டேவிட் வாரன்

டேவிட் ரொனால்ட் டி மே வாரன் (David Ronald de Mey Warren, மார்ச் 20, 1925 - ஜூலை 19, 2010) என்பவர் விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் விமான தரவு பதிவியைக் கண்டுபிடித்தவரும் ஆஸ்திரேலிய அறிவியலாளரும் ஆவார்.

டேவிட் வாரன்
David Warren
Dave Warren with BlackBox Prototype.jpg
தான் கண்டுபிடித்த கருப்புப் பெட்டியுடன் டேவிட் வாரன்
பிறப்புமார்ச்சு 20, 1925(1925-03-20)
குரூட் ஐலன்ட், வட மண்டலம், ஆஸ்திரேலியா
இறப்பு19 சூலை 2010(2010-07-19) (அகவை 85)
மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
தேசியம்ஆஸ்திரேலலியர்
கல்வி கற்ற இடங்கள்சிட்னி பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவிமான தரவு பதிவி

வாரன் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் குரூட் ஐனட் என்ற தீவில் ஐரோப்பிய வம்சாவழிப் பெற்றோருக்கு முதலாவது பிள்ளையாகப் பிறந்தார். டனது ஆரம்பக் கல்வியை தாஸ்மானியாவிலும், பின்னர் சிட்னி டிரினிட்டி கிரம்மர் பள்ளியிலும் பயின்றார். இவரது தந்தை 1934 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார்[1]. [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரியானார்[2].

1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார்[3]. 1953 இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்த போது அவர் விமானத் தரவுப் பதிவு செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்தார். விமான விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பினார்[3]. விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார். 1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_வாரன்&oldid=3214747" இருந்து மீள்விக்கப்பட்டது