டெட்ராகுளோரோசைக்ளோபுரோப்பீன்

வேதிச் சேர்மம்

டெட்ராகுளோரோசைக்ளோபுரோப்பீன் (Tetrachlorocyclopropene) என்பது C3Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த அரோமாட்டிக் சேர்மத்தை டெட்ராகுளோரோவளையபுரோப்பீன் என்ற பெயராலும் அழைக்கலாம். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளிலும் அசிட்டைலீன் வழிப்பொருள்கள் தயாரிக்க உதவும் வினையாக்கியாகவும் பயன்படுகிறது[1]. டைகுளோரோகார்பீனுடன் டெட்ராகுளோரோயெத்திலீனை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் டெட்ராகுளோரோசைக்ளோபுரோப்பீன் தயாரிக்க முடியும். [2] அரைல்புரோப்பியோலிக் அமிலங்கள் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

டெட்ராகுளோரோசைக்ளோபுரோப்பீன்
இனங்காட்டிகள்
6262-42-6
ChemSpider 72642
InChI
  • InChI=1S/C3Cl4/c4-1-2(5)3(1,6)7
    Key: BLZOHTXDDOAASQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 80428
  • ClC1=C(Cl)C1(Cl)Cl
பண்புகள்
C3Cl4
வாய்ப்பாட்டு எடை 177.83 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.45 கி/மி.லி
கொதிநிலை 125 - 130 செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
C3Cl4 + ArH + 2 H2O → ArC2CO2H + 4 HCl

சில சந்தர்ப்பங்களில் ஈர் அரைலேற்ற வினைகள் நிகழ்ந்து டை அரைல்சைக்ளோபுரோப்பீனோன் உருவாகிறது. இதை கார்பனைல் நீக்கம் செய்து டை அரைல் அசிட்டைலைன்களைப் பெற இயலும். இடைநிலையான டிரைகுளோரோசைக்ளோபுரோப்பீனியம் மின்னணு கவரி (C3Cl3+) வழியாக இவ்வினைகள் நிகழ்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Oliver Reiser, Armin de Meijere (2001). "Tetrachlorocyclopropene". eEROS. doi:10.1002/047084289X.rt028. 
  2. Glück, C; Poingée, V; Schwager, H (1987). "Improved Synthesis of 7,7-Difluorocyclopropabenzene". Synthesis 1987 (3): 260–262. doi:10.1055/s-1987-27908. https://www.thieme-connect.com/products/ejournals/abstract/10.1055/s-1987-27908.