டெக்ஸ் வில்லர்
டெக்ஸ் வில்லர் (Tex Willer) 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 திகதி முதல் "போனல்லியோ" குழுமத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவரும் பிரபலமான காமிக்சு கதாபாத்திரம் ஆகும். இது இத்தாலியக் கௌபாய் கதாபாத்திரங்களுள் ஒன்றாகும். இது லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரால் தமிழில் வெளியிடப்படும் ஒரு வரைகதைப் புத்தகமாகும். கதையமைப்பு ரேஞ்சர் டெக்ஸ் வில்லர். செவ்விந்தியர்களின் நவஹோ பிரிவினரின் தலைவர் இரவுக்கழுகும் இவரே. இவரது தோழர் கிட் கார்சன், செவ்விந்திய நண்பன் டைகர், மகன் கிட் ஆகியோருடன் இணைந்து அநீதி, அக்கிரமம் நடக்கும் இடங்களிலெல்லாம் சென்று நீதியை நிலைநாட்டுதலையே தலையாய கடமையாகக் கொண்டவர்.. தமிழ் சித்திரக்கதைகளில் சிறப்பான வெற்றி கண்டு நம்பர் ஒன் இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்திருப்பவர்..[1][2][3]
டெக்ஸ் வில்லரின் கதைகள்
தொகுடெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தினரால் 51 கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது.
- கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53
- டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளைத் தனித்தனிக் கதைகள் என்று கணக்கு எடுத்துக்கொண்டால் சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).
- கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் - 42கதைகள்
- இரண்டு பாகங்களாகத் தொடராக வந்தவை -3 கதைகள்
- மூன்று பாகங்களாகத் தொடராக வந்தவை -3 கதைகள்
- காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த "திகில் நகரில் டெக்ஸ் " பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது.
வரிசைஎண் லயன் வெளியீடு எண்
- தலைவாங்கிக் குரங்கு 19
- பவளச்சிலை மர்மம் 27
- பழிவாங்கும் பாவை 33
- பழிக்குப் பழி (கோடை மலர்-87) 36
- டிராகன் நகரம் 50
- இரத்த முத்திரை 56
- வைகிங் தீவு மர்மம் 60
- மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) 62
- அதிரடிக்கணவாய் 64
- எமனோடு ஒரு யுத்தம் 70
- மரணத்தின் நிறம் பச்சை 74
- பழி வாங்கும் புயல் 81
- கழுகு வேட்டை 86
- இரத்த வெறியர்கள் 90
- இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) 100
- பாலைவனப் பரலோகம் (லயன் டாப் 10 ஸ்பெஷல்) 112
- மரண முள் 120
- நள்ளிரவு வேட்டை 126
- மரண நடை 130
- கார்சனின் கடந்த காலம் - 1 131
- கார்சனின் கடந்த காலம் - 2 132
- பாங்க் கொள்ளை (மிஸ்டர் மஹாராஜா ) 133
- எரிந்த கடிதம் 140
- மந்திர மண்டலம் 150
- இரத்த நகரம் 155
- எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) 157
- மரண தூதர்கள் 164
- மெக்ஸிகோ படலம் 169
- தனியே ஒரு வேங்கை 170
- கொடூர வனத்தில் டெக்ஸ் 171
- துரோகியின் முகம் 172
- பயங்கரப் பயணிகள் 173
- துயிலெழுந்த பிசாசு 174
- பறக்கும் பலூனில் டெக்ஸ் 176
- ஓநாய் வேட்டை 178
- இருளின் மைந்தர்கள் 179
- இரத்த தாகம் 180
- சாத்தான் வேட்டை 182
- கபால முத்திரை 185
- சிவப்பாய் ஒரு சிலுவை (மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 186
- சதுப்பில் ஒரு சதிகார கும்பல் 187
- இரத்த ஒப்பந்தம் 191
- தணியாத தணல் 192
- காலன் தீர்த்த கணக்கு 193
- கானகக்கோட்டை (ஜாலி ஸ்பெஷல்) 195
- பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) 200
- மரணத்தின் முன்னோடி 203
- காற்றில் கரைந்த கழுகு 204
- எமனின் எல்லையில் 205
- சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் 215
திகில்
தொகு- சைத்தான் சாம்ராஜ்யம் (திகில்) 51
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
தொகு- பழி வாங்கும் பாவை 4
- தலைவாங்கிக் குரங்கு 27
காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்
தொகு- திகில் நகரில் டெக்ஸ் 1
- திகில் நகரில் டெக்ஸ் 2
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lion Comics". Archived from the original on 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.
- ↑ "RESİMLİ ROMAN - Tex Willer". Resimli Roman (in துருக்கிஷ்). Archived from the original on 2011-03-22. பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
- ↑ "Tew Willer". Eurocomics in English.