டி. வி. அந்தோணி

டி. வி. அந்தோணி (T. V. Antony) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1956-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர். [1][2]

டி. வி. அந்தோணி
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1981–1981
முன்னையவர்கு. சொக்கலிங்கம்
பதவியில்
1985–1985
முன்னையவர்ஆ. பத்மநாபன்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள் தொகு

1956 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார்.மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.1973-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1981 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்தார். 1991ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின் மாநில திட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் பணியில் இருந்த சமயத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறன்பட செயல்படுத்தினார். 2004 ஆம் ஆண்டுக்கான பத்ம பூசண் விருதும் பெற்றுள்ளார். அவரது தந்தை டி.ஏ.வா்கீஸ், தமிழக தலைமைச் செயலாளராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._அந்தோணி&oldid=3855510" இலிருந்து மீள்விக்கப்பட்டது