டெட்ராமெத்தில்குவானிடின்
டெட்ராமெத்தில்குவானிடின் (Tetramethylguanidine) என்பது HNC(N(CH3)2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாக்க் காணப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான காரமாகும். குறிப்பாக அமீன்களைக் காட்டிலும் அதிக காரத்தன்மையை இது கொண்டிருக்கிறது [3]. இது 1,1,3,3-டெட்ராமெத்தில்குவானிடின் என்றும் அழைக்கப்படுகிறது
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,3,3- டெட்ராமெத்தில்குவானிடின் [1]
| |
இனங்காட்டிகள் | |
80-70-6 | |
Beilstein Reference
|
969608 |
ChemSpider | 59832 |
EC number | 201-302-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 1,1,3,3-டெட்ராமெத்தில்குவானிடின் |
பப்கெம் | 66460 |
| |
UN number | 2920 |
பண்புகள் | |
C5H13N3 | |
வாய்ப்பாட்டு எடை | 115.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 918 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −30 °C (−22 °F; 243 K) |
கொதிநிலை | 160 முதல் 162 °C (320 முதல் 324 °F; 433 முதல் 435 K) |
கலக்கும் | |
ஆவியமுக்கம் | 30 பாசுக்கல் (20 °செல்சியசில்) |
காடித்தன்மை எண் (pKa) | 13.0±1.0[2] (pKa தண்ணிரில் இணை அமிலம்) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.469 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H302, H314 | |
P280, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 60 °C (140 °F; 333 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1–7.5% |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெட்ராமெத்தில்தயோயூரியாவிலிருந்து கந்தக-மெத்திலேற்றமும் அமீனேற்றமும் செய்து டெட்ராமெத்தில்குவானிடின் தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாற்று தயாரிப்பு முறைகள் சயனோகென் அயோடைடிலிருந்து தொடங்குகின்றன [4]
பயன்கள்
தொகுஆல்க்கைலேற்ற வினைகளுக்கு உட்கருகவரியல்லாத வலிமையான காரமாக டெட்ராமெத்தில்குவானிடின் பயன்படுகிறது. 1,8-டையசாபைசைக்ளோ[5.4.0]அன்டெக்-7-யீன் மற்றும் 1,5-டையசாபைசைக்ளோ[4.3.0]நோன்-5-யீன் போன்ற விலையுயர்ந்த காரங்களுக்கு மாற்றாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [4]. நீரில் இக்காரம் நன்றாகக் கரையக்கூடியது என்பதால் இதை கரிமக் கரைபான் கலவைகளிலிருந்து எளிமையாகப் பிரித்தெடுக்கலாம். பாலியூரித்தேன் தயாரிப்பில் இச்சேர்மம் ஒரு கார வினையூக்கியாக பயன்படுகிறது [5].
மேற்கோள்கள்
தொகு- ↑ "1,1,3,3-tetramethylguanidine - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.
- ↑ Kaupmees, K.; Trummal, A.; Leito, I. (2014). "Basicities of Strong Bases in Water: A Computational Study". Croat. Chem. Acta 87: 385–395. doi:10.5562/cca2472.
- ↑ Rodima, Toomas; Leito, I. (2002). "Acid-Base Equilibria in Nonpolar Media. 2. Self-Consistent Basicity Scale in THF Solution Ranging from 2-Methoxypyridine to EtP1(pyrr) Phosphazene". J. Org. Chem. 67 (6): 1873–1881. doi:10.1021/jo016185p.
- ↑ 4.0 4.1 Ishikawa, T.; Kumamoto, T. (2006). "Guanidines in Organic Synthesis". Synthesis 2006 (5): 737–752. doi:10.1055/s-2006-926325. https://archive.org/details/sim_synthesis_2006-03_5/page/737.
- ↑ Geoghegan, J. T.; Roth, R. W. (2003). "Catalytic effects of 1,1,3,3-tetramethylguanidine for isocyanate reactions". J. Appl. Polym. Sci. 9 (3): 1089–1093. doi:10.1002/app.1965.070090325.