டெட்ரா அயோடின் நோனாக்சைடு
டெட்ரா அயோடின் நோனாக்சைடு (Tetraiodine nonoxide) என்பது I4O9 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அயோடின் ஆக்சைடு சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
73560-00-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
I4O9 | |
வாய்ப்பாட்டு எடை | 651.61 g·mol−1 |
தோற்றம் | வெளிர் மஞ்சள் திண்மம்[1] |
உருகுநிலை | 75 °செல்சியசு (சிதைவடையும்)[1] |
reacts | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகார்பன் டெட்ராகுளோரைடில் உள்ள அயோடின் மற்றும் ஓசோனை −78 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் டெட்ரா அயோடின் நோனாக்சைடை உருவாக்கலாம்.:[2][3]
- 2I2 + 9 O3 → I4O9 + 9O2
அயோடிக் அமிலத்துடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினல் டெட்ரா அயோடின் நோனாக்சைடு உருவாகிறது.:[4]
- 8 HIO3 → 2 I4O9 + 4 H2O + O2
பண்புகள்
தொகுடெட்ரா அயோடின் நோனாக்சைடு வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திடப்பொருளாகக் காணப்படுகிறது. எளிதில் நீராற்பகுப்பு வினைக்கு உட்படும். 75 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்.[2]
- 4 I4O9 → 6 I2O5 + 2 I2 + 3 O2
ஈரயோடின் டெட்ராக்சைடைப் போலவே, டெட்ரா அயோடின் நோனாக்சைடும் I(III) மற்றும் I(V) இரண்டு சேர்மங்களையும் கொண்டுள்ளது, மேலும் கார நிலைமைகளின் கீழ் அயோடேட்டு மற்றும் அயோடைடுகளாக விகிதாசாரமற்று மாறுகிறது.[2]
- 3I4O9 + 12 HO− → I− + 11 IO−3 + 6 H2O
டெட்ரா அயோடின் நோனாக்சைடு தண்ணீருடன் வினையில் ஈடுபட்டு அயோடிக் அமிலத்தையும் அயோடினையும் கொடுக்கிறது:[3]
- 4 I4O9 + 9 H2O -> 18 HIO3 + I2
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL. p. 500. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மைய எண் 759865801.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 2.0 2.1 2.2 Holleman, A. F.; Nils, Wiberg; Wiberg, Egon (2019). Lehrbuch der anorganischen Chemie (in ஜெர்மன்). Berlin. p. 443. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-083817-6. இணையக் கணினி நூலக மைய எண் 1102802853.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 3.0 3.1 Garg, Ragni; Singh, Randhir (2015). Inorganic Chemistry. New Delhi: McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-259-06285-8. இணையக் கணினி நூலக மைய எண் 965462199.
- ↑ Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry V1. Burlington: Elsevier Science. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16127-5. இணையக் கணினி நூலக மைய எண் 843200092.