டென்னிஸ் லில்லி
டென்னிஸ் கீத் லில்லி (Dennis Keith Lillee ), (பிறப்பு: ஜூலை 18, 1949) ஒரு முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார், "அவரது தலைமுறையின் சிறந்த விரைவு வீச்சாளர்" என்று கருதப்படுகிறார்.[1] லில்லி தனது அதீத உணர்வு வெளிப்பாடு மற்றும் விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை போராடும் குணம் போன்றவற்றிற்காக ரசிகர்களிடையே புகழ் பெற்றவர்.
இவர் இதுவரை 70 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 905 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73* ஓட்டங்கள் எடுத்தார்.63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 240 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73* ஓட்டங்கள் எடுத்தார். 198 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2,337 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73* ஓட்டங்கள் எடுத்தார். 102 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 382 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்கள் எடுத்தார்
17 டிசம்பர் 2009 அன்று, லில்லி ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .[2] இந்தியாவின் சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளைக்கும் பங்களித்துள்ளார்.
கிரிக்கெட் வாழ்க்கை
தொகு620 வயதில், லில்லி 1969-70 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் .லில்லி தனது முதல் ஆண்டில் 32 இழப்புகளை வீழ்த்தி WA இன் முன்னணி இழப்புகளைக் கைப்பற்றியவர் ஆவார்.[3] ஆண்டின் முடிவில், ஆஸ்திரேலிய இரண்டாவது அணியுடன் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 16.44 எனும் சராசரியில் 18 இழப்புகளை வீழ்த்தினார்.[4]
ஓய்வுக்குப் பிறகு
தொகுலில்லி 1987 – 88 இல் டாஸ்மேனியாவுக்காக முதல் தரத் துடுப்பட்டப் போட்டிகளில் விளையாடுவதற்காக அணிக்குத் திரும்பி வந்தார், தனது முதல் பந்து வீச்சில் ஒரு இழப்பினை எடுத்தார்.[5] 1988 ஆம் ஆண்டில், கணுக்காலில் பலத்த காயம் அடைவதற்கு முன்பு, அவர் இங்கிலாந்து கவுண்டி அணியான நார்தாம்ப்டன்ஷையர் துடுப்பாட்ட அணி சார்பாக எட்டு போட்டிகளில் விளையாடினார்.[6] தனது சமீபத்திய சுயசரிதையில், அப்போதைய தலைவர் ஆலன் பார்டர் பரிந்துரையின் பேரில் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடியதாக லில்லி கூறினார்.[7]
1990 களில் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இளம் பந்து வீச்சாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிப்பதற்காக லில்லி தன்னை அர்ப்பணித்துள்ளார்.குறிப்பாக பிரட் லீ, ஷான் டைட் மற்றும் மிட்செல் ஜான்சன் . 1987 முதல் அண்மையில் வரை வேகப்பந்து வீச்சாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக இந்தியாவின் சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பனியாற்றுகிறார். லிலாக் ஹில்லில் ஏசிபி சனாதிபதியின் லெவன் போட்டியில் லில்லி 1999 ஆம் ஆண்டு வரை போட்டி துடுப்பாட்டத்தினை விளையாடினார். தனது இறுதி ஆட்டத்தில் அவர் மூன்று இழப்புகளை வீழ்த்தி தனது மகன் ஆதாமுடன் விளையாடினார்.
தரைவிரிப்புகள், வேலை பூட்ஸ், குளுக்கோசமைன் மாத்திரைகள் போன்ற முதுமை மூட்டழற்சி அறிகுறிகள் மற்றும் சூரிய சக்தி நிறுவனங்கள் போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் அவர் தோன்றியுள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ BBC Sport: Ashes legends - Dennis Lillee. Retrieved 18 September 2007.
- ↑ "Dennis Lillee inducted into the ICC Cricket Hall of Fame". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
- ↑ "Bowling in Sheffield Shield 1969/70 (Ordered by Wickets)".
- ↑ Cricinfo: Australia in New Zealand 1969–70 tour statistics.
- ↑ "Tasmania v South Australia at Devonport, 15-18 Jan 1988". Static.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
- ↑ Cricinfo.com: Knowing when to call it a day. Retrieved 18 September 2007.
- ↑ Lillee (2003), pp 207–209.
- Arnold, Peter; Wynne-Thomas, Peter (2006). The Complete Encyclopedia of Cricket. Dubai: Carlton Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84442-310-1.
- Brayshaw, Ian (1983). Caught Marsh, Bowled Lillee. Australian Broadcasting Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-642-97447-0.
- Hogg, Rodney; Anderson, Jon. Speed Thrills: Cricket's fastest ever bowlers on bouncers, batsmen and serious pace. Melbourne: Affirm Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781922213709.