டைகுளோரோகார்பீன்
டைகுளோரோகார்பீன் (Dichlorocarbene) என்பது CCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வினைத்திறன் மிக்க குறுகிய வாழ்நாள் இடைநிலை வேதிப்பொருளான இதை தனித்துப் பிரிக்க இயலவில்லை என்றாலும் கரிமவேதியியலில் ஒரு பொதுவான இடைநிலைச் சேர்மமாக கருதப்படுகிறது. குளோரோஃபார்ம் சேர்மத்தைப் பயன்படுத்தி டைகுளோரோகார்பீன் தயாரிக்கப்படுகிறது. டையாகாந்தப்பண்பைக் கொண்டிருக்கும் இந்த மூலக்கூறு பிற பிணைப்புகளுடன் விரைவாக உட்புகுந்து இணைகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டைகுளோரோகார்பீன் | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
டைகுளோரோமெத்திலிடீன் | |||
வேறு பெயர்கள்
கார்பன்(II) குளோரைடு
கார்பன் டைகுளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
1605-72-7 | |||
Beilstein Reference
|
1616279 | ||
ChEBI | CHEBI:51370 | ||
ChemSpider | 4937404 | ||
Gmelin Reference
|
200357 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | டைகுளோரோகார்பீன் | ||
பப்கெம் | 6432145 | ||
| |||
பண்புகள் | |||
CCl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 82.91 g·mol−1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் வினைத்திறம் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுபொதுவாக குளோரோஃபார்முடன் பொட்டாசியம் மூவிணைய-பியூட்டாக்சைடு அல்லது சோடியம் ஐதராக்சைடு போன்ற காரங்களில் ஒன்றை சேர்த்து வினைபுரியச் செய்து டைகுளோரோகார்பீன் தயாரிக்கப்படுகிறது. பென்சைல்டிரையீத்தைலமோனியம் புரோமைடு போன்ற ஒரு நிலை மாற்றும் வினையூக்கி கனிம நிலை ஐதராக்சைடை கரிமச் சேர்ம நிலைக்கு மாற்றுகிறது.
- HCCl3 + NaOH → CCl2 + NaCl + H2O
பிற வினையாக்கிகளும் வழிகளும்
தொகுடைகுளோரோகார்பீன் தயாரிப்பதற்கு உதவும் மற்றொரு முன்னோடிச் சேர்மம் எத்தில் அசிட்டேட்டு ஆகும். சோடியம் மெத்தாக்சைடுடன் சேர்த்து சூடாக்கும்போது இது CCl2.[1] சேர்மத்தை வெளியிடுகிறது.
பீனைல்(டிரைகுளோரோமெத்தில்)பாதரசம் வெப்பத்தால் சிதைவடைந்தும் CCl2.[2]
- PhHgCCl3 → CCl2 + PhHgCl
இருளில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படும் டைகுளோரோடையசிரின் ஒளிச்சிதைவு அடைந்து டைகுளோரோகார்பீனையும் நைட்ரசனையும் கொடுக்கிறது[3].
டைகுளோரோடையசிரினிலிருந்து டைகுளோரோகார்பீன்[4] |
---|
கார்பன்டெட்ராகுளோரைடை மக்னீசியத்துடன் சேர்த்து ஒலிவேதியியல் முறையில் குளோரின் நீக்கம் செய்தும் டைகுளோரோகார்பீன் தயாரிக்கலாம் [5]. எசுத்தர்களுக்கும் கார்பனைல் சேர்மங்களுக்கும் இத்தயாரிப்பு முறை உகந்ததாகும். ஏனெனில் இம்முறையில் வலிமையான காரங்கள் பயன்படுத்தப்படவில்லை.
வினைகள்
தொகுஆல்க்கீன்களுடன்
தொகுடைகுளோரோகார்பீன் ஆல்க்கீன்களுடன் முறையான [1+2]வளையகூட்டு வினையில் ஈடுபட்டு இரட்டை டைகுளோரோவளையபுரோப்பேன்களைக் கொடுக்கிறது. இவற்றை வளையபுரோப்பேன்களாக ஒடுக்கலாம் அல்லது இரட்டை ஆலைடு நீராற்பகுப்பு மூலம் நீராற்பகுக்கலாம். மேலும் டைகுளோரோவளையபுரோப்பேன்களை சிகாட்டபோல் மறுசீராக்கல் வினையின் மூலம் அல்லீன்களாகவும் மாற்றலாம்.
பீனால்களுடன்
தொகுரீமர்-டைமான் வினையில் டைகுளோரோகார்பீன் பீனால்களுடன் வினைபுரிந்து ஆர்த்தோ-பார்மைலேற்ற வகை விளைபொருளைக் கொடுக்கிறது [6]. பீனாலில் தொடங்கி சாலிசிலால்டிகைடு தயாரிப்பது இதற்கு உதாரணமாகும்.
அமீன்களுடன்
தொகுகார்பைலமீன் வினையில் டைகுளோரோகார்பீன் ஓர் இடைநிலை விளைபொருளாகும். இம்மாற்றத்தில் முதல்நிலை அமீனுடைய டைகுளோரோமெத்தேன் கரைசல் குளோரோஃபார்முடன் நிலை மாற்றும் வினையூக்கியின் முன்னிலையில் சிறிதளவு சோடியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. மூவினைய பியூட்டைல் ஐசோசயனைடு தயாரிப்பு விவரிக்கப்பட்டுள்ளது :[7]
- Me3CNH2 + CHCl3 + 3 NaOH → Me3CNC + 3 NaCl + 3 H2O.
வரலாறு
தொகுகுளோரோஃபார்மை CCl2.HCl என்ற சேர்மமாக கருதிய ஆண்டன் கியுத்தர் 1862 ஆம் ஆண்டு டைகுளோரோகார்பீனை ஒரு வினைத்திறன் இடைநிலை வேதிப்பொருளாக முதன்முதலில் முன்மொழிந்தார் [8]. 1950 இல் ஐன் இதை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தினார் [9]. 1954 ஆம் ஆண்டு வில்லியம் வோன் எக்கெர்சு தோய்ரிங் குளோரோஃபார்மிலிருந்து தொகுப்பு முறையில் டைகுளோரோகார்பீனைத் தயாரித்தார் [10].
தொடர்புடைய வினைகள்
தொகுஆல்க்கீன்களுடன் மக்னீசியம் அல்லது சோடியம் உலோகத்தைச் சேர்த்து டைகுளோரோகார்பீனை அல்லீன்களாக மாற்றும் சங்கிலி நீட்சி வினை தோய்ரிங்-லாபிளேம் அல்லீன் தொகுப்பு வினையில் நிகழ்கிறது. இதே வரிசை சிகாட்டெபோல் மறுசீராக்கல் வினை மூலம் வளையபென்டாடையீன் தயாரிக்கும் வினையிலும் நிகழ்கிறது. டைபுரோமோகார்பீன் (CBr2.) நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ளது.
குளோரோகார்பீன்
தொகுடைகுளோரோகார்பீனுடன் தொடர்புடைய சேர்மமான குளோரோகார்பீனை மெத்தில்லித்தியம் மற்றும் டைகுளோரோமெத்தேன் ஆகியனவற்றை வினைப்படுத்தி தயாரிக்கலாம். சிபைரோபென்டாடையீன் தயாரிக்க இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1,6-Methano[10]annulene". Organic Syntheses 54: 11. 1974. doi:10.15227/orgsyn.054.0011.
- ↑ "Phenyl(trichloromethyl)mercury". Organic Syntheses 46: 98. 1966. doi:10.15227/orgsyn.046.0098.
- ↑ Gaosheng Chu, Robert A. Moss, Ronald R. Sauers (2005). "Dichlorodiazirine: A Nitrogenous Precursor for Dichlorocarbene". J. Am. Chem. Soc. 127 (41): 14206–14207. doi:10.1021/ja055656c. பப்மெட்:16218614.
- ↑ a) Starting from phenol reaction with cyanogen bromide to phenyl cyanate b) hydroxylamine reaction to the N-hydroxy-O-phenylisourea c) elevate hydroxyl group to leaving group by reaction with mesyl chloride to the mesylate d) intramolecular ring closure with sodium hypochlorite to the diazirine e) nitration with nitronium tetrafluoroborate f) nucleophilic substitution with caesium chloride, tetrabutylammonium chloride in ionic liquid
- ↑ A Facile Procedure for the Generation of Dichlorocarbene from the Reaction of Carbon Tetrachloride and Magnesium using Ultrasonic Irradiation Haixia Lin, Mingfa Yang, Peigang Huang and Weiguo Cao Molecules 2003, 8, 608-613 Online Article
- ↑ Wynberg, Hans (1960). "The Reimer-Tiemann Reaction". Chemical Reviews 60 (2): 169–184. doi:10.1021/cr60204a003.
- ↑ Gokel, G.W.; Widera, R.P.; Weber, W.P. (1988). "Phase-transfer Hofmann carbylamine reaction: tert-butyl isocyanide". Organic Syntheses 55: 232. doi:10.15227/orgsyn.055.0096.
- ↑ Ueber die Zersetzung des Chloroforms durch alkoholische Kalilösung Annalen der Chemie und Pharmacie Volume 123, Issue 1, Date: 1862, Pages: 121-122 A. Geuther எஆசு:10.1002/jlac.18621230109
- ↑ Carbon Dichloride as an Intermediate in the Basic Hydrolysis of Chloroform. A Mechanism for Substitution Reactions at a Saturated Carbon Atom Jack Hine J. Am. Chem. Soc., 1950, 72 (6), pp 2438–2445 எஆசு:10.1021/ja01162a024
- ↑ The Addition of Dichlorocarbene to Olefins W. von E. Doering and A. Kentaro Hoffmann J. Am. Chem. Soc.; 1954; 76(23) pp 6162 - 6165; எஆசு:10.1021/ja01652a087
புற இணைப்புகள்
தொகு- Addition of dichlorocarbene to 2-methyl-1-buten-3-yne, laboratory procedure
- [1] பரணிடப்பட்டது 2020-10-18 at the வந்தவழி இயந்திரம் English translation of 1969 Polish patent on preparation of dichloropropane derivatives