டி. மஞ்சுநாத்து
டி. மஞ்சுநாத்து (D. Manjunath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1928 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1967 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு முதன் முதலில் கருநாடக சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1977 ஆம் ஆண்டு மஞ்சுநாத்து சனதா கட்சியில் சேர்ந்தார். இக்கட்சியின் கருநாடக மாநிலத் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். 1983 ஆம் ஆண்டு கருநாடகாவின் சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். 1985-1987 காலக்கட்டத்தில் மஞ்சுநாத்து பல்வேறு அமைச்சகங்களில் அமைச்சராகப் பணிபுரிந்தார்.[3] 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று கருநாடகாவின் சட்ட மேலவையிமன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
டி. மஞ்சுநாத்து D. Manjunath | |
---|---|
உயர்கல்வித்துறை அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் 2004–2006 | |
வருவாய்த்துறை அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் 1998–1999 | |
கல்வி அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் 1986–1987 | |
தலைவர், கருநாடக கர்நாடக சட்ட மேலவை | |
பதவியில் 1987–1992 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இயாசூர் கிராமம், சாலக்கேரி தாலுக்கா, மைசூர் அரசு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (now கருநாடகம், இந்தியா) | 26 ஆகத்து 1928
இறப்பு | 3 பெப்ரவரி 2020 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 91)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு |
செயதேவப்பா ஆலப்பா அமைச்சரவையில் மஞ்சுநாத்து வருவாய்த்துறை அமைச்சராக பணிபுரிந்தார்.[4] 2004-2006 ஆம் ஆண்டு காலத்தில் தரம்சிங் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.[3]
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று மஞ்சுநாத் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Bio-data, D. Manjunath". Karnataka Legislative Council. Archived from the original on 7 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Karnataka Assembly Election Results in 1967". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.
- ↑ 3.0 3.1 "Former Karnataka Minister D. Manjunath passes away" (in en-IN). The Hindu. 2020-02-04. https://www.thehindu.com/news/national/karnataka/former-karnataka-minister-d-manjunath-passes-away/article30729833.ece.
- ↑ "Rediff On The NeT: Karnataka cabinet expanded". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.