டெட்ரா ஐதராக்சிடைபோரான்

டெட்ரா ஐதராக்சிடைபோரான் (Tetrahydroxydiboron) என்பது B2H4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வேதியியல் வினையாக்கியான இச்சேர்மத்தைப் பயன்படுத்தி போரானிக் அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன [1].

டெட்ரா ஐதராக்சிடைபோரான்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ரா ஐதராக்சிடைபோரேன்(4)
வேறு பெயர்கள்
டைபோரான் டெட்ரா ஐதராக்சைடு
(டையாதராக்சிபோரானைல்)போரோனிக் அமிலம்
ஐப்போபோரிக் அமிலம்
ஐப்போடைபோரிக் அமிலம்
துணை-போரிக் அமிலம்
1,1,2,2- டெட்ரா ஐதராக்சிடைபோரேன்
இனங்காட்டிகள்
13675-18-8
ChEBI CHEBI:38289
ChemSpider 9161351
InChI
  • InChI=1S/B2H4O4/c3-1(4)2(5)6/h3-6H
    Key: SKOWZLGOFVSKLB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10986154
SMILES
  • B(B(O)O)(O)O
பண்புகள்
B2H4O4
வாய்ப்பாட்டு எடை 89.65 g·mol−1
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 1.657
உருகுநிலை 143–148 °C (289–298 °F; 416–421 K)
கரையும்
கரைதிறன் எத்தனால்,டைமெத்தில் பார்மமைடு
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு P21/c
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1410.43 கிலோயூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
125.46 J கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
H302, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

போரான் டிரைகுளோரைடுடன் ஆல்ககால்களைச் சேர்த்து வினைபுரியச் செய்யும் தயாரிப்பு முறை 1931 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையில் டைமெத்தாக்சிபோரான் குளோரைடு (B(OCH3)2Cl) தயாரிக்கப்பட்டது [2] . இச்சேர்மத்திலிருந்து இகோன் வைபெர்க் மற்றும் வில்லெம் ருச்மான் ஆகியோர் டெட்ரா ஐதராக்சிடைபோரானை முதலில் போரான் – போரான் பிணைப்பை அறிமுகப்படுத்தும் முறையில் தயாரித்தனர். இதற்காக இவர்கள் (B(OCH3)2Cl) உடன் சோடியம் சேர்த்து ஒடுக்க வினையை நிகழ்த்தினர். விளைபொருளான டெட்ரா ஐதராக்சிடைபோரானை பின்னர் நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினர். இம்முறையில் தயாரிக்கப்பட்ட போரிக் அமிலத்தை துணை-போரிக் அமிலம் என்று பெயரிட்டு அழைத்தனர் .[3] இத்தயாரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தமுடியும்.

BCl3       B(OCH3)2Cl       B2(OCH3)4       B2(OH)4

ஒட்டுமொத்தமாக:     2 BCl3   +   2 Na   +   4 H2O   →   B2(OH)4   +   2 NaCl   +   4 HCl

வினைகள் தொகு

90 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்படும் போது டெட்ரா ஐதராக்சிடைபோரான் நீர் நீக்கமடைந்து பலபடிம போரான்(II) ஆக்சைடாக மாறுகிறது. வெப்பநிலை 220 பாகை செல்சியசுக்கு மிகுதியானல் மட்டுமே இச்சேர்மம் முழுமையாக நீர்நீக்கமடைகிறது [4]. டெட்ரா ஐதராக்சிடைபோரான் ஒரு ஒடுக்கும் முகவராகும். இதனுடைய நீர்க்கரைசல் மெல்ல ஐதரசன் வாயுவை வெளிவிடுகிறது [3].

மேற்கோள்கள் தொகு

  1. "Tetrahydroxydiboron". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2001). John Wiley & Sons. DOI:10.1002/047084289x.rn01181. ISBN 9780470842898. 
  2. Wiberg, Egon; Sütterlin, Walther (1931). "Zur Kenntnis einiger Verbindungen vom Typus BCl3−n(OR)n. (Über alkoxyl-substituierte Borchloride)" (in German). Z. anorg. allg. Chem. 202 (1): 1–21. doi:10.1002/zaac.19312020102. 
  3. 3.0 3.1 Wiberg, Egon; Ruschmann, Wilhelm (1937). "Über eine neue Borsäure (‚Unterborsäure’︁) der Formel H4B2O4 und ihre Ester" (in de). Ber. Dtsch. Chem. Ges. A/B 70 (6): 1393–1402. doi:10.1002/cber.19370700636. 
  4. Wartik, Thomas; Apple, Eugene F. (1955). "A New Modification of Boron Monoxide". J. Am. Chem. Soc. 77 (23): 6400–6401. doi:10.1021/ja01628a116.