டெய்சி இராணி

இந்திய நடிகை

டெய்சி இராணி (பிறப்பு: 1950) இந்தியாவைச் சேர்ந்த இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்பட நடிகை ஆவார்.1950கள் மற்றும் 1960களில் மிகப்பிரபலமான குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர். பந்திஷ் (1955), ஏக் ஹி ராஸ்தா (1956), நயா தார் (1957), ஹம் பஞ்சி ஏக் தால் ஹே (1957),ஜெயிலர் (1958), கைதி நநமபர்.911 (1959) மற்றும் து உஸ்தாத் (1959) போன்ற திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நடிகையாக இருக்கிறார். துணை நடிகையாக 1971 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டி பட்டாங் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மிக பிரபலமான தொலைக்காட்சி தொடரான சாரத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.

டெய்சி இராணி
2012 ல் ஒரு இந்தி தரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வில் டெய்சி இராணி
பிறப்பு1950 (அகவை 73–74)
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
கே. கே. சுக்லா (1971)
பிள்ளைகள்3
உறவினர்கள்ஹனி இராணி (தங்கை)

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

சொராட்டியரிய குடும்பத்தில் பிறந்த இராணியின் தாய் மொழி குஜராத்தி. மூன்று சகோதரிகளில் மூத்தவரான இவருடைய மற்ற இரண்டு தங்கைகளின் பெயர் ஹனி இரானி மற்றும் மேனகா ஈரானி ஆவர். அவருடைய இளைய தங்கை ஹனி இராணியும் குழந்தை நட்சத்திரம் ஆவார். திரைக்கதை எழுத்தாளர் ஜாவேத் அக்தரின் மனைவியான ஹனி இராணி பர்கான் அக்பர் மற்றும் சோயா அக்தரின் தாய் ஆவார். டெய்சியின் மற்றொரு தங்கையாக சோயா சண்டை திரைப்பட தயாரிப்பாளர் கம்ரான் கானின் மனைவியாவார்.[1] மேலும் இவர், திரைப்பட தயாரிப்பாளர்கள் என சஜித் கான் மற்றும் பாரா கானின் அன்னை ஆவார்.

21 ஜனவரி 1971 ஆம் ஆண்டு திரைக்கதை எழுத்தாளர் கே. கே சுக்லா (இந்து பிராமின்) என்பவரை தனது 21ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய டெய்சி இராணியின் நடிப்பு திருமணத்திற்கு பின்பு முடிவுக்கு வந்தது. பின்னர் அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. தனது குடும்பம், கணவரை கவனித்துக் கொள்வதிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனின் பெயர் கபீர், வர்ஷா மற்றும் ரித்து இரண்டு மகள்கள். தனது குழந்தைகள் எவரையும் பொழுதுபோக்கு தொழிலில் ஈடுபடுத்தவில்லை. சொராட்டிரிய குடும்பத்தில் பிறந்து ஒரு இந்துவை திருமணம் செய்துகொண்டாலும் பின்னாளில் டெய்சி கிருத்தவ மதத்தின் மீது பற்று கொண்டு 1975 ஆம் ஆண்டு மும்பையில் புது வாழ்வு கூட்டாளர் குழுவின் உறுப்பினரானார்.

1957 இல் ஹம் பாஞ்சி ஏக் தால் கி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தனது ஆறாவது வயதில் பாதுகாவலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக 2018 ஆம் ஆண்டு என்டிடிவி தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.[2]

தொழில் தொகு

இந்தி சினிமாவின் பொன்விழா காலமான 1950கள் முதல் 1970 கள் வரை சில குழந்தை நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நன்கு அறிமுகமாகி இருந்தனர். அவர்களுள் இராணி சகோதரிகளான டெய்சியும் ஹனியும் முக்கிமானவா்களாவர்.. இரு சகோதரிகளும் தனியாகவும் கூட்டாகவும் பல வெற்றிப் படங்களில் நடித்தனர்.குழந்தைகளுக்கு சூட்டும் அளவிற்கு இருவரும் வீட்டுப்பெயர்களாக மாறினர்.[3] கதைகளில் இவா்களின் கதாபாத்திரத்தை சேர்க்க அல்லது திரைப்படங்களில் அவர்களின் காட்சிகளை அதிகரிக்க மீண்டும் எழுதப்பட்டன, மேலும் மக்களைக் கவர திரைப்பட விளம்பரங்களில் இவா்களை இடம்டிபறச்செய்து விளம்பரப்படுத்தப்பட்டனர். இருவரும் ஒன்றாகவோ அல்லது தனியாகவோ பந்திஷ், ஜக்தே ரஹோ, பாய் பாய், றயா தௌர், ஹம் பாஞ்சே ஏக் தால் ஹே, முசாபிர், கைதி நெ.9211, துனியா நா மானே, து உஷ்தாது, தூல் கா ஃபூல், சூரத் அவுர் சீரத், மற்றும் சணடி கி திவார் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர். தனது மூத்த தங்கை ஹனி யை விட இராணி மிகப் பிரபலமாக இருந்தார்.

1971ல் திருமணத்திற்குப் பின் தனது நடிப்பு கைவிட்ட இராணியின் கடைசிப்படம் 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த கடி பதாங் ஆகும். சில காலம் நாடகங்களில் பணிபுரிந்த அவர் நடிப்பு பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார். 90களின் ஆரம்பத்தில் தனது கணவர் இறப்பிற்கு பின்பு தேக் பாய் தேக் போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார் .1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆஷ்தா 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கியா ஹேனா மற்றும் சராரத் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[4]

2010 ல் தனது மருமகன் சஜித் கானின் ஹவுஸ்புல் 2012 ல் பேலா சேகல் இயக்கத்தில் மருமகள் பாரா கான் நடித்த ஷிரின் பர்கத் கி தோ நிகல் படத்திலும் நடித்திருக்கிறார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "'I told Shah Rukh." The Telegraph. 7 October 2007. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
  2. "Actress Daisy Irani Reveals She Was Raped At 6 By Man Appointed As Her 'Guardian'". NDTV.com.
  3. Rana A. Siddiqui (22 May 2003). "Honey Irani... happy and sweet". The Hindu இம் மூலத்தில் இருந்து 18 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618171859/http://www.hindu.com/thehindu/mp/2003/05/22/stories/2003052200680200.htm. பார்த்த நாள்: 16 December 2013. 
  4. "Lost and found: Thirty newsmakers from the pages of Indian history and where they are now: Cover Story". India Today. 3 July 2006. பார்க்கப்பட்ட நாள் 16 December 2013.
  5. "I had five bottles of beer: Daisy Irani – Hindustan Times". 28 June 2012. Archived from the original on 3 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்சி_இராணி&oldid=3930554" இலிருந்து மீள்விக்கப்பட்டது