டேவிட் எச். இலைத்

பேராசிரியர் டேவிட் இலைத் David Lyth(ஜூன் 21,1940) இலங்காசுட்டர் பல்கலைக்கழகத்தில் துகள் அண்டவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். தொடக்கப் புடவி அண்டவியல் மற்றும் அண்டவியல் உப்புதல் குறித்த 165 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இரண்டு புத்தகங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.[1]

ஆராய்ச்சி தொகு

உப்புதல் படிமக் கட்டமைப்புத் துறையில் அவர் செய்த பணிக்காகவும் , உப்புதல் படிமங்களின் நோக்கீட்டு விளைவுகளுக்காகவும் அவர் குறிப்பிடப்படுகிறார். 1997 ஆம் ஆண்டில் அவர் இலைத் பிணைப்பைக் கண்டுபிடித்தார் , இது சி. எம். பி. யில் உள்ள சிற்றலைவுகளின் டென்சர் - அளவுகோல் விகிதத்தை உப்புதலின்போது உப்புதற்புலத்தின் மாறுபாட்டுடன் உறவுபடுத்துகிறது.[2][3] 2001 ஆம் ஆண்டில் போர்ட்சுமவுத் பல்கலைக்கழகத்தின் டேவிட் வாண்டுசுவுடன் இணைந்து கர்வாட்டடன் காட்சியை அவர் முன்மொழிந்தார்.[1] அவருக்கு 2012 ஆம் ஆண்டில் ப்ரெடுடஆயில் பதக்கமும் பரிசும் வழங்கப்பட்டது.

புத்தகங்கள் தொகு

  • அண்டவியல் உப்புதல்,பேரியல் கட்டமைமைப்பு (2000) ஆந்திரூ இலிடில் ISBN உடன்
  • முதற்கட்ட அடர்த்தி சிற்றலைவு (2009) - ஆந்திரூ இலிடில் ISBN
  • இயற்பியலாளர்களுக்கான அண்டவியல் (2016)
  • புடவியின் வரலாறு (2016)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://davidhlyth.co.uk
  2. Easther, Richard; Kinney, William H.; Powell, Brian A. (2006). "The Lyth Bound and the end of inflation". Journal of Cosmology and Astroparticle Physics 2006 (8): 004. doi:10.1088/1475-7516/2006/08/004. Bibcode: 2006JCAP...08..004E. https://cds.cern.ch/record/921729. 
  3. Efstathiou, George; Mack, Katherine J. (2005). "The Lyth bound revisited". Journal of Cosmology and Astroparticle Physics 2005 (5): 008. doi:10.1088/1475-7516/2005/05/008. Bibcode: 2005JCAP...05..008E. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_எச்._இலைத்&oldid=3769900" இலிருந்து மீள்விக்கப்பட்டது