டென்மார்க்கின் இரண்டாம் மார்கரீத்

இரண்டாம் மார்கரீத் (டேனிய மொழி: Margrethe 2., பலுக்கல் [mɑˈɡʁæːˀdə]; முழுப்பெயர்: மார்கரீத் அலெக்சாண்டிரின் போர்கில்டர் இன்கிரிடு ; பிறப்பு 16 ஏப்ரல் 1940) டென்மார்க்கின் அரசி ஆவார், அதேபோல் டென்மார்க் தேவாலயம் உச்ச அதிகாரம் படைத்தவராகவும் மற்றும் டேனிஷ் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியும் ஆவார். இவர் குலுக்ஸ்பெர்க்ஸ் என்ற அரச குடும்பத்தில் பிறந்தவர். இந்த அரச குடும்பம் வடக்கு ஜெர்மனியைச் சார்ந்தது. இவர் டென்மார்கின் ஒன்பதாம் பிரடெரிக் மற்றும் சுவீடனின் இன்கிரிடுக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவர் தன் தந்தை மறைவுக்கு பின் 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாள் அரியணை ஏறினார். இவர் அதற்கு முன்பே 1953 ஆம் ஆண்டு இவர் தந்தை மூலமாக அரச வாரிசாக அறிவிக்கப்பட்டார். டேனிஷ் அரசியலமைப்பு சட்டம் பெண் வாரிசுகளுக்கு அரியணை உரிமை வழங்குகிறது. டென்மார்கின் முதலாம் மார்கரீத் அரசி 1375-1413 ஆம் ஆண்டு ஆட்சி காலத்திற்கு பின் வந்த முதல் அரசி ஆவார். 1967 ஆம் ஆண்டு ஹென்றி டி லபோர்டி மோன்பிசாட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் பிரடெரிக், இளவரசர் சோச்சிம் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் டேனிஷ் அரியணை ஏறும் போது இவருக்கு வயது 48 ஆகும். இவரே டேனிஷின் இரண்டாவது அதிக நாள் ஆட்சியாளர் ஆவார்.

இரண்டாம் மார்கரீத்
மே மாதம் 2012 ன் போது
டென்மார்க்கின் அரசி
ஆட்சிக்காலம் 14 ஜனவரி 1972 – முதல்
ஒன்பதாம் பிரடெரிக்
அரச வாரிசு இளவரசர் பிரடெரிக்
கணவன் ஹென்றி டி லபோர்டி மோன்பிசாட்
வாரிசு
இளவரசர் பிரடெரிக்

இளவரசர் சோச்சிம்

முழுப்பெயர்
மார்கரீத் அலெக்சாண்டிரின் போர்கில்டர் இன்கிரிடு
குடும்பம் குலுக்ஸ்பெர்க்ஸ்[1]
தந்தை ஒன்பதாம் பிரடெரிக்
தாய் சுவீடனின் இன்கிரிடு
பிறப்பு 16 ஏப்ரல் 1940 (1940-04-16) (அகவை 80)
Amalienborg, கோபனாவன், டென்மார்க்
கையொப்பம்

மேற்கோள்கள்தொகு

  1. "150 years of the House of Glücksborg". பார்த்த நாள் 25 October 2014.