தி. இராமச்சந்திரன்
தி. இராமச்சந்திரன் (T. Ramachandran) என்பவர் கிருட்டிணகிரி மாவட்டம், தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராவார்.
அரசியல்வாழ்வு
தொகுஇவர் கிருட்டிணகிரி மாவட்டம் வரகானப்பள்ளி என்னும் மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1996 முதல் 2001 வரை நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார், பின் 2001 முதல் 2006 ஆண்டுவரை கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் குழுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார். 2006 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கேட்டார். ஆனால் கூட்டணியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் இவருக்கு வாய்பு வழங்கப்படவில்லை இதை ஏற்கமறுத்து தளி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாகவே போட்டியிட்டு வென்றார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு இவர் எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலேயே இணைந்தார். மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு தளியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[1]
குற்ற வழக்குகள்
தொகுஇவர்மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளரான பழனி என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கழுத்தை அறுத்துக் கொன்றது, மார்க்சிய லெனினீய கட்சியில் மாவட்டச் செயலாளரான பாஸ்கர் என்பவர் கடத்திக் கொல்லப்பட்டது உட்பட மூன்று கொலை வழக்குகளும், 15 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகளும், கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என பல வழக்குகள் உள்ளன. இந்த குற்றங்களுக்காக இவரும் இவரது மாமனார் லகுமையா உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் பின் பிணையில் வெளியே வந்தார். கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் சுமார் 100 கோடி மதிப்பிலான கிரானைட் மோசடி செய்ததாக ராமச்சந்திரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.[2] இந்நிலையில் இவருக்கு மீண்டும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
- ↑ "எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது கிரானைட் முறைகேடு வழக்குகள்". www.bbc.com/tamil. 20 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "வசந்திதேவியும் ராமச்சந்திரனும்". தி இந்து (தமிழ்). 25 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)