டெஸ்பெரேஸன்
டெஸ்பெரேஸன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் டோம் ஸ்கெரிட், ரோன் பேர்ல்மேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டெஸ்பெரேஸன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மிக் கரிஷ் |
தயாரிப்பு | புரூஸ் டன் மிக் கரிஷ் ஸ்டீபன் கிங் மார்க் செனெட் கெல்லி வான் ஹோர்ன் |
கதை | ஸ்டீபன் கிங் |
நடிப்பு | டோம் ஸ்கெரிட் ரோன் பேர்ல்மேன் ஸ்டீவன் வெப்பர் அன்னபெத் கிஷ் |
விநியோகம் | ABC (அமெரிக்கா) |
வெளியீடு | மே 23, 2006 (அமெரிக்கா) |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $12 மில்லியன் (அமெரிக்க டாலர்கள்) |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சீனர்கள் அடிமைகளாக பணியமர்த்தப்பட்ட காலத்தின் பொழுது அமெரிக்காவில் நடைபெற்ற சுரங்கவேலைகளிலிருந்து விடுவிக்கப்படும் ஆவிஉருவம் உயிருள்ள அனைத்து விலங்கினங்களிலும் புகுந்து மனிதர்களைப் பழிவாங்கிவருகின்றது. பாலைவனத் தோற்றம் கொண்ட பகுதியினுள் குடிகொண்டிருந்த ஆவி மனித உருவத்தினைப்பெற்று அங்குவரும் ஒவ்வொரு மனிதர்களையும் சிறையில் அடைத்து கொலைசெய்கின்றது.இதனைத் தெரிந்து கொள்ளும் அங்கு ஆவியால் கடத்தி வரப்பட்டவர்கள் எவ்வாறு அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர் என்பது திரைக்கதை முடிவாகும்.