டெட்ராயெத்திலமோனியம் ஈரிரும்பு ஆக்சியெக்சாகுளோரைடு

டெட்ராயெத்திலமோனியம் ஈரிரும்பு ஆக்சியெக்சாகுளோரைடு (Tetraethylammonium diiron oxyhexachloride) என்பது (N(C2H5)4)2Fe2OCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். [Fe2OCl6]2- என்ற எதிர்மின் அயனியின் டெட்ராயெத்திலமோனியம் உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. தொடர்புடைய பல [Fe2OCl6]2- எதிர்மின் அயனி உப்புகள் அறியப்படுகின்றன. அயனி ஓரிணை நான்முகி Fe(III) மையங்களைக் கொண்டுள்ளது. அவை ஆக்சோ பால ஈந்தணைவியை பகிர்ந்து கொள்கின்றன.[2] சோடியம் மும்மெத்தில்சிலாக்சைடுடன் டெட்ராயெத்திலமோனியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இந்த உப்பைத் தயாரிக்கலாம்.[1] மஞ்சள் பழுப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது.

டெட்ராயெத்திலமோனியம் ஈரிரும்பு ஆக்சியெக்சாகுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசு(டெட்ராமெத்திலமோனியம்) (μ-ஆக்சோ)பிசு[முக்குளோரோபெர்ரேட்டு(III)]
இனங்காட்டிகள்
87495-23-6 [1]
InChI
  • InChI=1S/2C8H20N.6ClH.2Fe.O/c2*1-5-9(6-2,7-3)8-4;;;;;;;;;/h2*5-8H2,1-4H3;6*1H;;;/q2*+1;;;;;;;2*+2;/p-6
    Key: HDMQHBMGMOXZQN-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
  • CC[N+](CC)(CC)CC.CC[N+](CC)(CC)CC.Cl[Fe-](Cl)(Cl)O[Fe-](Cl)(Cl)(Cl)
பண்புகள்
C16H40Cl6Fe2N2O
வாய்ப்பாட்டு எடை 600.90 g·mol−1
தோற்றம் மஞ்சள் பழுப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 1.354 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Do, Y.; Simhon, E. D.; Holm, R. H. (1983). "Improved Syntheses of Tetrachlorodi-μ-sulfidodiferrate Dianion ([Fe2S2Cl4]2-) and Hexachloro-μ-oxodiferrate2- ([Fe2OCl6]2-) and Oxo/Sulfido Ligand Substitution by Use of Silylsulfide Reagents". Inorg. Chem. 22: 3809-12. doi:10.1021/ic00167a027. μ
  2. Haselhorst, Gabriele; Wieghardt, Karl; Keller, Stefan; Schrader, Bernhard (1993). "The (μ-Oxo)bis[trichloroferrate(III)] Dianion Revisited". Inorganic Chemistry 32 (5): 520–525. doi:10.1021/ic00057a006.