டி. எஸ். சரோஜா சுந்தரராஜன்

(டி. எஸ். சரோஜா சௌந்தரராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சரோஜா சுந்தரராஜன், கோயம்புத்தூர் நகரத்தில் வாழும், சௌராட்டிர மொழியில் புலமை பெற்ற பெண்மணியாவர். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், பாடகர் எனும் பன்முகங் கொண்டவர். சௌராஷ்டிரா மொழி, எழுத்து, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் வளர்ச்சிக்காக செயல் ஊக்கம் கொண்டவர். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் இலக்கிய நூல்களை சௌராஷ்டிரா மொழியில் மொழிபெயர்த்துள்ளார். 2015இல் சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்.

சௌராஷ்டிரா மொழியில் படைப்புகள்

தொகு
  • தேவி மகாத்மியம்
  • யோகிந்துருன் மொன்னு சிங்காரு லாதூன்
  • லலிதா சகஸ்ரநாமம்
  • சௌந்தர்ய லஹரி
  • கனகதார தோத்திரம்
  • கந்தசஷ்டி கவசம்
  • சௌராஷ்டிரா ஜெகத்குரு ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள் மற்றும் கீர்த்தனைகள்

பாஷா சம்மான் விருது

தொகு

அங்கீரம் இல்லாத இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் ஒரு இலட்சம், செப்புப் பட்டயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது மதுரை டி. ஆர். தமோதரனுடன் கூட்டாக , கோயம்புத்தூர் சரோஜா சௌந்தரராஜனுக்கு 21 டிசம்பர் 2016 அன்று வழங்கப்பட்டது. [1][2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/Press_Release_(English)_BS_21-12-16.pdf பரணிடப்பட்டது 2017-05-17 at the வந்தவழி இயந்திரம் Bhasha Samman]
  2. "2015 BHASHA SAMMAN AWARDEES". Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.

வெளி இணைப்புகள்

தொகு