டெட்ரா பியூட்டைலமோனியம் ஐதராக்சைடு

டெட்ரா பியூட்டைலமோனியம் ஐதராக்சைடு (Tetrabutylammonium hydroxide) என்பது (C4H9)4NOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Bu4NOH என்ற சுருக்க வாய்ப்பாட்டினாலும் TBAOH அல்லது TBAH என்ற சுருக்கப் பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. தண்ணீர் அல்லது ஆல்ககாலில் கரைசலாக்கப்பட்டு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியலில் பொதுவான ஒரு காரமாக இதைக் கருதுகிறார்கள். KOH மற்றும் NaOH, போன்ற வழக்கமான கனிம வேதியியல் காரங்களுடன் தொடர்புடைய காரமாகவும் இது கருதப்படுகிறது. கரிமக் கரைப்பான்களில் டெட்ரா பியூட்டைலமோனியம் ஐதராக்சைடு நன்றாகக் கரையும்[1].

டெட்ரா பியூட்டைலமோனியம் ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ரா பியூட்டைலமோனியம் ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
2052-49-5 Y
ChEMBL ChEMBL1078154 Y
ChemSpider 2005872 Y
InChI
  • InChI=1S/C16H36N.H2O/c1-5-9-13-17(14-10-6-2,15-11-7-3)16-12-8-4;/h5-16H2,1-4H3;1H2/q+1;/p-1 Y
    Key: VDZOOKBUILJEDG-UHFFFAOYSA-M Y
  • InChI=1/C16H36N.H2O/c1-5-9-13-17(14-10-6-2,15-11-7-3)16-12-8-4;/h5-16H2,1-4H3;1H2/q+1;/p-1
    Key: VDZOOKBUILJEDG-REWHXWOFAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2723671
  • [OH-].CCCC[N+](CCCC)(CCCC)CCCC
பண்புகள்
C16H37NO
வாய்ப்பாட்டு எடை 259.48 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வினைகள்

தொகு

ஆப்மான் நீக்க வினையில் தனிமைநிலை Bu4NOH இன் தூண்டுதலால் Bu3N மற்றும் 1-பியூட்டீன் ஆகியன உருவாகின்றன. Bu4NOH கரைசல்களில் குறிப்பாக Bu3N கலந்து அசுத்தமடைவதும் இக்காரணத்தினாலேயே ஆகும் [1]. பல்வேறு வகையான அமிலங்களுடன் டெட்ரா பியூட்டைலமோனியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்துவதால் தண்ணீரும் பிற பியூட்டைலமோனியம் உப்புகளும் உருவாகின்றன.

Bu4NOH + HX → Bu4NX + H2O

பயன்பாடுகள்

தொகு

Bu4NOH ஒரு வலிமையான காரமாகும். ஆல்கைலேற்றம், புரோட்டான் நீக்கம் போன்ற வினைகளில் நிலைமாற்ற நிகழ்வுகளுக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள். அமீன்களின் பென்சைலேற்ற வினை, குளோரோஃபார்மிலிருந்து டைகுளோரோகார்பீன் உருவாக்கம் போன்றவை இத்தகைய குறிப்பிட்ட சில வினைகளாகும்.

பல்வகையான கனிம அமிலங்களுடன் Bu4NOH சேர்த்து நடுநிலையாக்கல் வினையின் மூலம் இணைகார கொழுப்புவிரும்பி உப்புகள் தயாரிக்கமுடியும். உதாரணமாக டைசோடியம் பைரோபாசுப்பேட்டுடன் (Na2H2P2O7) Bu4NOH சேர்த்து நடுநிலையாக்கினால் கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடிய (Bu4N)3[HP2O7] கிடைக்கிறது[2]. இதேபோல ஐதரோபுளோரிக் அமிலத்துடன் Bu4NOH சேர்த்து நடுநிலையாக்கினால் நீரற்ற Bu4NF உருவாகிறது. இவ்வுப்பு கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. மேலும், சிலைல்நீக்க வினைகளில் பயனுள்ளதாக உள்ளது[3].


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Bos, M. E. "Tetra-n-butylammonium Hydroxide" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289.
  2. Woodside, A. B.; Huang, Z.; Poulter, C. D. (1993). "Trisammonium Geranyl Diphosphate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv8p0616. ; Collective Volume, vol. 8, p. 616
  3. Kuwajima, I.; Nakamura, E. Hashimoto, K. (1990). "Silylation of Ketones with Ethyl Trimethylsilacetate: (Z)-3-Trimethylsiloxy-2-Pentene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV7P0512. ; Collective Volume, vol. 7, p. 512