டி. ஸ்ரீராம் குமார்
கர்ணல் டி. ஸ்ரீராம்குமார் (D. Sreeram Kumar) (AC (பிறப்பு: 11 சனவரி 1981) தற்போது இந்திய இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி ஆவார். இவரது வீரதீரச் செயலைப் பாராட்டி அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோகச் சக்கர விருது இவருக்கு 2010ம் ஆண்டில் வழங்கப்பட்டது. [2].[3]
கர்ணல் டி. ஸ்ரீராம்குமார் | |
---|---|
கர்ணல். டி. ஸ்ரீராம்குமாரின் படம் | |
பிறப்பு | 11 சனவரி 1981[1] கோவில்பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 2004–தற்போது வரை |
தரம் | கர்ணல் |
தொடரிலக்கம் | SS-40576 (குறுகிய-சேவை ஆணையம்) IC-66076A (நிரந்த ஆணையம்) |
படைப்பிரிவு | 90 மீடியம் ரெஜிமெண்ட் (பீரங்கிப் படை) 39 அசாம் ரைப்பிள்ஸ் |
போர்கள்/யுத்தங்கள் |
|
விருதுகள் | அசோகச் சக்கர விருது |
இளமை
தொகுகோவில்பட்டியில் பிறந்த ஸ்ரீராம்குமார், உடுமைப்பேட்டை வட்டத்தில் உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் 1998ம் ஆண்டில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநில பட்டப்படிப்பை முடித்தார்.[4]
இராணுவப் பணி
தொகுஅக்டோபர் 2002ல் ஸ்ரீராம்குமார் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் பயிற்சி பெற்ற பின் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.[5]
வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை எதிர்த்துப் போராடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ashoka Chakra to Major Mohit Sharma and Major D Sreeram Kumar: Four Kirti Chakra Also Awarded". Press Information Bureau. 15 August 2009.
- ↑ "D SREERAM KUMAR | Gallantry Awards". gallantryawards.gov.in.
- ↑ "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in.
- ↑ "Memorable reunion for senior officers at Sainik School". http://www.thehindu.com/news/cities/Coimbatore/article490145.ece.
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India: p. 620. 28 March 2009. https://egazette.nic.in/WriteReadData/2009/W_13_2010_017.pdf.