டி. ஏ. முகம்மது சகி
தி. அ. முகம்மது சகி (T. A. Mohammed Saqhy) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 03 ஏப்ரல் 1990 முதல் 02 ஏப்ரல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] உணவுக் கலப்படம் மற்றும் உணவுப் பொருட்களில் நிறமிகளைச் சேர்ப்பது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார்.[2] 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[3] வேலூர் மாவட்டத்தின் திமுக அவைத் தலைவராகவும், திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Saqhy Shri T.A. Mohammed, Rajya Sabha members from Tamil Nadu
- ↑ Questions 1698, 1788 AMENDMENT IN THE PREVENTION OF FOOD ADULTERATION RULES
- ↑ Election Result of Vellore Lok Sabha Constituency, 1998 election
- ↑ [https://web.archive.org/web/20191011164247/http://www.viduthalai.in/e-paper/146776-2017-07-24-05-13-05.html பரணிடப்பட்டது 2019-10-11 at the வந்தவழி இயந்திரம் viduthalai - e-paper]