டெட்ராபுரோப்பைல் வெள்ளீயம்
வேதிச் சேர்மம்
டெட்ராபுரோப்பைல் வெள்ளீயம் (Tetrapropyltin) என்பது (CH3CH2CH2)4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிமவெள்ளீயச் சேர்மமான இது ஒரு நச்சுத்தன்மையுடன் கூடிய நிறமற்ற எண்ணெய் திரவமாகும். வலிமையான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரிகிறது. தோல், கண்கள் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவற்றில் எரிச்சலூட்டுகிறது. நீண்ட கால விளைவுகளை நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடன் செயல்படுகிறது. தோல் வழியாக உறிஞ்சப்பட்டும் உடலில் நச்சு விளைவுகளை ஏற்படுத்தும். இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு தயாரிப்பின் போது டெட்ராபுரோப்பைல் வெள்ளீயம் ஓர் இடைநிலையாகும்.[2][4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுரோப்பைல்சுடானேன்[1]
| |
வேறு பெயர்கள்
டெட்ரா-என்-புரோப்பைல்வெள்ளீயம்[1]
| |
இனங்காட்டிகள் | |
2176-98-9 | |
ChemSpider | 15725 |
EC number | 218-536-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16585 |
| |
பண்புகள் | |
(CH3CH2CH2)4Sn | |
வாய்ப்பாட்டு எடை | 291.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற எண்ணெய் திரவம்[2] |
மணம் | விரும்பத்தகாத நெடி[3] |
அடர்த்தி | 1.11 கி/செ.மீ3 (20 °செல்சியசு)[3] |
கொதிநிலை | 222 °C (432 °F; 495 K) [3] |
கரைதிறன் | குளோரோபாரம், ஈத்தைல் அசிட்டேட்டு மற்றும் மெத்தனால் கரைப்பான்களில் சிறிதளவு கரையும்.[2][4] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |