்கள் தொகு

புளுடூத் என்பது முக்கியமாக குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி குறைவான எல்லைக்குள்ளான (ஆற்றல் வகையைப் பொறுத்து: 1 மீட்டர், 10 மீட்டர், 100 மீட்டர்) தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தரநிலையாகும். இது பயன்படுத்தப்படும் இரு சாதனங்களிலும் உள்ளமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை ட்ரான்சீவர் மைக்ரோசிப்களை அடிப்படையாகக் கொண்டது.[2] புளுடூத் உதவியால் இந்த சாதனங்கள் குறிப்பிட்ட தூர வரம்புக்குள் இருக்கும் போது அவை ஒன்றையொன்று தொடர்புகொள்ள முடியும். இந்தச் சாதனங்கள் ரேடியோ (அலைபரப்பு) தகவல்தொடர்பைப் பயன்படுத்துவதால் அவை ஒன்றுக்கொன்று தெரியும் படியோ அல்லது ஒன்றுக்கொன்று நேராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.[3]

வகை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஆற்றல்
mW (dBm)
எல்லை
(தோராயமாக)
வகை 1 100 mW (20 dBm) ~100 மீட்டர்
வகை 2 2.5 mW (4 dBm) ~10 மீட்டர்
வகை 3 1 mW (0 dBm) ~1 மீட்டர்

பெரும்பாலும் வகை 2 ஐச் சேர்ந்த சாதனங்கள் வகை 1 ஐச் சேர்ந்த ட்ரான்சீவருடன் (transceiver) இணைந்தால், வகை 2 ஐச் சேர்ந்த நெட்வொர்க்குடன் ஒப்பிடும் போது அவற்றின் எல்லையானது நீட்டிக்கப்படுகிறது. வகை 1 ஐச் சேர்ந்த சாதனங்களின் அதிக உணர்திறன் மற்றும் அலைபரப்புத் திறனின் காரணமாக சாத்தியமாகிறது.

பதிப்பு தரவு வீதம்
பதிப்பு 1.2 1 Mbit/s
பதிப்பு 2.0 + EDR 3 Mbit/s

புளுடூத் பயன்வகைகள் தொகு

புளுடூத்தைப் பயன்படுத்த ஒரு சாதனம் குறிப்பிட்ட புளுடூத் பயன்வகைகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இவையே தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் மற்றும் பயன்களை வரையறுக்கின்றன.

பயன்பாடுகளின் பட்டியல் தொகு

 
ஒரு பொதுவான புளுடூத் கைபேசி தலையணி.

புளுடூத்தின் பெரும்பாலான பயன்பாடுகளில் இவையும் அடங்கும்:

 • ஒரு கைபேசி மற்றும் ஒரு ஹேண்ட்ஸ்ஃப்ரீ (hands-free) தலையணி ஆகியவற்றுக்கிடையேயான கம்பியில்லா கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு. இது முதலில் வந்த பயன்பாடுகளில் மிகப் பிரபலமான ஒன்றாகும்.
 • PCகளுக்கு இடையேயான ஒரு வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்ளான, மற்றும் சிறிய கற்றையகலம் தேவைப்படக்கூடிய கம்பியில்லா வலையமைப்பு.
 • PC உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களுக்கிடையேயான கம்பியில்லா தகவல்தொடர்பு, இதில் மிகப் பொதுவானவை சுட்டி விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறி ஆகியவையாகும்.
 • OBEX கொண்டுள்ள சாதனங்களிடையே கோப்புகள், தொடர்பு விவரங்கள், நாள்காட்டி சந்திப்புத் திட்டங்கள் மற்றும் நினைவூட்டிகள் ஆகியவற்றின் பரிமாற்றம்.
 • சோதனைச் சாதனம், GPS ஏற்பிகள், மருத்துவ உபகரணங்கள், பார் குறியீடு ஸ்கேனர்கள் (bar code scanners) மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சாதனங்கள் ஆகியவற்றிலுள்ள பழைய கம்பியுள்ள தொடர் தகவல்தொடர்புகளின் இடமாற்றம்.
 • வழக்கமாக அகச்சிவப்பு நுட்பம் பயபடுத்தப்பட்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு பயன்பாடாக உள்ளது.
 • அதிக [USB] கற்றையகலம் தேவைப்படாத மற்றும் கேபிள்-இல்லாத இணைப்பு தேவைப்படுகின்ற குறைந்த கற்றையகலப் பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது.
 • புளுடூத் -செயலாக்கப்பட்ட விளம்பர ஹோர்டிங்களில் இருந்து, பிற கண்டுபிடிக்கப்படக்கூடிய புளுடூத் சாதனங்களுக்கு விளம்பரங்களை அனுப்பப் பயன்படுகிறது[மேற்கோள் தேவை].
 • இரண்டு தொழிற்துறை ஈத்தர்நெட் (எ.கா., PROFINET) நெட்வொர்க்குகளிடையே ஒரு கம்பியில்லாப் பாலமாகப் பயன்படுகிறது.
 • இரண்டு ஏழாம்-தலைமுறை கேம் தொடர்பு முனையங்கள் மற்றும் நிண்டெண்டோவின் வை (Nintendo's Wii) மற்றும் சோனியின் ப்ளேஸ்டேஷன் 3, ஆகியவை அவற்றின் கம்பியில்லா கண்ட்ரோலர்களுக்கு புளுடூத்தைப் பயன்படுத்துகின்றன.
 • தனிநபர் கணினிகள் அல்லது PDAகளிலுள்ள டயல்-அப் இணைய அணுகலுக்கு ஒரு தரவு-கேபிள் கைபேசி மோடமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நெட்வொர்க்கிங்கில் புளுடூத் மற்றும் வைஃபை IEEE 802.11 தொகு

இன்றைய அலுவலகங்களிலும் வீடுகளிலும் மற்றும் பயணத்தின் போதும் புளுடூத் மற்றும் வைஃபை (Wi-Fi) அதிகமாகப் பயன்படுகின்றன: நெட்வொர்க்குகளை அமைத்தல், அச்சிடுதல், அல்லது விளக்கக் காட்சிகள் மற்றும் கோப்புகளை PDAகளிலிருந்து கணினிகளுக்கு அனுப்புதல் போன்ற பயன்கள் முக்கியமானவை. இரண்டுமே உரிமமற்ற கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் பதிப்புகளாகும்.

Wi-Fi என்பது வீட்டில் பயன்படும் சாதனம் மற்றும் அதன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். இவற்றின் பயன்பாடுகளின் வகை டபிள்யூலேன் (WLAN) எனப்படும் கம்பியில்லா அகப் பரப்பு வலையமைப்புகள் என அறியப்படுகின்றன. வைஃபை (Wi-Fi) பணிபுரியும் இடங்களிலுள்ள பொதுவான அகப் பரப்பு வலையமைப்பு அணுகலுக்கான வடத்தின் பயன்பாட்டுக்கான ஒரு மாற்றாகவே உருவாக்கப்பட்டது.

புளுடூத் தொழில்நுட்பம் நிலையாக ஓரிடத்தில் இல்லாத சாதனம் மற்றும் அதன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இவற்றின் பயன்பாடுகளின் வகை கம்பியில்லா தனிப்பரப்பு வலையமைப்பு (WPAN) என அறியப்படுகிறது. புளுடூத் என்பது, எந்தச் சூழலிலும் செய்யப்படும் பல வகையான தனிப்பட்ட செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் வடத்தின் (cabling) பயன்பாட்டுக்கான மாற்றாக உள்ளது.

புளுடூத் சாதனங்கள் தொகு

 
100 மீ வரம்புடைய ஒரு புளுடூத் USB டாங்கிள்.

தொலைபேசிகள், Wii, ப்ளேஸ்டேஷன் 3, Lego மைண்ட்ஸ்ட்ராம்ஸ் NXT (Lego Mindstorms NXT) மற்றும் சமீபத்தில் சில உயர் தொழில்நுட்பமுள்ள கடிகாரங்கள்[மேற்கோள் தேவை], மோடம்கள் மற்றும் தலையணிகள் (headsets) போன்ற பல தயாரிப்புகளில் புளுடூத் உள்ளது. குறைந்த-கற்றையகல சூழல்களில் ஒன்றுக்கொன்று அருகிலுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்களுக்கிடையே தகவலை பரிமாறிக்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் பயன்மிக்கது. பொதுவாக புளுடூத் தொழில்நுட்பம் தொலைபேசிகளில் (அதாவது, ஒரு புளுடூத் தலையணியின் உதவியுடன்) ஒலித் தரவைப் பரிமாறிக்கொள்ள அல்லது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கணினிகளில் (கோப்புகளைப் பரிமாறிக்கொள்ள) பைட் தரவைப் பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது.

சாதனங்களுக்கிடையே சேவைக் கண்டறிதல் மற்றும் சேவை அமைப்பதை புளுடூத் நெறிமுறைகள் எளிதாக்குகின்றன. புளுடூத் சாதனங்கள் தாம் வழங்கும் சேவைகள் அனைத்தையும் எளிதில் விளம்பரம் படுத்தக்கூடியவை. பாதுகாப்பு, நெட்வொர்க் முகவரி மற்றும் அனுமதி உள்ளமைப்பு போன்ற பெரும்பாலானவற்றை பிற நெட்வொர்க் வகைகளை விட மிகுந்த தானியங்குத் தன்மையுடன் செயல்பட வைக்க முடியும் என்பதால் சேவைகளைப் பயன்படுத்துவது எளிதாகிறது.

வை-ஃபை தொகு

வை-ஃபை (Wi-Fi) என்பது ஒரு பழமையான ஈத்தர்நெட் நெட்வொர்க் ஆகும். பகிரப்பட்ட வளங்களை அமைக்கவும் கோப்புகளை அனுப்பவும் ஆடியோ இணைப்புகளை அமைக்கவும் (எடுத்துக்காட்டுக்கு, தலையணிகள் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனங்கள்) இதற்கு உள்ளமைப்பு தேவைப்படுகிறது. புளுடூத் பயன்படுத்தும் ரேடியோ அதிர்வெண்களையே வை-ஃபை (Wi-Fi) தொழில்நுட்பமும் பயன்படுத்துகிறது. ஆனால் இதில் அதிக ஆற்றல் பயன்படுத்தப்படுவதால் வலிமையான இணைப்பு சாத்தியமாகிறது. வை-ஃபை (Wi-Fi) என்பது சில நேரம் "கம்பியில்லா ஈத்தர்நெட்" (wireless Ethernet) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் ஒப்புமை வலிமைகள் மற்றும் பலவீனங்களைக் குறிப்பிடுவதால், இந்த விளக்கம் மிகத் துல்லியமானது. வை-ஃபை (Wi-Fi) தொழிநுட்பத்திற்கு கூடுதல் அமைப்பு தேவைப்படுகிறது. முழு-அளவிலான நெட்வொர்க்குகளை இயக்க இது மிகவும் பொருத்தமானது; மேலும் இது புளுடூத்தை விட வேகமான இணைப்பை உண்டாக்க உதவுகிறது, பேஸ் ஸ்டேஷனிலிருந்து சிறந்த வரம்பையும் மற்றும் சிறந்த பாதுகாப்பையும் வழங்குகிறது.

கணினி தேவைகள் தொகு

 
ஒரு சராசரி புளுடூத் USB டாங்கிள்.
 
மடிக்கணினி புளுடூத் கார்டு (14×36×4 மிமீ).

ஒரு தனிநபர் கணினி, (கைபேசி சுட்டிகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற) பிற புளுடூத் சாதனங்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ள அதில் புளுடூத் அடாப்டர் (adapter) இருக்க வேண்டும். சில மேசைக் கணினிகளும் சமீபத்திய மடிக்கணினிகளும் ஓர் உள்ளமைக்கப்பட்ட புளுடூத் அடாப்டருடன் கிடைக்கின்றன, பிற கணினிகளுக்கு தனியாக டாங்கிள் (dongle) வடிவத்தில் ஓர் அடாப்டர் தேவைப்படும்.

அதற்கு முன்பிருந்த IrDA க்கு, ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு தனி அடாப்டர் தேவைப்படும், ஆனால் புளுடூத் தொழில்நுட்பத்தில் பல சாதனங்கள் கணினியுடன் ஒரு அடாப்டர் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும்.

இயக்க முறைமை ஆதரவு தொகு

Apple, 2002 ஆம் ஆண்டில் வெளியிட்ட மேக் ஓஎஸ் எக்ஸ் வி10.2 (Mac OS X v10.2) இலிருந்து புளுடூத்தை ஆதரிக்கிறது.[4]

மைக்ரோசாஃப்ட் (Microsoft) தளத்தில் விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 மற்றும் அதற்குப் பின்னர் வந்த வெளியீடுகள் அனைத்தும் புளுடூத்துக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவுடன் வெளிவந்தன. முந்தைய பதிப்புகளுக்கு, பயனர்கள் புளுடூத் அடாப்டர்களுக்கான இயக்கிகளைத் தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது அவை மைக்ரோசாஃப் (Microsoft) நிறுவனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை. [21] மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் (Microsoft) புளுடூத் டாங்கிள்கள் (புளுடூத் கணினி சாதனங்களின் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட்டவை) வெளிப்புற சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை ஆகவே அவற்றுக்கு குறைந்தபட்சம் விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 (Windows XP Service Pack 2) தேவைப்பட்டது.

லினக்ஸில் (Linux) இரண்டு பிரபலமான புளுடூத் செயல்படுத்தல் நெறிமுறைகள் இருந்தன. அவை ப்ளூஸ் (BlueZ) மற்றும் அஃபிக்ஸ் (Affix) ஆகியவையாகும். ப்ளூஸ் (BlueZ) [22] செயல்படுத்தல் நெறிமுறைகள் பெரும்பாலான லினக்ஸ் (Linux) கெர்னல்களில் (kernels) உள்ளமைக்கப்பட்டிருந்தன. மேலும் அது குவால்கம் (Qualcomm) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அஃபிக்ஸ் (Affix) செயல்படுத்தல் நெறிமுறை நோக்கியா (Nokia) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. FreeBSD இல் அதன் 5.0 வெளியீட்டில் இருந்து புளுடூத் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. NetBSD இல் அதன் 4.0 வெளியீட்டில் இருந்து புளுடூத் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அதன் புளுடூத் செயல்படுத்தல் நெறிமுறை OpenBSD இல் அமைக்கப்பட்டுள்ளது.

கைபேசி தேவைகள் தொகு

புளுடூத் செயல்படுத்தப்பட்ட ஒரு கைபேசி பல சாதனங்களுடன் இணை சேர முடியும். சிறந்த சாதன ஆதரவுடன் அம்ச செயலம்சத்திற்கான பரவலான ஆதரவுக்காக தி ஓபன் மொபைல் டெர்மினல் தளத்தின் (OMTP) மன்றம் சமீபத்தில், "புளுடூத் அக இணைப்புத்தன்மை" எனத் தலைப்பிடப்பட்ட ஒரு பரிந்துரைத் தாளை வெளியிட்டுள்ளது; அந்தத் தாளைப் பதிவிறக்க கீழே உள்ள புற இணைப்புகள் பிரிவைப் பார்க்கவும்.

குறிப்புவிவரங்கள் மற்றும் அம்சங்கள் தொகு

புளுடூத் குறிப்புவிவரம் 1994 ஆம் ஆண்டில் ஜாப் ஹார்ட்ஸன் மற்றும் ஸ்வென் மேட்டிஸன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஸ்வீடனில் உள்ள லண்ட் என்ற இடத்திலுள்ள எரிக்சன் மொபைல் தளங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.[5] குறிப்புவிவரமானது அதிர்வெண்-துள்ளல் பரப்புக் கற்றை தொழில்நுட்பத்தை (Frequency-hopping spread spectrum technology) அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் குறிப்புவிவரங்கள் புளுடூத் சிறப்பார்வக் குழுவால் (சிறப்பார்வக் குழு-SIG) முறைப்படுத்தப்பட்டன. SIG முறையாக 1998 ஆம் ஆண்டு மே 20 அன்று அறிவிக்கப்பட்டது. தற்போது உலகளவில் 11,000 நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. எரிக்சன் (Ericsson), ஐபிஎம் (IBM), இண்டெல் (Intel), தோஷிபா (Toshiba) மற்றும் நோக்கியா (Nokia) ஆகிய நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்கின. பின்னர் பல பிற நிறுவனங்கள் இணைந்தன.

புளுடூத் 1.0 மற்றும் 1.0B தொகு

இதன் 1.0 மற்றும் 1.0B ஆகிய பதிப்புகள் பல சிக்கல்களைக் கொண்டிருந்தன, உற்பத்தியாளர்கள் அவர்களின் தயாரிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் சிரமப்பட்டனர். 1.0 மற்றும் 1.0B ஆகிய பதிப்புகளும் இணைத்தல் செயல்பாட்டில் கட்டாய புளுடூத் வன்பொருள் சாதன முகவரி (BD_ADDR) பரப்பலைக் கொண்டிருந்தன (நெறிமுறை மட்டத்தில் பெயர் தெரியாத வகையில் ரெண்டர் செய்வது என்பது சாத்தியமற்றதாக இருந்தது). இது புளுடூத் சூழல்களில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த குறிப்பிட்ட சேவைகளுக்கு ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது.

புளுடூத் 1.1 தொகு

 • IEEE தரநிலை 802.15.1-2002 என சான்றளிக்கப்பட்டது.
 • 1.0B குறிப்புவிவரங்களில் கண்டறியப்பட்ட பல பிழைகள் சரிசெய்யப்பட்டன.
 • குறியாக்கம் செய்யப்படாத சேனல்களுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டது.
 • பெறப்பட்ட சமிக்ஞை வலிமை அறிவிப்பான் (RSSI).

புளுடூத் 1.2 தொகு

இந்தப் பதிப்பு 1.1 பதிப்புடன் பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டதாக இருந்தது. மேலும் முக்கியமான மேம்பாடுகள் பின்வருமாறு:

 • வேகமான இணைப்பு மற்றும் கண்டறிதல்
 • பொருந்தும் அதிர்வெண்-துள்ளல் பரப்புக் கற்றை (AFH) , இந்தப் பண்பேற்றம் துள்ளல் தொடரில் உள்ள தொகுப்பு அதிர்வெண்களின் பயனைத் தவிர்ப்பதன் மூலம் ரேடியோ அதிர்வெண் குறுக்கீட்டுக்கான தடையை மேம்படுத்துகிறது.
 • நடைமுறையில் 1.1 பதிப்பினை விட 721 kbit/s வரையிலான உயர் பரப்பல் வேகங்கள்.
 • நீட்டிக்கப்பட்ட ஒத்திசைந்த இணைப்புகள் (eSCO), இது சிதைந்த தொகுப்புகளை மீண்டும் பரப்புதல் செய்ய அனுமதிப்பதன் மூலம் ஆடியோ இணைப்புகளின் குரல் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும் அதே நேரத்தில் ஒரே நேரத்திலான தரவுப் பரிமாற்றத்திற்கு சிறந்த ஆதரவளிக்க ஆடியோ தாமதத்தன்மையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
 • மூன்று-வைர் (three-wire UART) UART க்கான ஹோஸ்ட் கண்ட்ரோலர் இடைமுக (HCI) ஆதரவு.
 • IEEE தரநிலை 802.15.1-2005 என சான்றளிக்கப்பட்டது.
 • L2CAP க்கான செயல்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் மீண்டும் பரப்புதல் பயன்முறைகளை அறிமுகப்படுத்தியது.

புளுடூத் 2.0 தொகு

புளுடூத் குறிப்புவிவரத்தின் இந்தப் பதிப்பு 2004 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது. இது முந்தைய பதிப்பு 1.2 உடன் பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டது. வேகமான தரவுப் பரிமாற்றத்திற்கான மேம்படுத்தப்பட்ட தரவு வீதமே (EDR) இதிலுள்ள முக்கியமான வேறுபாடு ஆகும். EDR இன் சராசரி வீதம் சுமார் வினாடிக்கு 3 மெகாபிட்களாகும் இருப்பினும் நடைமுறையில் அதன் தரவுப் பரிமாற்ற வீதம் வினாடிக்கு 2.1 மெகாபிட்களாகும். [26] தரவுப் பரப்பலுக்கான ஒரு வித்தியாசமான ரேடியோ தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் வெளியீடு-உள்ளீடு விகிதம் பெறப்படுகிறது. தரநிலையான, அல்லது அடிப்படை வீத பரப்பலானது 1 Mbit/s என்ற மொத்த பரப்புத் தரவு வீதத்திலான ரேடியோ சமிக்ஞையின் காஸியன் அதிர்வெண்-மாற்றப் பண்பேற்றத்தைப் (GFSK) பயன்படுத்துகிறது. π/4-DQPSK மற்றும் 8DPSK ஆகிய இரண்டு மாறிகளுடனான, GFSK மற்றும் கட்ட-மாற்றப் பண்பேற்றம் (PSK) ஆகியவற்றின் சேர்க்கையை EDR பயன்படுத்துகிறது. இவை முறையே 2 மற்றும் 3 Mbit/s என்னும் மொத்தப் பரப்பல் தரவு வீதங்களைக் கொண்டவை.[6]

2.0 குறிப்புவிவரத்தின் படி, பின்வரும் நன்மைகளை EDR வழங்குகிறது:

 • மூன்று மடங்கு பரப்பல் வேகம் — சில சமயங்களில் 10 மடங்கு[மேற்கோள் தேவை] (2.1 Mbit/s) வரை.
 • கூடுதல் கற்றையகலத்தால் ஒரே நேரத்திலான பல இணைப்புகளின் சிக்கல் குறைக்கப்பட்டுள்ளது.
 • குறைக்கப்பட்ட இயக்க நேர விகிதத்தால் குறைந்த ஆற்றல் நுகர்வு.

புளுடூத் சிறப்பார்வக் குழு (SIG) "புளுடூத் 2.0 + EDR" என்ற பெயரில் குறிப்புவிவரத்தை வெளியிட்டுள்ளது, EDR என்பது விருப்பத்தின் அடிப்படையிலான அம்சம், அது இல்லாமலும் இருக்கலாம் என இந்தப் பெயர் தெரிவிக்கிறது. 2.0 குறிப்புவிவரத்தில் EDR மட்டுமின்றி, சில பிற சிறிய மேம்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும் அந்தத் தயாரிப்புகள் உயர் தரவு வீதத்தை ஆதரிக்காமல் "புளுடூத் 2.0" உடன் இணக்கத்தன்மையுடன் இருப்பவை எனக் கூறப்பட்டது. வணிக ரீதியான சாதனமான, HTC TyTN பாக்கெட் PC தொலைபேசி மட்டுமே அதன் தரவுத் தாளில் "EDR இல்லாத புளுடூத் 2.0" எனக் குறிப்பிட்டுள்ளது.[7]

புளுடூத் 2.1 தொகு

புளுடூத் பிரதான குறிப்புவிவரம் பதிப்பு 2.1 ஆகும். இது பதிப்பு 1.2 உடன் முழுவதுமான பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டது. மேலும் 2007 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று புளுடூத் SIG அதை ஏற்றுக்கொண்டது.[6] இந்தக் குறிப்புவிவரத்தில் பின்வரும் அம்சங்களும் அடங்கும்:

நீட்டிக்கப்பட்ட தேடியறிதல் மறுமொழி (EIR)
இணைப்புக்கு முன்பு சாதனங்களை வடிகட்டு முறையில் தேர்ந்தெடுப்பதற்காக, தேடியறிதல் செயலின் போது கூடுதல் தகவல் வழங்குகிறது. இந்தத் தகவலில் சாதனத்தின் பெயர், அந்தச் சாதனம் ஆதரிக்கும் சேவைகளின் பட்டியல், தேடியறிதல் மறுமொழிகளுக்குப் பயன்படுத்தப்படும் பரப்பல் ஆற்றல் நிலை மற்றும் உற்பத்தியாளர் வரையறுத்த தரவு ஆகியவையும் இருக்கலாம்.
உணர்ந்தறிதல் துணை மதிப்பீடு
சாதனங்கள் குறைந்த ஆற்றல் பயன்முறையில் இருக்கும் போது, குறிப்பாக சமச்சீரற்ற தரவுப் பாய்ச்சல்களுக்கான இணைப்பின் போது, ஆற்றல் நுகர்வைக் குறைக்கிறது. மனித இடைமுக சாதனங்கள் (HID) அதிக நன்மையுடையவை என எதிர்பார்க்கப்படுகின்றன. சுட்டி மற்றும் விசைப்பலகை சாதனங்களில் அவற்றின் பேட்டரியின் (battery) ஆயுள் 10 முதல் 3 மடங்கு அதிகரிக்கிறது.[மேற்கோள் தேவை] இதில், பிற சாதனங்களுக்கு செய்தி அனுப்பும் முன்பு, சாதனங்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் வசதி உள்ளது. முந்தைய புளுடூத் செயல்படுத்தல்களில், செயல்பாடுள்ள செய்திகள் அதிர்வெண்கள் வினாடிக்கு வரையிலான பல மடங்கு கால அளவு என இருந்தன. இதற்கு மாறாக, 2.1 குறிப்புவிவர சாதனங்களின் இணை அவற்றுக்கிடையே உள்ள இந்த மதிப்பை, அடிக்கடி என்று இல்லாமல் 5 வினாடிகளுக்கு அல்லது 10 வினாடிகளுக்கு ஒரு முறை என்று இருக்கும்படி மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.
குறியாக்க இடைநிறுத்தம்/செயல்மீட்பு (EPR)
இது, குறியாக்கத் திறவுகோலுக்குத் தேவைப்படும் புளுடூத் ஹோஸ்டின் மேலாண்மையைக் குறைக்க உதவுகிறது. ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட ACL இணைப்பின் பொறுப்பு மாற்றத்திற்கு குறியாக்கத் திறவுகோலை மாற்றுவது அவசியம் அல்லது 23.3 மணி நேரத்திற்கு ஒரு முறை (ஒரு புளுடூத் நாள்) ஒரு ACL இணைப்பில் குறியாக்கம் செயல்படுத்தப்படும். இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் முன்பு, குறியாக்கத் திறவுகோல் புதுப்பிக்கப்படும் சமயத்தில் புளுடூத் ஹோஸ்ட்டுக்கு புதிய திறவுகோல் உருவாக்கப்படும் போது, குறியாக்கத்தில் ஏற்பட்ட சிறிய இடைவெளியைப் பற்றி தெரிவிக்கப்படும்; இதனால், புளுடூத் ஹோஸ்ட்டானது தரவுப் பரிமாற்றத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது (இருப்பினும், குறியாக்கம் முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெறப்படும் முன்பே குறியாக்கம் தேவைப்படும் தரவு அனுப்பப்பட்டு விடலாம்). EPR அம்சத்தில், புளுடூத் ஹோஸ்ட்டுக்கு இடைவெளி பற்றி தெரிவிப்பதில்லை, மேலும் திறவுகோல் புதுப்பிக்கப்படும் போது, குறியாக்கப்படாத தரவு ஏதும் பரிமாற்றப்படவில்லை என புளுடூத் கண்ட்ரோலர் உறுதி செய்கிறது.
பாதுகாப்பான எளிய இணைசேர்ப்பு (SSP)
இது, பாதுகாப்பின் பயன் மற்றும் வலிமையை அதிகரித்து, புளுடூத் சாதனங்களுக்கான இணைசேர்ப்பு அனுபவத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக இந்த அம்சமே புளுடூத்தின் பயன்பாட்டை அதிகரித்தது.[8]
அருகாமைத் தகவல்தொடர்பு (NFC) ஒத்துழைப்பு
தானியங்கு பாதுகாப்பான புளுடூத் இணைப்புகளை தானாக உருவாக்கும் வசதி உள்ளது. NFC ரேடியோ இடைமுகமும் இருந்தது. இந்த செயலம்சம் SSP இன் ஒரு பகுதியாகும், NFC என்பது இணைசேர்ப்பு தகவலைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு வழியாகும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு தலையணி NFC உள்ள ஒரு புளுடூத் 2.1 தொலைபேசிக்கு அருகில் (ஒரு சில சென்டிமீட்டர்) கொண்டுவருவதன் மூலம் இணைசேர்க்கப்படுதல். ஒரு கைபேசியிலிருந்து அல்லது கேமராவிலிருந்து ஒரு டிஜிட்டல் படச் சட்டத்திற்கு, தொலைபேசி அல்லது கேமராவை அந்த சட்டத்திற்கு அருகில் கொண்டுவருவதன் மூலமே தானியங்கு பதிவேற்றம் செய்வது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.[9][10]

புளுடூத் 3.0 தொகு

3.0 குறிப்புவிவரத்தை [40] 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று Bluetooth SIG ஏற்றுக்கொண்டது. இதன் முக்கியமான புதிய அம்சம் AMP (மாற்று MAC/PHY) ஆகும், ஓர் அதிவேகப் பரிமாற்றமாக 802.11 சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் குறிப்புவிவரத்தில் AMP க்கு 802.11 மற்றும் UWB ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் எதிர்பார்க்கப்பட்டன ஆனால் UWB சேர்க்கப்படவில்லை.[11]

மாற்று MAC/PHY
புளுடூத் பயன்விவரத் தரவை அனுப்ப, மாற்று MAC மற்றும் PHYகளைப் பயன்படுத்த உதவுகிறது. இருப்பினும் சாதனத்தைக் கண்டறிதல், தொடக்க இணைப்பு மற்றும் பயன்வகை உள்ளமைப்பு ஆகியவற்றுக்கு புளுடூத் அலைகள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அதிக அளவு தரவு அனுப்ப வேண்டிய சமயங்களில், தரவை அனுப்ப அதிவேக மாற்று மேக் பிஹெச்வை (MAC PHY) (802.11, பொதுவாக Wi-Fi உடன் சேர்ந்து) பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சாதனங்கள் செயலின்றி இருக்கையில் Bluetooth இன் குறை-ஆற்றல் இணைப்பு முறைகள் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதிக அளவு தரவு அனுப்ப வேண்டிய சமயங்களில், ஒரு பிட்டுக்கான குறை-ஆற்றல் அலைகள் பயன்படுத்தப்படுகிறது.
ஒற்றையனுப்புதல் இணைப்பில்லாத் தரவு
இது ஒரு தனிப்பட்ட L2CAP சேனலை உருவாக்கும் அவசியமின்றி சேவைத் தரவை அனுப்ப உதவுகிறது. இது பயனர் செயல்பாடு மற்றும் மறு-இணைப்பு/தரவுப் பரப்பல் ஆகியவற்றுக்கு இடையே குறைந்த தாமதத் தன்மை தேவைப்படும் பயன்பாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. இது சிறிய அளவிலான தரவுக்கு மட்டுமே பொருத்தமானது.
குறியாக்கத் திறவுகோல் அளவறிதல்
ஒரு புளுடூத் ஹோஸ்ட், குறியாக்கப்பட்ட ACL இணைப்பில் உள்ள குறியாக்கத் திறவுகோலின் அளவை அறிவதற்கு HCI கட்டளைக்கான ஒரு தரநிலையை அறிமுகப்படுத்துகிறது. SIM அணுகல் பயன்விவரத்திற்கு, ஓர் இணைப்பில் பயன்படுத்தப்படும் குறியாக்கத் திறவுகோல் அளவு தேவைப்படுகிறது. ஆகவே பொதுவாக புளுடூத் கண்ட்ரோலர்கள் இந்த அம்சத்தை இல் ஒரு உள்ளமைக்கப்பட்ட நிலையிலேயே வழங்குகின்றன. இப்போது தரநிலையான HCI இடைமுகத்தில் தகவல் கிடைக்கிறது.

புளுடூத் குறை ஆற்றல் தொகு

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று, புளுடூத் SIG முழுவதும் கூடுதல் நெறிமுறைத் தொகுப்புகளுடன் புதிய புளுடூத் குறை ஆற்றல் அம்சத்தை வழங்கியது, அது நடப்பிலுள்ள பிற புளுடூத் நெறிமுறைத் தொகுப்புகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருந்தது. முதலில் இருந்த விப்ரீ (Wibree) Bluetooth ULP (சிறப்பு குறை ஆற்றல்) என்ற பெயர்கள் வழக்கழிந்து இறுதியில் புளுடூத் குறை ஆற்றல் எனப் பெயர் வந்தது.

2007 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று, நோக்கியா (Nokia) மற்றும் Bluetooth SIG ஆகியவை இணைந்து விப்ரீ (Wibree) என்பது, Bluetooth குறிப்புவிவரத்தின் ஒரு பகுதியாகவும் சிறப்பு-குறை ஆற்றல் Bluetooth தொழில்நுட்பமாகவும் இருக்கும் என அறிவித்தன.[12] அழைப்பவர் ID தகவலைக் காட்டும் கடிகாரங்கள், விளையாட்டு சென்சார்களை அணிந்திருப்பவர்உடற்பயிற்சியின் போது அவர்களின் இதயத் துடிப்பு வீதமறிதல் மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகிய சூழல்களில் இது பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவ சாதனங்கள் பணிக் குழுவும் இந்த சந்தைக்கு உதவும் வகையிலான ஒரு மருத்துவ சாதனங்கள் பயன்வகையையும் அதனுடன் தொடர்புடைய நெறிமுறைகளையும் உருவாக்குகிறது. சாதனங்கள் ஒரு ஆண்டு வரையிலான பேட்டரி ஆயுளைப் பெற வேண்டும் என்பதற்காக புளுடூத் குறை ஆற்றல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

எதிர்காலம் தொகு

அலைபரப்பல் சேனல்
இது புளுடூத் தகவல் புள்ளிகளை உருவாக்க உதவுகிறது. இது கைபேசிகளில் புளுடூத் ஐப் பயன்படுத்த வழிகோலும், மேலும் இன்று குறைவாகவே பயன்படுத்தப்படும் பொருள் அனுப்பல் முறைகளின் அடிப்படையிலன்றி, பயனர்கள் தகவல் பெற முயற்சிக்கும் தகவல் புள்ளிகளின் அடிப்படையிலான விளம்பர முறைகள் அம்சத்தையும் வழங்குகிறது.
இட எல்லை மேலாண்மை
பைக்கோநெட் இருப்பிட எல்லைகளின் தானியங்கு உள்ளமைப்புக்கு உதவுகிறது, குறிப்பாக இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்கேட்டர்நெட் (scatternet) சூழல்களில் உதவுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் பயனர்களுக்குத் தெரியக் கூடாது, அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பங்கள் "வேலை செய்ய வேண்டும்."
QoS மேம்பாடுகள்
ஆடியோ மற்றும் வீடியோ தரவை உயர்ந்த தரத்துடன் அனுப்ப உதவுகிறது, குறிப்பாக அதே பைக்கோநெட்டில் சிறந்த டிராஃபிக் வழங்கப்படும் பட்சத்தில்.

AMP க்கான UWB தொகு

புளுடூத் 3.0 இன் அதிவேக (AMP) அம்சம், 802.11 ஐ அடிப்படையாகக் கொண்டது, ஆனால் AMP செயல்முறையானது பிற ரேடியோ அம்சங்களுடனும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. அது முதலில் UWB க்காகவே உருவாக்கப்பட்டது, ஆனால் புளுடூத்திற்காக உருவாகப்பட்ட UWB க்கு பொறுப்பான வை-மீடியா கூட்டணி, மார்ச் 2009 ஆம் ஆண்டில் அதைக் கைவிட்டதாக அறிவித்தது.

2009 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று, வை-மீடியா கூட்டணி, வை-மீடியா புற அலைக் கற்றை (UWB) குறிப்புவிவரங்களுக்கான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்துகொள்வதாக அறிவித்தது. எதிர்கால அதிவேக மற்றும் ஆற்றல் மேம்படுத்தப்பட்ட செயல்படுத்தல்கள் உள்ளிட்ட தனது நடப்பு மற்றும் எதிர்கால குறிப்புவிவரங்கள் அனைத்தையும் வை-மீடியா Bluetooth சிறப்பார்வக் குழு (SIG), கம்பியில்லா USB மேம்படுத்துநர் குழு மற்றும் USB செயல்படுத்துநர் மன்றம் ஆகியோருக்கு மாற்றிக்கொடுக்கும். தொழில்நுட்பம் மாற்றிக்கொடுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்வாக அம்சங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக கொடுத்து முடித்த பின்னர், வை-மீடியா கூட்டணி இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்.[13]

தொழில்நுட்பத் தகவல் தொகு

புளுடூத் நெறிமுறைத் தொகுப்பு தொகு

"புளுடூத் என்பது பிரதான நெறிமுறைகள், கேபிள் இடமாற்று நெறிமுறைகள், தொலைபேசியியல் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் ஏற்கப்பட்ட நெறிமுறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஓர் அடுக்கு நெறிமுறைக் கட்டமைப்பு என வரையறுக்கப்படுகிறது." [49] பின்வருவன அனைத்தும் புளுடூத் தொகுப்புகளுக்குமான கட்டாய நெறிமுறைகளாகும்: LMP, L2CAP மற்றும் SDP. கூடுதலாக பின்வரும் நெறிமுறைகள் உலகளவில் ஆதரிக்கப்படுபவை: HCI மற்றும் RFCOMM.

இணைப்பு மேலாண்மை நெறிமுறை தொகு

இணைப்பு மேலாண்மை நெறிமுறை (LMP) என்பது இரண்டு சாதனங்களுக்கு இடையிலான ரேடியோ இணைப்பின் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுகிறது. மேலும் இது கண்ட்ரோலரில் செயல்படுத்தப்படுகிறது.

தர்க்கவியல் இணைப்புக் கட்டுப்பாடு & இசைவாக்க நெறிமுறை தொகு

தர்க்கவியல் இணைப்புக் கட்டுப்பாடு & இசைவாக்க நெறிமுறை (L2CAP) என்பது இரு வெவ்வேறு உயர் நிலை நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இரண்டு சாதனங்களுக்கு இடையிலான பன்முக தர்க்கவியல் இணைப்புகளுக்குப் பயன்படுகிறது. பரப்பப்படும் தொகுப்புகளுக்கான துண்டாக்கல் மற்றும் மறுதொகுப்பமைத்தல் அம்சங்களை வழங்குகிறது.

அடிப்படைப் பயன்முறையில் இயல்பான MTU க்கு 672 பைட்டுகள் மற்றும் குறைந்தபட்ச கட்டாய ஆதரவுள்ள MTU க்கு 48 பைட்டுகளுடனான 64kB வரையில் உள்ளமைக்கக்கூடிய செலுத்துச்சுமை கொண்டிருக்கும் தொகுப்புகளை L2CAP வழங்குகிறது.

மறுபரப்பல் & பாய்ச்சல் கட்டுப்பாடு பயன்முறைகளில், மறுபரப்பல்கள் மற்றும் CRC சோதனைகளைச் செய்வதன் மூலம், ஒரு சேனலுக்கான நம்பகமான அல்லது ஒத்திசைவற்ற தரவுக்கு ஏற்றபடி L2CAP ஐ உள்ளமைக்க முடியும்.

Bluetooth பிரதான குறிப்புவிவரத்தின் பின்னிணைப்பு 1 இல், பிரதான குறிப்புவிவரத்துடன் இரண்டு கூடுதல் L2CAP பயன்முறைகளைச் சேர்த்துள்ளது. இந்தப் பயன்முறைகள் அசல் மறுபரப்பல் மற்றும் பாய்ச்சல் கட்டுப்பாட்டுப் பயன்முறைகளை வன்மையாக மறுத்தலிக்கின்றன:

 • மேம்படுத்தப்பட்ட மறுபரப்பல் பயன்முறை (ERTM): இந்தப் பயன்முறை அசல் மறுபரப்பல் பயன்முறையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்தப் பயன்முறை ஒரு நம்பகமான L2CAP சேனலை வழங்குகிறது.
 • வார்ப்புப் பயன்முறை (SM): இது ஒரு எளிய பயன்முறையாகும், இதில் மறுபரப்பல் அல்லது பாய்ச்சல் கட்டுப்பாடு ஆகியவை இல்லை. இந்தப் பயன்முறை ஒரு நம்பகமல்லாத L2CAP சேனலை வழங்குகிறது.

இந்தப் பயன்முறைகளில் ஏதேனும் ஒன்றில் உள்ள நம்பகத்தன்மையானது, மறுபரப்பல்களின் எண்ணிக்கை மற்றும் தள்ளுதல் நேர முடிவு (இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னரே, தொகுப்புகளை ரேடியோ அனுப்பும்) ஆகியவற்றை உள்ளமைப்பதன் மூலம் விருப்பத்தின் அடிப்படையில் மற்றும்/அல்லது கூடுதலாக குறை அடுக்கு புளுடூத் BDR/EDR காற்று இடைமுகத்தால் உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஆயத்தமான வரிசையமைத்தல் அம்சத்திற்கு தாழ் அடுக்கு உத்தரவாதமளிக்கிறது.

ERTM அல்லது SM ஆகியவற்றில் உள்ளமைக்கப்பட்ட L2CAP சேனல்களை மட்டுமே AMP தர்க்கவியல் இணைப்புகளின் மூலம் இயக்க முடியும்.

சேவை கண்டறிதல் நெறிமுறை தொகு

சேவை கண்டறிதல் நெறிமுறை (SDP) சாதனங்கள் ஒன்றுக்கொன்று எந்த வகையான சேவைகளை ஆதரிக்கும் மற்றும் அவற்றை இணைக்க என்ன அளவுருக்களைப் பயன்படுத்த வேண்டும் போன்றவற்றைக் கண்டறிய இது பயன்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு கைபேசியை ஒரு புளுடூத் தலையணியுடன் இணைக்கும் போது, எந்த புளுடூத் பயன்வகைகளை அந்தத் தலையணி ஆதரிக்கும் (தலையணி பயன்வகை, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பயன்வகை, மேம்பட்ட ஆடியோ பகிர்ந்தளிப்புப் பயன்வகை போன்றவை) என்பதையும் அவற்றை இணைக்கத் தேவையான நெறிமுறை இணைப்பான் (மல்டிப்ளெக்ஸர்) அமைப்புகளையும் நிர்ணயிக்க SDP பயன்படுகிறது.

ஒவ்வொரு சேவையும் ஒரு ஒட்டுமொத்த தனித்துவ அடையாளங்காட்டியால் (UUID) அடையாளங்காணப்படுகிறது. இதில் (16 பிட்ஸ் முழு 128 பிட்டைக் காட்டிலும்) குறைந்த வகை UUID நிர்ணயிக்கப்பட்ட அலுவலக ரீதியான சேவைகள் (Bluetooth பயன்வகைகள்) வழங்கப்படுகின்றன

ஹோஸ்ட்/கண்ட்ரோலர் இடைமுகம் தொகு

ஹோஸ்ட்/கண்ட்ரோலர் இடைமுகம் (HCI) என்பது ஹோஸ்ட் செயல் தொகுப்புக்கும் (எ.கா., ஒரு PC அல்லது கைபேசி OS) கண்ட்ரோலருக்கும் (புளுடூத் IC) இடையேயான தரநிலையாக்கப்பட்ட தகவல்தொடர்பு ஆகும். இந்த தரநிலையே ஹோஸ்ட் செயல்படுத்தல் நெறிமுறை அல்லது கண்ட்ரோலர் IC குறைந்தபட்ச ஏற்பில் ஒன்றையொன்று மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.

பல HCI பரப்பல் அடுக்குத் தரநிலைகள் உள்ளன ஒரே கட்டளை, நிகழ்வு மற்றும் தரவுத் தொகுப்புகளை அனுப்ப ஒவ்வொன்றும் ஒரு வேறுபட்ட வன்பொருள் இடைமுகத்தைப் பயன்படுத்துகின்றன. USB (PCகளில்) மற்றும் UART(கைபேசிகள் மற்றும் PDAகளில்) ஆகியவையே பொதுவாக பெரும்பாலும் பயன்படுபவையாகும்.

எளிய செயலம்சத்தைக் கொண்டுள்ள புளுடூத் சாதனங்களில் (எ.கா., தலையணிகள்) ஹோஸ்ட் செயல் தொகுப்பும் கண்ட்ரோலரும் ஒரே மைக்ரோப்ராசசரில் செயல்படுத்தப்பட முடியும். இந்த சூழலில் HCI என்பது ஓர் அக மென்பொருள் இடைமுகமாகச் செயல்படுத்தப்பட்டாலும் அது விருப்பத்தின் அடிப்படையிலானது.

கேபிள் இடமாற்று நெறிமுறை தொகு

ரேடியோ அதிர்வெண் தகவல்தொடர்புகள் (RFCOMM) என்பது ஒரு கற்பனை தரவுத் தொகுப்போடைத் தொடரை உருவாக்கப் பயன்படும் கேபிள் இடமாற்று நெறிமுறை ஆகும். RFCOMM பைனரி தரவுப் பரிமாற்ற அம்சத்தை வழங்குகிறது. மேலும் புளுடூத் அடிப்படைக்கற்றை அடுக்கிலான EIA-232 (முன்னர் RS-232 என அறியப்பட்டது) கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்குப் போட்டியாக உள்ளது.

RFCOMM தொழில்நுட்பமானது TCP ஐப் போலவே பயனருக்கு ஒரு எளிய நம்பகமான தரவுத் தொகுப்பைவழங்குகிறது. பல தொலைபேசியியல் தொடர்பான பயன்வகைகளில் AT கட்டளைகளுக்கான ஒரு கேரியராக அது பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அது ஒரு புளுடூத் வழியாக OBEX பயண அடுக்காகவும் விளங்குகிறது.

RFCOMM இன் பரந்துபட்ட ஆதரவு மற்றும் பெரும்பாலான இயக்க முறைமைகளுக்கான API பொதுவாகக் கிடைத்தல் போன்ற காரணங்களால் பல புளுடூத் பயன்பாடுகள் RFCOMM ஐப் பயன்படுத்துகின்றன. கூடுதலாக தகவல்தொடர்புக்கு ஒரு தொடர் முனையத்தைப் பயன்படுத்திய பயன்பாடுகள் RFCOMM இன் பயனை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

புளுடூத் நெட்வொர்க் மூடியசூழல் நெறிமுறை தொகு

புளுடூத் நெட்வொர்க் மூடியசூழல் நெறிமுறை (BNEP) என்பது பிற நெறிமுறை செயல் தொகுப்புகளின் தரவை ஒரு L2CAP சேனல் வழியே அனுப்ப BNEP பயன்படுகிறது.

தனிப்பட்ட பரப்பு நெட்வொர்க்கிங் பயன்வகையில் IP தொகுப்புகளைப் பரப்புதலே அதன் முக்கியமான பயனாகும். கம்பியில்லா LAN இல் உள்ள SNAP செயல்பாட்டை ஒத்த செயல்பாட்டையே BNEP பயன்படுத்துகிறது.

ஆடியோ/காட்சி கட்டுப்பாடு பரப்புதல் நெறிமுறை தொகு

ஆடியோ/காட்சி கட்டுப்பாடு பரப்புதல் நெறிமுறை (AVCTP) என்பது தொலைநிலைக் கட்டுப்பாட்டுப் பயன்வகை AV/C கட்டளைகளை ஒரு L2CAP சேனல் வழியாக அனுப்பப் பயன்படுகிறது. ஒரு ஸ்டீரியோ (stereo) தலையணியில் உள்ள இசைக் கட்டுப்பாட்டு பொத்தான்கள் மியூஸிக் ப்ளேயரைக் கட்டுப்படுத்த இந்த நெறிமுறையைப் பயன்படுத்துகின்றன

ஆடியோ/காட்சி தரவு பரப்புதல் நெறிமுறை தொகு

ஆடியோ/காட்சி தரவு பரப்புதல் நெறிமுறை (AVDTP) என்பது மேம்பட்ட ஆடியோ பகிர்ந்தளிப்புப் பயன்வகை L2CAP சேனல் வழியாக இசையை ஸ்டீரியோ தலையணிக்கு தொடர்ந்து அனுப்புவதாகும். வீடியோ பகிர்ந்தளிப்புப் பயன்வகையில் பயன்படுவதற்காக உருவாக்கப்பட்டது.

தொலைபேசி கட்டுப்பாட்டு நெறிமுறை தொகு

தொலைபேசியியல் கட்டுப்பாட்டு நெறிமுறை-பைனரி (TCS BIN) என்பது புளுடூத் சாதனங்களிடையே குரல் மற்றும் தரவு அழைப்புகளை நிறுவ, அழைப்புக் கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை வரையறுக்கும் பிட்-அடிப்படையிலான நெறிமுறையாகும். கூடுதலாக "புளுடூத் TCS சாதனங்களின் தொகுப்புகளைக் கையாள்வதற்கான நகர்தன்மை மேலாண்மை வழிமுறைகளை TCS BIN வரையறுக்கிறது."

கார்ட்லெஸ் தொலைபேசிப் பயன்வகையில் மட்டுமே TCS-BIN பயன்படுகிறது. அது செயல்படுத்துநர்களைக் கவரத் தவறியது. இவ்வாறு வரலாற்றில் இருந்த ஒரு ஆர்வமாக மட்டுமே விளங்குகிறது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் தொகு

ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் பிற தரநிலைகள்-உருவாக்க நிறுவனங்களால் வரையறுக்கப்படுகின்றன, மேலும் புளுடூத்தின் நெறிமுறை செயல்தொகுப்பில் பொருத்தப்படுகின்றன. இதனால் தேவையான போது மட்டுமே புளுடூத் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும். ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளில் இவையும் அடங்கும்:

நேரிணைப்பு நெறிமுறை (PPP)
IP தரவுவிளக்கங்களை நேர் இணைப்புகளிடையே அனுப்பப் பயன்படும் இணையத் தரநிலை நெறிமுறை
TCP/IP/UDP
TCP/IP நெறிமுறைத் தொகுப்புக்கான அடிப்படை நெறிமுறைகள்
கூறுப் பரிமாற்ற நெறிமுறை (OBEX)
கூறுகள் பரிமாற்றத்திற்கான அமர்வு-அடுக்கு நெறிமுறை, இது கூறு மற்றும் செயல்பாட்டு விளக்கத்திற்கான ஒரு மாதிரியை வழங்குகிறது
கம்பியில்லாப் பயன்பாடு சூழல்/கம்பியில்லாப் பயன்பாடு நெறிமுறை (WAE/WAP)
கம்பியில்லா சாதனங்களுக்கான பயன்பாட்டுக் கட்டமைப்பை WAE குறிப்பிடுகிறது. மேலும் WAP ஒரு திறந்தநிலைத் தரநிலையாகும். இதனால் மொபைல் பயனர்கள் தொலைபேசி மற்றும் தகவல் சேவைகளுக்கான அணுகலைப் பெற முடிகிறது.

தகவல்தொடர்பு மற்றும் இணைப்பு தொகு

ஒரு முதன்மை புளுடூத் சாதனம் கம்பியில்லா பயனர் குழுவில் உள்ள சுமார் ஏழு சாதனங்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். எட்டு வரையிலான சாதனங்களைக் கொண்டுள்ள இந்த நெட்வொர்க் குழுவை பைக்கோநெட் (piconet) என்பர்.

ஒரு பைக்கோநெட் (piconet) என்பது தனிப்பயனுக்கான ஒரு கணினி நெட்வொர்க் ஆகும், அது ஒரு பிரதான சாதனம் சுமார் ஏழு வரையிலான பிற செயலிலுள்ள சாதனங்களுடன் இணைய புளுடூத் தொழில்நுட்ப நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறது. மேலும் 255 வரையிலான கூடுதல் சாதனங்களையும் அது நிர்வகிக்கலாம். அவை செயலில்லாமல் அல்லது ஓய்வில் வைத்திருக்கப்பட வேண்டும். பிரதான சாதனம் எந்த நேரமும் அவற்றைச் செயல்படவைக்க முடியும்.

பிரதான மற்றும் பிற சாதனங்களிடையே எந்த நேரத்திலும் தரவு பரிமாற்றம் செய்ய முடியும், இருப்பினும் சாதனங்கள் அவற்றின் பதவிகளையும் மாற்றிக்கொள்ளலாம். இரண்டாம் நிலை சாதனம் எந்த நேரத்திலும் பிரதான சாதனமாக மாறலாம். பிரதான சாதனம் ஒவ்வொரு சாதனத்திலும் இருந்து மாறி மாறி வட்டமடிக்கும் முறையில் சுற்றி வரும். (பிரதான சாதனத்திலிருந்து பிற பல சாதனங்களுக்கு ஒரே நேரத்தில் தகவல் பரப்ப முடியும், ஆனால் அவ்வாறு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.)

புளுடூத் குறிப்புவிவரத்தில், இரண்டு அல்லது மேற்பட்ட பைக்கோநெட்களை இணைத்து ஒரு ஸ்கேட்டர்நெட்டை உருவாக்க முடியும். இதில் சில சாதனங்கள் ஒரு பைக்கோநெட்டில் பிரதான சாதனமாகவும் அதே நேரம் மற்றொன்றில் இரண்டாம் நிலை சாதனமாகவும் செயல்பட்டு ஒரு பாலமாக செயல்படும்.

பல USB புளுடூத் அடாப்டர்கள் கிடைக்கின்றன, அவற்றில் சிலவகைகளில் IrDA அடாப்டரும் சேர்ந்திருக்கும். இருப்பினும் பழைய (2003க்கு முந்தைய) புளுடூத் அடாப்டர்கள், குறைவான சேவைகளை மட்டுமே வழங்கின. தனிச் சாதன புளுடூத் அம்சம் மற்றும் குறை-ஆற்றலுள்ள் புளுடூத் ரேடியோ வடிவம் ஆகியவற்றையே அவை கொண்டிருந்தன. இது போன்ற சாதனங்கள் கணினிகளை புளுடூத் மூலம் இணைக்க முடியும். ஆனால் இவை நவீன அடாப்டர்கள் வழங்குமளவுக்கு பல சேவைகளை வழங்குவதில்லை.

அடிப்படைக்கற்றை பிழைத்திருத்தம் தொகு

புளுடூத் முறைமைகளில் மூன்று வகையான பிழைத்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இணைப்புகளை அமைத்தல் தொகு

எந்த புளுடூத் சாதனமும் தேவைப்படும் போது பின்வரும் தகவல்களை அனுப்ப முடிய வேண்டும்:

 • சாதனத்தின் பெயர்.
 • சாதனத்தின் வகை.
 • சேவைகளின் பட்டியல்.
 • சாதன அம்சங்கள், உற்பத்தியாளர், பயன்படுத்தப்படும் புளுடூத் குறிப்புவிவரம் மற்றும் கடிகார நிரப்பு மீதம் போன்ற தொழில்நுட்பத் தகவல்கள்.

எந்த சாதனமும் இணைப்பதற்குப் பிற சாதனங்களைத் தேடியறிய முடியும் மேலும் எந்தச் சாதனமும் அது போன்ற தேடியறிதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளமைக்கப்பட முடியும். இருப்பினும் இணைக்க முயற்சிக்கும் சாதனம் அந்தச் சாதனத்தின் முகவரியை அறியுமெனில் அது எப்போதும் நேரடி இணைப்புக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவும், தேவைப்படும் போது மேலே உள்ள பட்டியல்களில் உள்ள தகவகளை அனுப்பவும் முடியும். சாதனத்தின் சேவைகளைத் தேடியறியும் செயலின் போது, அதன் உரிமையாளரின் ஒப்புதல் அல்லது இணைசேர்ப்பு ஆகியவை தேவைப்படலாம். ஆனால் அந்தச் சாதனம் வரம்பெல்லைக்குள் இருக்கும் வரை இணைப்பு உண்டாக்குவது எப்போதும் சாத்தியமே. சில சாதனங்கள் ஒரு நேரத்தில் ஒரே ஒரு சாதனத்துடன் மட்டுமே இணைய முடியும். மேலும் அதனுடன் இணைவதால் அந்த ஒரு சாதனத்திலிருந்து இணைப்பு துண்டிக்கப்படும் வரை பிற சாதனங்களுடன் இணைவதும் பிற சாதனங்களின் விசாரணையில் புலப்படுவதும் தடுக்கப்படும்.

ஒவ்வொரு சாதனமும் ஒரு தனிப்பட்ட 48-பிட் முகவரியைக் கொண்டிருக்கும். இருப்பினும் இந்த முகவரிகள் பொதுவாக சாதன விசாரணைகளில் காண்பிக்கப்படாது. மாறாக எளிய புளுடூத் பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பயனரே அமைத்துக்கொள்ளலாம். பிற பயனர் சாதனங்களைத் தேடும் போதும் இணைசேர்க்கப்பட்ட சாதனங்களின் பட்டியலிலும் இந்தப் பெயரே காண்பிக்கப்படுகிறது.

பெரும்பாலான தொலைபேசிகள் இயல்பாக புளுடூத் பெயராக அதன் உற்பத்தியாளர் மற்றும் மாடல் பெயரையே கொண்டுள்ளன. பெரும்பாலான தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் Bluetooth பெயர்களை மட்டுமே காண்பிக்கும் மேலும் தொலைநிலை சாதனங்கள் பற்றிய கூடுதல் தகவல் பெற சிறப்பு நிரல்கள் தேவைப்படும். இது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு வரம்பெல்லைக்குள் T610 என்ற பெயரில் பல தொலைபேசிகள் இருக்கலாம் (பார்க்க புளுஜாக்கிங்).

இணைசேர்ப்பு தொகு

சாதனங்களின் இணைசேர்ப்பால், இணைப்புத் திறவுகோல் எனப்படும் பகிரப்பட்ட ரகசியத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு தொடர்பை நிறுவ முடியும். இந்தச் செயல்பாடு இணைசேர்ப்பு என அழைக்கப்படுகிறது. ஓர் இணைப்புத் திறவுகோலை இரண்டு சாதனங்களும் சேமித்து வைத்துக்கொண்டால், அவை பிணைக்கப்பட்டவை எனப்படும். ஒரு பிணைக்கப்பட்ட சாதனத்துடன் மட்டுமே தகவல் பரிமாறிக்கொள்ள விரும்பும் சாதனம் பிற சாதனத்தின் அடையாளத்தை குறியாக்கவியல் முறையில் அங்கீகரித்துக்கொள்ளலாம். மேலும் இதனால் அது முன்னரே இணைசேர்க்கப்பட்ட அதே சாதனம் தான் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஓர் இணைப்புத் திறவுகோல் உருவாக்கப்பட்டுவிட்டால் அந்த சாதனங்களிடையே அங்கீகரிக்கப்பட்ட ACL இணைப்பைக் குறியாக்கம் செய்ய முடியும் இதனால் வெளியில் பரப்பப்படும் தரவு பிறரால் ஒட்டுக்கேட்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

இணைப்புத் திறவுகோல்களை இரண்டில் எந்த சாதனமும் எந்த நேரத்திலும் அழிக்க முடியும், இவ்வாறு ஏதேனும் ஒரு சாதனம் இப்படி திறவுகோலை அழித்துவிட்டால் அவற்றுக்கிடையே உள்ள பந்தம் கண்டிப்பாக நீக்கப்படும்; இதனால் ஓர் இணைப்புத் திறவுகோலைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சாதனம் நடப்பில் அது முன்னர் பிணைக்கப்பட்டிருந்த சாதனத்துடன் இணைப்பில் இல்லாமல் போனதை அறியாமலே இருக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக புளுடூத் சேவைகளுக்கு, ஒரு தொலைநிலை சாதனத்துடன் சேவையை வழங்க அனுமதிக்கும் முன்பு இணைசேர்க்கும் கட்டாயம் போன்ற குறியாக்கம் அல்லது அங்கீகரிப்பு தேவைப்படுகிறது. கூறு அனுப்பும் பயன்வகை போன்ற சில சேவைகளில் அங்கீகரிப்பு அல்லது குறியாக்கம் போன்ற தேவைகள் இல்லை. இதனால் பயனர் சேவை பயன்பாட்டு சந்தர்ப்பங்களிலான அனுபவத்தில் இணைசேர்ப்பு என்ற குறுக்கீடு இருப்பதில்லை.

புளுடூத் 2.1. இல் பாதுகாப்பான எளிய இணைசேர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இணைசேர்ப்பு செயலமைப்புகள் பெருமளவு மாறிவிட்டன பின்வரும் பத்திகள் இணைசேர்ப்பு செயலமைப்புகளை விளக்கும்:

 • மரபுவழி இணைசேர்ப்பு : புளுடூத் 2.1 வெளியிடப்படும் முன்பு இந்த ஒரு முறை மட்டுமே இருந்தது. ஒவ்வொரு சாதனமும் ஒரு PIN குறியீட்டை உள்ளிட வேண்டும், இரண்டு சாதனங்களும் ஒரே PIN குறியீட்டை உள்ளிட்டால் மட்டுமே இணைசேர்ப்பு வெற்றிகரமாக முடியும். 16-இலக்க ACSII சரம் எதனையும் ஒரு PIN குறியீடாகப் பயன்படுத்தலாம், இருப்பினும் அனைத்து சாதனங்களும் எல்லா PIN குறியீடுகளையும் உள்ளிட முடியாது.
  • வரையறுக்கப்பட்ட உள்ளீட்டு சாதனங்கள் : புளுடூத் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ தலையணி, இந்த வகை சாதனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும், பொதுவாக அதில் சில உள்ளீடுகளே சாத்தியம். இந்த சாதனங்கள் வழக்கமாக ஒரு நிலையான PIN ஐக் கொண்டிருக்கும், எடுத்துக்காட்டாக "0000" அல்லது "1234", அவை வன்பொருள் மட்டத்தில் அந்தச் சாதனத்தில் குறியாக்கப்பட்டிருக்கும்.
  • எண் உள்ளீட்டு சாதனங்கள் : கைபேசிகள் இந்த வகை சாதனங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அவற்றில் ஒரு பயனர் 16 இலக்கங்கள் வரையிலுள்ள ஓர் எண் மதிப்பை உள்ளிட முடியும்.
  • எண்-எழுத்து உள்ளீட்டு சாதனங்கள் : PCகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் இவ்வகைச் சாதனங்களைச் சேர்ந்தவை. அவை ASCII உரை முழுவதையும் ஒரு PIN குறியீடாக ஒரு பயனர் உள்ளிட அனுமதிக்கும். குறைந்த ஏற்புத்திறனுள்ள சாதனத்துடன் இணைசேர்ப்பதானால் பிற சாதனத்தின் உள்ளீட்டு கட்டுப்பாடுகளைப் பற்றி பயனர் கவனமாக இருக்க வேண்டும், ஒரு தகுதியுள்ள சாதனம் ஒரு பயனர் பயன்படுத்தக்கூடிய உள்ளீட்டை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் செயல்முறை இதுவரை இல்லை.
 • பாதுகாப்பான எளிய இணைசேர்ப்பு : புளுடூத் 2.1 இல் இது அவசியம். ஒரு புளுடூத் 2.1 சாதனம், ஒரு 2.0 அல்லது பழைய சாதனத்துடன் இணைந்தியங்கக்கூடிய மரபு இணைசேர்ப்பை மட்டுமே பயன்படுத்தக்கூடும். பாதுகாப்பான எளிய இணைசேர்ப்பு, ஒரு பொது திறவுகோல் குறியாக்கமுறையைப் பயன்படுத்துகிறது, மேலும் பின்வரும் செயல்பாட்டுப் பயன்முறைகளைக் கொண்டுள்ளது:
  • வெறும் செயல்பாடு : பெயருக்கேற்றார்போல, இந்த முறை செயல்படும், அவ்வளவு தான். பயனர் இடைசெயல் தேவைப்படுவதில்லை; இருப்பினும், ஒரு சாதனம் இணைசேர்ப்பு செயல்பாட்டை உறுதிப்படுத்துமாறு பயனரைக் கேட்கலாம். இந்த முறை பொதுவாக மிகக் குறைந்த IO தகுதிகள் கொண்ட தலையணிகளுக்குப் பயன்படுகிறது. மேலும் இந்த வகையான வறையறுக்கப்பட்ட சாதனங்களுக்கான வழக்கமான நிலையான PIN செயல்முறையின் பாதுகாப்பை விட மிகவும் பாதுகாப்பானது. இந்த முறை இடை மனித ஒட்டுக்கேட்டலிலிருந்து (MITM) பாதுகாப்பை வழங்குகிறது.
  • எண் ஒப்பீடு : இரு சாதனங்களிலும் காட்சித்திரை வசதி இருந்தும், அதில் ஒன்றேனும் ஒரு பைனரி ஆம்/இல்லை பயனர் உள்ளீட்டை ஏற்க முடியும் எனில் அவை எண் ஒப்பீடு முறையைப் பயன்படுத்த முடியும். இந்த முறையில் ஒவ்வொரு சாதனத்திலும் ஒரு 6-இலக்க எண் குறியீடு காண்பிக்கப்படும். அவை ஒன்றே தானா என்பதை உறுதிப்படுத்த, பயனர் எண்களை ஒப்பிட வேண்டும். ஒப்பீட்டில் அது வெற்றிபெற்றால், பயனர்(கள்) உள்ளீட்டை அனுமதிக்கும் சாதனங்களுக்கான இணைசேர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். பயனர் இரண்டு சாதனங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளார் மற்றும் சரியாக ஒப்பீட்டைச் செய்துள்ளார் என்ற அடிப்படையில் இந்த முறை MITM பாதுகாப்பை வழங்குகிறது.
  • கடவு விசை உள்ளீடு : ஒரு காட்சி வசதியுள்ள ஒரு சாதனம் மற்றும் (ஓர் எண்ணியல் விசைப்பலகை போன்ற) எண் உள்ளீடு உள்ள சாதனம் ஆகியவற்றுக்கிடையே இந்த முறையைப் பயன்படுத்தலாம் அல்லது எண்ணியல் விசைப்பலகை உள்ளீடு வசதியைக் கொண்டிருக்கும் இரண்டு சாதனங்களுக்கிடையில் பயன்படுத்தலாம். முதல் முறையில் ஓர் 6-இலக்க எண் குறியீட்டை பயனருக்குக் காண்பிக்க காட்சி வசதி பயன்படுகிறது, பின்னர் அவர் விசையட்டையில் குறியீட்டை உள்ளிடுவார். இரண்டாவது முறையில் இரு சாதனத்தின் பயனரும் அதே 6-இலக்க எண்ணை உள்ளிடுகின்றனர். இரு முறைகளிலும் MITM பாதுகாப்பு உள்ளது.
  • கற்றை தாண்டிய (OOB): இந்த முறை, இணைசேர்ப்பு செயல்பாட்டில் பயன்படும் சில தகவல்களைப் பரிமாறிக்கொள்ள (NFC போன்ற) ஒரு புற வகைத் தகவல்தொடர்பைப் பயன்படுத்துகிறது. இணைசேர்ப்பு செயல்பாடானது புளுடூத் ரேடியோவைப் பயன்படுத்தி முடிக்கப்படுகிறது, ஆனால் அதற்கு OOB செயலமைப்பிலிருந்து தகவல் தேவைப்படுகிறது. இது OOB பாதுகாப்பு செயலமைப்பில் உள்ள அளவிலான MITM பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது.

பின்வரும் காரணங்களினால் SSP எளிமையானதாகக் கருதப்பட்டது:

 • பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதற்கு, பயனர் ஒரு கடவு விசை உருவாக்க வேண்டிய அவசியம் அதில் இல்லை.
 • MITM தேவைப்படாத பயன்பாடுகளின் போது பயனர் குறுக்கீடு நீக்கப்படுகிறது.
 • எண் ஒப்பீட்டுக்கு பயனர் செய்யக்கூடிய எளிய சமத்துவ ஒப்பீட்டின் மூலம் MITM பாதுகாப்பை அடையலாம்.
 • NFC உடனான OOB பயன்பாடு சாதனங்கள் நெருங்கும் போதே அவற்றை இணைசேர்க்க உதவுகிறது, இதற்கு நீண்ட கண்டறிதல் செயல்பாடு தேவைப்படுவதில்லை.

பாதுகாப்பு விவகாரங்கள் தொகு

புளுடூத் 2.1, க்கு முன்பு வரை குறியாக்கம் தேவைப்படவில்லை மேலும் எப்போதும் அதை அணைத்துவிட முடியும் என்ற வசதியும் இருந்தது. மேலும், குறியாக்கத் திறவுகோல் சராசரியாக 23.5 மணி நேரத்திற்கு மட்டுமே சிறந்தது; ஒரு ஒற்றைக் குறியாக்கத் திறவுகோலை இந்த நேரத்திற்கு அதிகமாக பயன்படுத்தினால் எளிய XOR பாதிப்புகள் குறியாக்கத் திறவுகோலை மீட்டெடுக்க அனுமதிக்கப்படுகின்றன.

 • பல சாதாரண செயல்பாடுகளுக்கு, குறியாக்கத்தை அணைப்பது அவசியமாகிறது இதனால், குறியாக்கம் ஒரு சரியான காரணத்திற்காக முடக்கப்பட்டதா அல்லது ஒரு பாதுகாப்புத் தாக்குதலுக்காக முடக்கப்பட்டதா என்பதை அறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
 • புளுடூத் 2.1 இதைப் பின்வரும் வழிகளில் அணுகுகிறது:
  • SDP அல்லாத (சேவை கண்டறிதல் நெறிமுறை) இணைப்புகள் அனைத்துக்கும் குறியாக்கம் தேவைப்படுகிறது
  • குறியாக்கம் முடக்கப்பட வேண்டிய அனைத்து சாதாரண செயல்பாடுகளுக்கும் ஒரு புதிய குறியாக்க இடைநிறுத்தம் மற்றும் செயல்மீட்பு அம்சம் பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பு தாக்குதல்களிலிருந்து சாதாரண செயல்பாடுகளை எளிதில் அடையாளங்காண உதவுகிறது.
  • குறியாக்கத் திறவுகோல் காலாவதியாகும் முன்பு அதைப் புதுப்பிப்பது அவசியமாகிறது.

இணைப்புத் திறவுகோல்கள் சாதன கோப்பு முறைமையில் சேமிக்கப்படலாம். ஆனால் புளுடூத் சில்லில் சேமிக்க முடியாது. பல புளுடூத் சில்லு உற்பத்தியாளர்கள் இணைப்புத் திறவுகோல்களை சாதனத்தில் சேமிப்பதை அனுமதிக்கின்றனர்; இருப்பினும் சாதனம் அகற்றப்படக்கூடியது எனில் அது அகற்றப்படும் போது அந்த இணைப்புத் திறவுகோலும் சாதனத்துடன் சென்றுவிடும்.

காற்றிடைமுகம் தொகு

இந்த நெறிமுறையானது உரிமமற்ற ISM கற்றையில் 2.4-2.4835 GHz இல் இயங்குகிறது. 2.45 GHz கற்றையைப் பயன்படுத்தும் பிற நெறிமுறைகளுடன் குறுக்கிடாமல் இருக்க Bluetooth நெறிமுறையானது கற்றையை 79 சேனல்களாகப் பிரிக்கிறது (ஒவ்வொன்றும் 1 MHz அகலமுள்ளதாகப் பிரிக்கப்படுகிறது) மற்றும் சேனல்களை வினாடிக்கு 1600 வரையிலான மடங்குக்கு மாற்றுகிறது. 1.1 மற்றும் 1.2 ஆகிய பதிப்புகளில் அமைக்கப்பட்ட செயல்படுத்தல்கள் 723.1 kbit/s என்ற அளவிற்கு வேகத்தை அடைந்தன. பதிப்பு 2.0 இன் செயல்படுத்தல்கள் புளுடூத் மேம்பட்ட தரவு வீதத்தைக் (EDR) கொண்டிருந்தன மேலும் 2.1 Mbit/s வேகத்தை அடைந்தன. தொழில்நுட்ப ரீதியாக பதிப்பு 2.0 சாதனங்கள் உயர் ஆற்றல் நுகர்வுடையவை ஆனால் மூன்று மடங்கு வேகம் கொண்ட வீதத்தால் பரப்பல் நேரம் குறைகிறது. இதனால் 1.x சாதனங்களின் ஆற்றல் நுகர்வில் பாதியாக இவற்றின் ஆற்றல் நுகர்வு குறைகிறது (இரண்டுக்கும் ஒரே டிராஃபிக் சுமை இருப்பதாகக் கருதினால்).

பாதுகாப்பு தொகு

மேலோட்டம் தொகு

புளுடூத் நெறிமுறையானது, ரகசியத்தன்மை, அங்கீகரிப்பு மற்றும் திறவுகோல் தருவித்தல் ஆகியவற்றை SAFER+ ரகசியக்குறியீட்டுத் தடுப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட தனிப்பயன் வழிமுறைகளைக் கொண்டு செயல்படுத்துகிறது.

புளுடூத்தில் திறவுகோல் உருவாக்கம் என்பது பொதுவாக புளுடூத் PIN ஐ அடிப்படையாகக் கொண்டது. அதை இரண்டு சாதனங்களிலும் உள்ளிட வேண்டும். இரண்டு சாதனங்களில் ஒன்று நிலையான PIN ஐக் கொண்டிருந்தால் (எ.கா., தலையணிகள் அல்லது அதே போன்ற வரம்புள்ள பயனர் இடைமுகம் கொண்ட சாதனங்களுக்கு) இந்த வழிமுறையானது சிறிது மாற்றப்படலாம்.

இணைசேர்ப்பின் போது E22 வழிமுறையைப் பயன்படுத்தி, துவக்கும் திறவுகோல் அல்லது முதன்மைத் திறவுகோல் ஒன்று உருவாக்கப்படுகிறது.[14] தொகுப்புகளைக் குறியாக்கம் செய்ய E0 தொகுப்போடை ரகசியக் குறியீடு பயன்படுத்தப்படுவதால், ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. மேலும் இது ஒரு குறியாக்கவியல் ரகசியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முன்னர் உருவாக்கப்பட்ட ஓர் இணைப்புத் திறவுகோல் அல்லது முதன்மைத் திறவுகோல்.

காற்றிடைமுகத்தின் மூலமாக அனுப்பப்படும் தரவின் குறியாக்கத்திற்கு, பின்னர் பயன்படும் அந்தத் திறவுகோல்கள், இரண்டு சாதனங்கள் அல்லது ஒரு சாதனத்தில் உள்ளிடப்படும் இந்த புளுடூத் PIN ஐ நம்பியுள்ளன.

புளுடூத்தின் தீங்குகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய மேலோட்டத்தை அண்ட்ரீஸ் பெக்கெர் (Andreas Becker) வெளியிட்டுள்ளார்.[15]

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் தேசிய நிறுவனம் (NIST), புளுடூத் பாதுகாப்புக்கான ஒரு வழிகாட்டியை வெளியிட்டது. அது புளுடூத் இன் பாதுகாப்பு குறித்த வாய்ப்புகள் திறன்கள் மற்றும் புளுடூத் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயல் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான பல வழிகாட்டல்களை வழங்குகிறது. புளுடூத் பல நன்மைகளைக் கொண்டுள்ளது எனினும் அது சேவை மறுக்கப்படும் பாதிப்பு, ஒட்டுக்கேட்டல் பாதிப்பு, இடை மனித ஒட்டுக்கேட்டல் பாதிப்பு, செய்தி அறிவிப்பு மற்றும் தவறான உள்ளடக்கம் பரிமாறப்படுதல் போன்ற பல சிக்கல்களுக்கு இதில் வாய்ப்பு உள்ளது. பயனர்கள்/நிறுவனங்கள் அவற்றின் ஏற்கத்தக்க இடர் பற்றிய மதிப்பீட்டைச் செய்து கொள்ள வேண்டும். மேலும் புளுடூத் சாதனங்களின் இயக்க சுழற்சியில் பாதுகாப்பு முறைகளைப் புகுத்த வேண்டும். NIST ஆவணத்தில் ஆபத்துகளை மட்டுப்படுத்த உதவும் பாதுகாப்பு விவரப்பட்டியல் மற்றும் பாதுகாப்பான புளுடூத் பைக்கோநெட்கள், தலையணிகள் மற்றும் ஸ்மார்ட் கார்டு ரீடர்கள் ஆகியவற்றை நிறுவவும் பராமரிக்கவுமான பரிந்துரைகள் ஆகியவை அடங்கியுள்ளன.[16]

புளுஜாக்கிங் தொகு

புளுஜாக்கிங் என்பது எதிர்பாராத ஒரு பயனருக்கு புளுடூத் கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் தேவையில்லாமல்ஒரு படம் அல்லது செய்தியை அனுப்பும் செயலாகும். பொதுவான பயன்பாடுகளில் குறுங்செய்திகளும் (எ.கா., "உங்களை புளுஜாக் செய்தாயிற்று!") அடங்கும். [58] புளுஜாக்கிங் என்பதில் சாதனத்திலிருந்து எந்தத் தரவும் நீக்கப்படவோ மாற்றப்படவோ செய்யும் செயல்கள் அடங்காது.

பாதுகாப்பு விவகாரங்களின் வரலாறு தொகு

2001 தொகு

2001 ஆம் ஆண்டில், பெல் ஆய்வகத்தின் ஜேக்கப்சன் மற்றும் வெட்ஸெல் ஆகியோர் புளுடூத்தின் இணைசேர்ப்பு நெறிமுறையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்தனர். மேலும் குறியாக்க முறையில் உள்ள தீங்குக்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டினர்.[17]

2003 தொகு

2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஏ.எல். டிஜிட்டல் லிமிட்டட் நிறுவனத்தின் பென் மற்றும் ஆடம் லாரி (Ben and Adam Laurie) ஆகியோர் புளுடூத் இன் பாதுகாப்பில் உள்ள முக்கிய குறைபாடுகள் தனிப்பட தரவு வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் எனக் கண்டனர்.[18] இருப்பினும் இது போன்ற புகார் செய்யப்பட்ட பாதுகாப்பு சிக்கல்களின் கண்டுபிடிப்புக்குப் பின்னர் சில எளிய புளுடூத் இல் செயல்படுத்தல்களை மட்டும் கொண்டுவரப்பட்டது தவிர அதன் நெறிமுறையில் எந்த மாற்றத்தையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஒரு சோதனையில் ட்ரைஃபைனைட் குழுவின் மார்ட்டின் ஹெர்ஃபட் (Martin Herfurt), ஒரு CeBIT திறந்த வெளிகளில் களச் சோதனையைச் செய்ய முடிந்தது. அதன் மூலம் உலகுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த சோதனைக்கு புளுபக் எனப்படும் ஒரு புதிய தாக்குதல் முறை பயன்படுத்தப்பட்டது.[19] இது, புளுடூத் தகவல்தொடர்புகளின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எழுந்த பல நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.

2004 தொகு

2004 ஆம் ஆண்டில் புளுடூத்தைப் பயன்படுத்திய கைபேசிகளில் வைரஸ் புகுந்து இருப்பது சிம்பியன் ஓஎஸ் (Symbian OS ) இல் கண்டறியப்பட்டது. [66] இந்த வைரஸ் பற்றி காஸ்பர்ஸ்கை லேப் (Kaspersky Lab) முதலில் விவரித்தது, மேலும் முன்பின் தெரியாத மென்பொருள் நிறுவப்படும் முன்பு அது சரியானது தானா என உறுதிப்படுத்திக்கொள்ள பயனர்களைக் கேட்டுக்கொண்டது. ஒரு கருத்தை நிரூபிக்கும் விதமாக, "29A" எனப்படும் வைரஸ் குறியீடுகளை எழுதும் ஒரு குழுவால் இந்த வைரஸ் எழுதப்பட்டு வைரஸ் எதிர்ப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு இந்த வைரஸ் இந்த அமைப்பை விட்டு வெளியில் பரவவில்லை என்பதிலிருந்து அதை ஒரு சாத்தியக்கூறுள்ள (ஆனால் மெய்யானதல்ல) புளுடூத் அல்லது சிம்பியன் ஓஎஸ் (Symbian OS) ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட வேண்டும்.

2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் சோதனை (Bluetooth ஸ்னிப்பிங் என்பதையும் காண்க), திசையியல் ஆண்டென்னாக்கள் மற்றும் சமிக்ஞை பெருக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம், வகை 2 புளுடூத் ரேடியோவின் வரம்பெல்லையை 1.78 கி.மீ. (1.08 மைல்) வரை நீட்டிக்க முடியும் எனக் காட்டியது.[20] இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிமுகப்படுத்துகிறது ஏனெனில், பாதிப்பை உண்டாக்குபவர்கள் அது பாதிப்புக்கு சாத்தியக்கூறுள்ள புளுடூத் -சாதனங்களை எதிர்பாராத தொலைவிலிருந்து அணுக உதவுகிறது. ஓர் இணைப்பை நிறுவ, பாதிப்படைபவரிடமிருந்து பாதிப்பை உண்டாக்குபவர் தகவலைப் பெறவும் முடிய வேண்டும். ஒரு புளுடூத் சாதனத்தின் புளுடூத் முகவரி மற்றும் எந்த சேனல்களில் பரப்பல் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பாதிப்பை உண்டாக்குபவர் அறியாத வரை அவர் சாதனத்தை எவ்விதத்திலும் பாதிக்க முடியாது.

2005 தொகு

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், லாஸ்கோ என அழைக்கப்பட்ட ஒரு மொபைல் தீம்பொருள் வார்ம் (malware worm) கண்டறியப்பட்டது. அது சிம்பியன் ஓஎஸ் (Symbian OS) ஐப் (60 வரிசைகளின் பணித்தளத்தைச் சேர்ந்தது) பயன்படுத்தும் கைபேசிகளைக் குறிவைத்துப் பரவத் தொடங்கியது. அது புளுடூத் -செயலாக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி எண்ணிக்கையில் தானாகப் பெருகி பிற சாதனங்களுக்கும் பரவக்கூடியது. அது தானாகவே நிறுவிக்கொள்ளக்கூடியது மேலும் மொபைல் பயனர் பிற சாதனத்திலிருந்து கோப்பைப் (velasco.sis ) பெற ஒப்புக்கொண்டதும் செயல்படத் தொடங்குகிறது. இது தன்னை நிறுவிக்கொண்டவுடன் பிற புளுடூத் -செயலாக்கப்பட்ட சாதனங்களையும் பாதிக்க முயற்சிக்கும். அதுமட்டுமின்றி, இது பிற சாதனத்திலுள்ள . SIS கோப்புகளையும் பாதிக்கிறது இதனால் அகற்றும் வசதியுள்ள ஊடகத்தைப் (பாதுகாப்பான டிஜிட்டல், சிறிய ஃப்ளாஷ் போன்றவை) பயன்படுத்துகையில் பிற சாதனங்களுக்கும் பரவக்கூடும். இந்த வார்ம் சாதனத்தைச் செயலிழக்கும் நிலைக்கும் ஆளாக்கக்கூடும்.[21]

2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் வணிக ரீதியான புளுடூத் சாதனங்களிடையேயான PIN-அடிப்படையிலான இணைசேர்ப்புக்கு எதிரான முடக்க பாதிப்புகளின் உண்மையான செயல்பாட்டின் விளைவுகளை வெளியிட்டனர், இந்தப் பாதிப்புகள் நடைமுறையில் மிக வேகமானதாக நிகழும் என்பதையும் புளுடூத் ஒத்தத் திறவுகோல் நிறுவல் முறையின் பாதிப்புக்குட்படக்கூடிய தமையையும் இது உறுதிப்படுத்தியது. இந்த பாதிக்கும் தன்மையைச் சரிசெய்ய, அவர்கள் ஒரு செயல்படுத்தலைக் கொண்டுவந்தனர், அது கைபேசிகள் போன்ற குறிப்பிட்ட வகை சாதனங்களில் வலிமையான ஒரே போன்றதல்லாத திறவுகோல் உருவாக்கம் என்பது சாத்தியமே என நிரூபித்தது.[22]

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், யானிவ் ஷாகெட் பரணிடப்பட்டது 2007-11-09 at the வந்தவழி இயந்திரம் மற்றும் அவிஷாய் ஊல் ஆகியோர், ஒரு புளுடூத் இணைப்புக்கான PIN ஐப் பெறுவதற்கான செயல் மற்றும் செயலில்லா முறைகள் இரண்டையும் விளக்கும் ஒரு தாளை வெளியிட்டனர். பாதிப்பு உண்டாக்குபவர் முதலில் நடக்கும் இணைசேர்ப்பின் போது இருந்தால், செயலிலா பாதிப்பானது ஒரு பொருத்தமான வசதிகளைக் கொண்டுள்ள பாதிப்பு உண்டாக்குபவர், தகவல்தொடர்புகளை ஒட்டுக்கேட்கவும் ஏமாற்றவும் அனுமதிக்கிறது. செயலுள்ள முறையானது, நெறிமுறையின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உள்ளிடப்பட வேண்டிய ஒரு சிறப்பாக உருவாக்கப்பட்ட செய்தியைப் பயன்படுத்தி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலைச் சாதனங்களின் இணைசேர்ப்பு செயல்பாடுச் செயல்பாட்டை திரும்பத் திரும்ப நிகழவைக்கச் செய்கிறது. அதன் பின்னர் PIN ஐ க்ராக் செய்ய முதல் முறை பயன்படுத்தப்படலாம். பாதிப்பின் போது சாதனங்களைப் பயன்படுத்துபவர் சாதனம் கேட்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் PIN ஐ உள்ளிட வேண்டும் என்பதே இந்த பாதிப்பின் முக்கியமான பலவீனமாகும். மேலும், வணிக ரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான புளுடூத் சாதனங்களில் காலம் தொடர்பான அம்சங்கள் இருப்பதில்லை என்பதால் இந்த செயலுள்ள பாதிப்புக்கு பெரும்பாலும் தனிப்பயன் வன்பொருள் தேவைப்படுகிறது.[23]

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேம்ப்ரிட்ஜ்ஷைரின் காவலர்கள், திருடர்கள் புளுடூத் -செயலாக்கப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்தி கார்களில் விடப்பட்ட பிற சாதனங்களைத் தடமறிகின்றனர் என எச்சரித்துள்ளனர். இது போல ஏதேனும் மடிக்கணினிகள் மற்றும் பிற சாதனங்களை விட்டுச் சென்றால், மொபைல் நெட்வொர்க்கிங் இணைப்புகள் எல்லாம் முடக்கப்பட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு காவலர்கள் பயனர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.[24]

2006 தொகு

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செக்யூர் நெட்வொர்க் மற்றும் F-செக்யூர் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையானது சாதனங்கள் பெரும்பாலும் புலப்படும் வகையில் விடப்படுவதைக் குறித்து எச்சரிக்கிறது, மேலும் பரவும் பல வகையான புளுடூத் சேவைகள் மற்றும் இதனால் புளுடூத் வார்ம்களும் எளிதில் பரவ வாய்ப்பமைகிறது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களையும் வழங்கியது.[25]

2007 தொகு

2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், லக்ஸெம்பர்கிஷ் ஹேக்.லூ (Luxemburgish Hack.lu) பாதுகாப்பு மாநாட்டில் கெவின் ஃபினிஸ்டெர் மற்றும் தியரி ஜோலெர் ஆகியோர் மேக் ஓஎஸ் எக்ஸ் வி 10.3.9 (Mac OS X v10.3.9) மற்றும் v10.4. ஆகியவற்றில், புளுடூத் மூலமான ஒரு தொலைநிலை ரூட் ஷெல்லைப் பற்றி விளக்கி வெளியிட்டனர். அவர்கள் முதல் புளுடூத் PIN மற்றும் ஊல் மற்றும் ஷாகெட் ஆகியோரின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இணைப்புத் திறவுகோல்கள் க்ராக்கர் ஆகியவற்றையும் விளக்கிக்காட்டினர்.

உடல்நல விவகாரங்கள் தொகு

2.4 GHz முதல் 2.4835 GHz வரம்பெல்லையிலான மைக்ரோ அலை ரேடியோ அதிர்வெண் கற்றையை புளுடூத் பயன்படுத்துகிறது. ஒரு புளுடூத் ரேடியோவிலிருந்து வரக்கூடிய அதிகபட்ச ஆற்றல் வெளியீடு, முறையே வகை 1, வகை 2, மற்றும் வகை 3 சாதனங்களுக்கு 100 mW, 2.5 mW மற்றும் 1 mW ஆகும். இதில் கைபேசிகள் வகை 1 ஐச் சேர்கின்றன, பிற இரண்டு வகைகள் இன்னும் குறைவான ஆற்றலை உமிழ்பவை.[26] அதே போல், வகை 2 மற்றும் வகை 3 புளுடூத் சாதனங்கள் கைபேசிகளை விட குறைவான தீங்குகளுக்கு உட்படுபவை எனக் கருதப்படுகின்றன, மேலும் இந்த வகை சாதனங்களை வகை 1 ஐ கைபேசிகளுடன் ஒப்பிடலாம்.

குறிப்புகள் தொகு

 1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 3. நியூட்டன், ஹெரால்டு. 2007நியூட்டன்ஸ் டெலிகாம் டிக்ஷனரி. நியூயார்க்: ஃப்ளேட்டிரான் அச்சகம்.
 4. Apple(2002-07-17). "Apple Introduces "Jaguar," the Next Major Release of Mac OS X". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-02-04.
 5. "The Bluetooth Blues". Information Age. 2001-05-24. http://www.information-age.com/article/2001/may/the_bluetooth_blues. பார்த்த நாள்: 2008-02-01. 
 6. 6.0 6.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 7. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 8. (PDF) Simple Pairing Whitepaper. Version V10r00. Bluetooth SIG. 2006-08-03. Archived from the original on 2007-06-16. https://web.archive.org/web/20070616082658/http://bluetooth.com/NR/rdonlyres/0A0B3F36-D15F-4470-85A6-F2CCFA26F70F/0/SimplePairing_WP_V10r00.pdf. பார்த்த நாள்: 2007-02-01. 
 9. Michael Oryl (2007-03-15). "Bluetooth 2.1 Offers Touch Based Pairing, Reduced Power Consumption". MobileBurn. http://www.mobileburn.com/news.jsp?Id=3213. பார்த்த நாள்: 2008-02-04. 
 10. Taoufik Ghanname (2007-02-14). "How NFC can to speed Bluetooth transactions-today". Wireless Net DesignLine. Archived from the original on 2008-03-08. https://web.archive.org/web/20080308173634/http://www.wirelessnetdesignline.com/howto/showArticle.jhtml?articleID=180201430. பார்த்த நாள்: 2008-02-04. 
 11. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 12. Nokia(2007-06-12). "Wibree forum merges with Bluetooth SIG"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-02-04. பரணிடப்பட்டது 2014-12-29 at the வந்தவழி இயந்திரம்
 13. http://www.wimedia.org/, http://www.wimedia.org/imwp/download.asp?ContentID=15508[தொடர்பிழந்த இணைப்பு], http://www.wimedia.org/imwp/download.asp?ContentID=15506 பரணிடப்பட்டது 2009-03-23 at the வந்தவழி இயந்திரம், http://www.bluetooth.com/Bluetooth/Technology/Technology_Transfer/[தொடர்பிழந்த இணைப்பு], http://www.usb.org/press/wimedia_Tech_Transfer/ பரணிடப்பட்டது 2011-06-10 at the வந்தவழி இயந்திரம், http://www.incisor.tv/2009/03/what-to-make-of-bluetooth-sig-wimedia.html பரணிடப்பட்டது 2018-09-16 at the வந்தவழி இயந்திரம்
 14. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 15. Andreas Becker (2007-08-16) (PDF). Bluetooth Security & Hacks. Ruhr-Universität Bochum. http://gsyc.es/~anto/ubicuos2/bluetooth_security_and_hacks.pdf. பார்த்த நாள்: 2007-10-10. 
 16. Scarfone, K., and Padgette, J. (September 2008) (PDF). Guide to Bluetooth Security. National Institute of Standards and Technology. Archived from the original on 2009-02-06. https://web.archive.org/web/20090206120157/http://csrc.nist.gov/publications/nistpubs/800-121/SP800-121.pdf. பார்த்த நாள்: 2008-10-03. 
 17. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 18. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 19. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 20. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 21. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 22. Ford-Long Wong, Frank Stajano, Jolyon Clulow (2005-04) (PDF). Repairing the Bluetooth pairing protocol. University of Cambridge Computer Laboratory. Archived from the original on 2006-06-18. https://web.archive.org/web/20060618190023/http://www.cl.cam.ac.uk/~fw242/publications/2005-WongStaClu-bluetooth.pdf. பார்த்த நாள்: 2007-02-01. 
 23. Yaniv Shaked, Avishai Wool (2005-05-02). Cracking the Bluetooth PIN. School of Electrical Engineering Systems, Tel Aviv University. http://www.eng.tau.ac.il/~yash/shaked-wool-mobisys05/. பார்த்த நாள்: 2007-02-01. 
 24. "Phone pirates in seek and steal mission". Cambridge Evening News. Archived from the original on 2007-07-17. https://web.archive.org/web/20070717035938/http://www.cambridge-news.co.uk/news/region_wide/2005/08/17/06967453-8002-45f8-b520-66b9bed6f29f.lpf. பார்த்த நாள்: 2008-02-04. 
 25. (PDF) Going Around with Bluetooth in Full Safety. F-Secure. 2006-05. http://www.securenetwork.it/bluebag_brochure.pdf. பார்த்த நாள்: 2008-02-04. 
 26. Lua error in Module:Citation/CS1 at line 4336: attempt to call field 'make_sep_list' (a nil value).

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூடூத்&oldid=3583422" இருந்து மீள்விக்கப்பட்டது